பெண்களுக்குக் குரல் கொடுத்த பிரிட்டீஷ் நாவலாசிரியர் (அக் 27, 2018)

Me Too – மூலம் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பெண்கள் பத்திரிகையில் ‘Me Too’ குறித்து சாதக பாதகங்களை என்னிடம் கருத்து கேட்டார்கள். அதுகுறித்து ஒரு ஆர்டிலாகவே எழுதிக்கொடுத்துள்ளேன். அதில் இருந்து ஒருசில கருத்துக்கள்…

//பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான வில்லியம் கோல்டிங் (1911-1993) எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது. அதில் பெண்களைப் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கள் ஆண்களை மட்டும் அல்ல பெண்களையே யோசிக்க வைக்கும் விதமாக இருந்தது.

‘பெண்கள் ஆணுக்கு இணை என்று சொல்லிக்கொள்வதுகூட தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதைப் போன்ற உவமானம் தான். பெண்கள் ஆண்களைவிட பல மடங்கு உயர்வானவள். அவளிடம் கொடுக்கப்படும் எதையும் உயர்வானதாக்கி உருவாக்கிக்கொடுக்கும் சக்திவாய்ந்தவள்.

அவளிடம் மளிகை சாமான்கள் வாங்கிக்கொடுத்தால் அருமையான விருந்து சமைத்துக்கொடுப்பாள்.

கற்களால் ஆன வீட்டை அமைத்துக்கொடுத்தால் அன்பும், குதூகலமும் தவழும் இல்லமாக மாற்றி அமைத்துக்கொடுப்பாள்.

உங்கள் புன்னகையைக் கொடுத்தால், அவள் தன் இதயத்தைக் கொடுப்பாள்.

உங்கள் விந்தணுக்களைக் கொடுத்தால் கருவாக்கி பொக்கிஷமாக காப்பாற்றி குழந்தையாக்கித் தருவாள்.

இப்படி அவளிடம் கொடுக்கப்படும் எதையும் அவள் அப்படியே வைத்திருப்பதில்லை. அதை பல மடங்காகப் பெருக்கித் திருப்பித்தரும் வல்லமை வாய்ந்தவள்.

ஆகவே, அவளிடம் குப்பையைக் கொடுத்தால் அவளிடம் இருந்து டன் டன்னாக கழிவைப் பெற்றுக்கொள்ள தயாராக இருங்கள்…’

பெண்களிடம் காண்பிக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் அவளிடம் இருந்து திரும்ப எப்படி பிரமாண்டமாகி வெளிப்படும் என்பதை விவரிக்க இதைவிட அருமையான சிந்தனையை இதுவரை நான் படித்திருக்கவில்லை.

வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும், வன்மத்தையும் பெண்களிடம் காட்டினால் என்ன ஆகும் எனும் வில்லியம் கோல்டிங்கின் வார்த்தைகளை Me Too  நிரூபணம் செய்யத் தொடங்கிவிட்டது…//

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
அக்டோபர் 27, 2018

 

(Visited 98 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon