My 26 in Compcare 26 (அக் 26, 2018)

காம்கேர்  26 நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்…

காம்கேரில் நேற்று நடந்த மீட்டிங்கில்..

என் 26 வயதில் காம்கேர் மூலம் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என கேட்டு என்னுடன் பணியாற்றும்  ஸ்டாஃப்கள் சிலர் நினைவுகளை கிளறிவிட

எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கொள்ளவும், என் ஸ்டாஃப்களுக்கு பதிலளிக்கவும் நானும் சற்று திரும்பிப் பார்த்தேன்…

உங்கள் பார்வைக்காகவும்…

என் 26 வயதில்…

நான் எழுதிய முதல் தமிழ் புத்தகம் –  இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்

முதல் ஆங்கிலப் புத்தகம் – Easy Way to Learn C Language

முதல் அனிமேஷன் சிடி –  தாத்தா பாட்டி கதைகள்

C & C++  மூலம் முதல் கார்ட்டூன் – குரங்குகளும், யானைகளும்

முதல் பத்திரிகை நேர்காணல் – தினமலர் (சென்னை எடிஷன்)

முதல் தொலைக்காட்சி நேர்காணல் – ஜெயா டிவி – காலை மலர்

இத்தனையும் என் 26 வயதில் என்ற நினைப்பே இப்போது இந்தப் பதிவை எழுதும்போதுதான் எட்டிப் பார்க்கிறது.

‘எல்லைகளை வகுத்துக்கொண்டால் சாதிப்பதில் பிரச்சனையே இருக்காது’ (தினமலர் நேர்காணல் ஹலைட் பாயிண்ட்டைப் பார்க்கவும்) என என் 26 வயதில் சொன்னதை… (26 வயதில் எடுக்கப்பட்ட நேர்காணல் சில பல காரணங்களால் 29 வயதில் வெளியானது என்பது வேறு விஷயம்.)

காம்கேருக்கு 26 வயது ஆகும்வரை என்னால் கடைபிடிக்க முடிவதே…

போட்டிகளும் பொறாமைகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த இந்த உலகில் நான் நிலைத்து நிற்பதற்கு முழுமுதற் காரணம்.

மாதா பிதா குரு தெய்வம் அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

அன்பு சூழ் உலகு!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
அக்டோபர் 26,2018

(Visited 42 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon