சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் ‘காம்கேர்’ புத்தகங்கள் (நவ 2018)

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இடம்பெற்றுள்ளது. Hall no-7,  Stall no ZD-22

குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு)

மனதை ஃபார்மேட் செய்யுங்கள் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

‘சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சி’ இந்த வருடம் மட்டும் ஏன் இத்தனை சிறப்பாயிற்று? காரணம்… தமிழுக்கென தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மூன்றாவது பெரிய புத்தகக் கண்காட்சியான சார்ஜா புத்தகக் கண்காட்சி 37 வது வருடமாக இந்த ஆண்டு அக்டோபர் 31, 2018 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழுக்கென்று மிகப் பெரிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 30 முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அரங்கில் முதன்முறையாக தமிழ் பதிப்பகங்களும் தன் தடத்தைப் பதித்துள்ளன.

ஆயிரம் பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள் என கோலாகலமாக ஒரு திருவிழாவைப் போல நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் வெறும் புத்தகக் கண்காட்சி மட்டுமில்லாமல் புத்தக வெளியீடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், எழுத்து, கலை மற்றும் எழுத்துப்பட்டறைகள், பிரபலங்களுடன் உரையாடல்கள், கருத்தரங்கங்கள் என்று பலவிதமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள்,பிரமுகர்கள் , வாசகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்தக் கண்காட்சி தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் திருவிழாவாக அமைந்து சிறப்பிக்கிறது.

டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி, தாடகம், சிக்ஸ்த் சென்ஸ் என்ற பிரமாண்ட கூட்டணி சார்ஜாவுக்கு தமிழ் புத்தகங்களைக் கொண்டு சென்று பெருமை சேர்த்துள்ளனர்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 9, 2018

மீடியா செய்திகள்

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon