‘தன்னம்பிக்கைத் தாரகை’ – By டாக்டர் சரஸ்வதி ராமநாதன் (September 2, 2007)

தன்னம்பிக்கைத் தாரகை – By டாக்டர் சரஸ்வதி ராமநாதன்

செப்டம்பர் 2, 2007 – ம் ஆண்டு சென்னை வாணி மஹாலில் நடந்த  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கிய  டாக்டர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘தன்னம்பிக்கைத் தாரகை’ என்ற பட்டம் அளித்து கெளரவித்தார்.

டாக்டர் சரஸ்வதி ராமநாதன்…

தமிழுக்காகவே உலகம் முழுவதும் சென்று தமிழ் பரப்பி  முத்தமிழ் பேரரசி என்ற பட்டம் பெற்றவர்.

எங்கள் காம்கேர் நிறுவனம் வெளியிட்ட இராமாயணம் அனிமேஷன் சிடியில் கதை சொல்லி வாய்ஸ் கொடுத்து சிறப்பித்தவர்.

மேலும் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் மற்றும் காம்கேர் நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு தலைமை தாங்கி பெருமைப்படுத்தியவர்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக…

2007 ஆம் ஆண்டு எங்கள் பெற்றோர் பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்துடன் நாங்கள் தொடங்கிய ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளை தொடக்க விழாவில் இவர்தான் தலைமை தாங்கினார்.

சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எங்கள் பெற்றோர் குறித்த ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஒன்றரை மணி நேர ஆவணப்படத்தை  வெளியிட்டோம்.

இவர் தலைமையில் தொடங்கப்பட்ட எங்கள் அறக்கட்டளை  இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அருமையாக உரையாற்றிய இவர் எனக்கு ‘தன்னம்பிக்கை தாரகை’ என்ற பட்டம் அளித்து சிறப்பித்தார்.

இவருடன் இணைந்து…

‘வானமே எல்லை’ திரைப்படத்தில் நடித்தவரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான திரு. H. ராமகிருஷ்ணன்,

மாற்றுத்திறனாளியாக ஜோதிகா நடித்த ‘மொழி’ திரைப்படத்தில் அவரின் Sign Language க்கு  உதவிய Ability Foundation நிறுவனத்தின் தலைவருமான திருமிகு ஜெயஸ்ரீ ரவீந்தர்,

பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருந்து இப்போது ஒரு கல்லூரியின் பிரின்சிபலாக பணியாற்றி வருபவருமான  டாக்டர் R. ஜெயசந்திரன்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவர்கள் மூவருமே ஒவ்வொரு விதத்தில் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சரஸ்வதி ராமநாதனின் உரையை கேட்க விரும்புவோருக்காக இந்த லிங்க்…

https://www.youtube.com/watch?v=sqLpJ6hUbZg&t=3s

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 2, 2007

(Visited 148 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon