சேவாலயா விதைப் பிள்ளையார் கொடுத்த கீரை வகைகள்!

உண்மை படக்கதை!

  1. செப்டம்பர் 11, 2018: சேவாலயா பிள்ளையார் வீடு தேடி வந்தது.
  2. செப்டம்பர் 13, 2018: பிள்ளையார் சதுர்த்தியில்  விதை பிள்ளையாராய் அமர்ந்திருந்த எங்கள் வீட்டு பிள்ளையார்.
  3. நவம்பர் 19, 2018: விதைப் பிள்ளையார் வளர ஆரம்பித்துவிட்டார்…. சிறுகீரையாகவும், பருப்புக் கீரையாகவும் பச்சைப் பசேல் என…
  4. நவம்பர் 28, 2018: ஒரு மணிக்கு எங்கள் அப்பார்ட்மெண்ட் பணிப்பெண் ‘அம்மா பருப்புக்கீரையும், சிறு கீரையும் தொட்டில வளர்ந்திருக்கே… நான் பறிச்சிக்கவா?’ என ஆசையாய் கேட்க… நாங்களும் மிக சந்தோஷமாய் அனுமதி கொடுக்க, இதோ இன்று ஆசை ஆசையாய் வெயிலில் பறித்துக்கொண்டிருக்கிறார்…
  5. நவம்பர் 28, 2018: ஒன்றரை மணிக்கு பறித்த கீரையை கையில் எடுத்து எங்களிடம் காட்டுகிறார்.

வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வாங்கி பூஜைக்குப் பிறகு அதை ஆறு/ஏரி/கடல் என தண்ணீரில் கரைத்தோ அல்லது அப்படி முடியாவிட்டால் வீட்டில் உயரமான செல்ஃபில் வைத்துவிடுவதுதான் வழக்கம்.  இந்த வருட பிள்ளையார் சதுர்த்திப் பிள்ளையார் வீட்டில் செடியாகி கீரையாக  மாற்றம் அடைந்து எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.

நல்ல பாசிடிவ் வைப்ரேஷனாக உள்ளது. இனிவரும் காலம் நல்ல காலம் வாழ்க்கை வளம்பெறும் என ஒரு செய்தியை சொல்லுவதாக நினைக்கிறேன்.

அடுத்தடுத்த வருடங்கள் நீங்களும் விதைப்பிள்ளையார் வாங்க(கி) முயற்சித்துப் பாருங்களேன்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 28, 2018

(Visited 66 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon