நூலகங்களுக்கு நன்றி சொல்லும் நேரம்!

எங்கள் காம்கேரின் ஆரம்பகால உழைப்பையும் வளர்ச்சியையும் பற்றி ‘வரி விளம்பரமும், நான் செய்த முதல் இண்டர்வியூவும்!’ என்ற பதிவில் நேற்று எழுதி இருந்தேன்.

அதற்கு திரு. என். ரத்தினவேல் அவர்கள் எழுதி இருந்த கமெண்ட் விருது கிடைத்ததை விட மகிழ்ச்சியைக் கொடுத்தது.

காம்கேரின் பணிகள் சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள், ஆவணப்படங்கள் உருவாக்குதல், புத்தகங்கள் / இ-புக்ஸ் வெளியிடுதல் / APP உருவாக்குதல் என அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவை…

இவற்றின் மூலம் எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை  புத்தகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

என் அனுபவங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பத்திரிகை, தொலைகாட்சி, வானொலி, இணையம், பதிப்பகம், பல்கலைக்கழகங்கள் என அனைத்துக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

இவை எல்லாவற்றையும் மீறி என் உழைப்பின் பயன் பெருவாரியான மக்களைச் சென்றடைந்ததுக்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது…

நூலகங்களே…

அந்த வகையில் நேற்று கிடைத்த இந்த அங்கீகாரம் என் மனதுக்கு மிக நெருக்கமானது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 19, 2019

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon