திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்…

நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகத்துக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த வருடம் (2019) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்(Affiliated to திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. தமிழ் இலக்கியம் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது.

சென்னை பல்கலைக்கழகம்,  அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்  இவற்றில்…

கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும்,

நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களும்…

எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இ.கன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள்  இடம்பெற்று வருவதைத் தொடர்ந்து…

இந்த வருடத்தில்  என் தொழில்நுட்பப் பயணத்தில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும் சேர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

பரிந்துரை செய்த  திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர்  எஸ்.மகாதேவன் அவர்களுக்கும், கல்லூரி பாடதிட்டக் குழு தேர்வாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited
பிப்ரவரி 18, 2019

(Visited 61 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon