எழுதிச் செல்லும் விதியின் கை!

இலங்கை குண்டுவெடிப்பு

பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அன்றைய தினம் எத்தனை மகிழ்ச்சியுடன் எழுந்திருத்திருப்பார்கள்.

ஒருவேளை இந்தக் கொடுமை நடக்காவிட்டால் மக்கள் அவரவர் குடும்பத்தோடு  ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருப்பார்கள்.

ஒரு விநாடியில் அத்தனை பேரின் சந்தோஷமும் சிதைந்து விட்டதே.

நிச்சயமில்லாத வாழ்க்கையை நினைக்க நினைக்க வெறுமையே பதிலாகக் கிடைக்கிறது.

எப்போதெல்லாம் மனம் வெறுமையாகிறதோ அப்போதெல்லாம் எனக்கு கவிமணி தேசிக விநாயகத்தின் மொழிபெயர்ப்பு கவிதை வரிகள்  பாடல் வரிகள்தான் நினைவுக்கு வரும்.

அப்படித்தான் இன்றும்…

எழுதிச் செல்லும் விதியின் கை

எழுதி எழுதி மேற்செல்லும்

தொழுது கெஞ்சி நின்றாலும்

சூழ்ச்சி பலவும் செய்தாலும்

வழுவிப் பின்னால் நீங்கியொரு

வார்த்தையேனும் மாறிடுமோ?

அழுத கண்ணீர் ஆறெல்லாம்

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  இரங்கல்கள்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 22, 2019

(Visited 54 times, 1 visits today)
error: Content is protected !!