அறம் வளர்ப்போம் 55-61

அறம் வளர்ப்போம்-55
பிப்ரவரி 24, 2020

வஞ்சகம் –  நம்ப வைத்து ஏமாற்றுதல், கீழ்த்தரமான எண்ணம், அழிக்கும் ஆற்றல் கொண்டது

வஞ்சகம் என்பது ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் ஒரு தீய குணம்.

அறிவானவர்களை நேர்வழியில் அழிக்க இயலாமல் அவர்களை அழிப்பதற்கு அறிவற்றவர்கள் பயன்படுத்தும் கீழ்த்தரமான எண்ணமே வஞ்சகம்.

பிறரை ஏமாற்றி பிழைக்க உதவும் வஞ்சக எண்ணம் எப்போதுமே பிறரை அழித்துக்கொண்டிருக்காது. ஒருகட்டத்தில் வஞ்சக எண்ணம் கொண்டவர்களையே அழித்துவிடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-56
பிப்ரவரி 25, 2020 

தற்பெருமை –  நீண்டநாள் நிலைக்காது, மதிப்பை கீழ் இறக்கும், தரமான நட்புகள் விலகும்.

நம்முடைய பெருமைகளையே பேசிக்கொண்டிருப்பதற்கு தற்பெருமை என்று பெயர். தற்பெருமை பேச்சுகள் நீண்ட நாள் நிலைக்காது.

நம்மைப் பற்றி நாமே ‘ஆஹா ஓஹோ’ என பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய மதிப்பை இழக்க நேரிடும்.

தற்பெருமை பேசுபவர்களுக்கு தரமான நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். அப்படியே கிடைத்தாலும் விரைவில் விலகி விடுவார்கள்.   

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-57
பிப்ரவரி 26, 2020

உண்மை –  நேர்மையாக வாழச் சொல்லித்தரும், அன்பை பெருக்கும், அறத்திலேயே ஆகச் சிறந்த அறம்.

உண்மை நேர்மையை கற்றுக்கொடுக்கும், நேர்மையாக வாழச் சொல்லித்தரும்.

அன்புள்ளம் கொண்ட மனம்தான் உண்மையின் இருப்பிடம். அன்புக்கு பொய்யாய் வாழத் தெரியாது. உண்மை அன்பைப் பெருக்கும்.

அறத்திலேயே ஆகச் சிறந்த அறம் உண்மையாக வாழ்வதும், உண்மையை நேசிப்பதும்தான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-58
பிப்ரவரி 27, 2020

பொய் –  நேர்மையாக வாழ விடாது, அன்பை சிதைக்கும், அறத்துக்கு எதிரானது. 

பொய் உண்மை தன்மையை அழித்துவிடும். நேர்மையாக வாழ விடாது.

பொய் அன்பை சிதைக்கும் ஆற்றம் கொண்டது.

அறத்துக்கு எதிராக செயல்பட வைக்கும். நம் மீதான மதிப்பை இழக்கச் செய்யும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-59
பிப்ரவரி 28, 2020

நல்வினை –  நல்ல செயல்கள், நன்மையை கொடுக்கும், தீய சக்திகளை விலக்கும். 

வினை என்றால் செயல். நல்வினை என்றால் நல்ல செயல்கள் என பொருள்படும்.

நல்வினை எனப்படும் நல்ல செயல்களை செய்வதால் நன்மையே ஏற்படும்.

நல்வினை பெருகும்போது தீய சக்திகள் அண்டுவதற்கு பயப்படும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-60
பிப்ரவரி 29, 2020

தீவினை –  தீமையான செயல்கள், நன்மையை கெடுக்கும், நல்ல சக்திகளை அழிக்கும்

வினை என்றால் செயல். தீவினை என்றால் தீமையை உண்டாக்கும் செயல்  என பொருள்படும்.

தீய செயல்கள் பெருகுவதன் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

தீவினை பெருகும்போது ஆக்கப்பூர்வமான சக்திகள் விலகிச் செல்லும். நேர்மறை சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான செயல்கள் போன்றவற்றை அழிக்கும் ஆற்றல்கொண்டது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-61
மார்ச் 1, 2020

திறமை –  ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்திருக்கும், தன்னம்பிக்கையை ஊட்டும், ஆற்றலை மேம்படுத்தும்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமை பொதிந்திருக்கும். அது பாடுவது, எழுதுவது, வரைவது, பேசுவது என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கும்.

நமக்குள் இருக்கும் திறமையை நாம் மேம்படுத்திக்கொண்டால் அது நமக்கு அசாத்திய தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நமக்கு உயிர் வாழத் தேவையான உற்சாகத்தையும் ஆற்றலையும் கொடுப்பதே நம் திறமைகளே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 292 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon