ஹலோ With காம்கேர் -218: அனிமேஷனில் இராமாயணம்!

ஹலோ with காம்கேர் – 218
August 5, 2020

கேள்வி: அனிமேஷனில் ராமாயணம் சிடி முதல் ஆப், யு-டியூப் வரையிலான பயணம் எப்படி சாத்தியமானது?

இன்று அயோத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு. ராமர் கோயில் என்றதுமே நாங்கள் ராமாயணத்தை அனிமேஷனில் தயாரித்தவை நினைவுக்கு வருகிறது.

2000-த்தில் எங்கள் காம்கேர் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்தினோம். அப்போது ராமாயணம், கந்தர்சஷ்டி கவசம், திருக்குறள், திருவாசகம் என பல்வேறு பக்தி, இதிகாசம், இலக்கியங்களை அனிமேஷனில் வடிவமைத்தோம்.

குழந்தைகளுக்காகவே வடிவமைத்தது…

எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கொண்டு வந்தது…

தமிழில் கொண்டு வந்தது…

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் அவற்றை பயன்படுத்தும் வகையில் எளிமையான ஷார்ட் கட் கீக்களுடன் வடிவமைத்தது…

மிகக் குறைந்த விலையில் 99 ரூபாய்க்கு விற்பனை செய்தது (அந்த காலகட்டத்தில் அனிமேஷன் சிடிக்கள் 250-300 ரூபாய் இருந்தன)

இவையெல்லாம் எங்கள் காம்கேர் அனிமேஷன் படைப்புகள் மக்களை பெருத்த வரவேற்பைப் பெற காரணமாக இருந்தன.

சில தொலைக்காட்சிகளிலும் எங்கள் பக்தி அனிமேஷன் படைப்புகள் காலை நேரங்களில் ஒளிபரப்பாயின.

பேருந்துகளிலும் டிராவல்ஸ் கார்களிலும் வேன்களிலும் பயணங்களை பக்திமயமாக்கின எங்கள் அனிமேஷன் படைப்புகள்.

குறிப்பாக ஜனவரியில் விற்பனை கூடுதலாக இருக்கும். ஏனெனில் சபரி மலை செல்வோர் எங்கள் அனிமேஷன் படைப்புகளை பயணங்களில் பார்த்துக்கொண்டே செல்ல வாங்கிச் செல்வார்கள்.

சிடிக்களின் காலம் முடிந்தவுடன் அவற்றை ஆப்களில் கொண்டு வந்துகொண்டிருகிறோம். விரைவில் அனைத்தையும் யு-டியூபிலும் கொண்டுவர இருக்கிறோம். எங்கள் யு-டியூப் சேனல் முகவரி:  https://www.youtube.com/c/CompcareKBhuvaneswari

சப்ஸ்க்ரைப் செய்துகொண்டு அப்டேட்டுகளை தவறாமல் பாருங்களேன்.

எங்கள் அனிமேஷன் படைப்புகளில் ராமாயணத்தில் நாங்கள் வரைந்த ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon