’ஈகோ’ உடைத்த கே.என்.சிவராமன்

2017 – காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் இறுதியில் நான் சந்தித்த நேர்மையாளர் திரு.கே.என்.சிவராமன். நேர்மையாக இருப்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் பரிசு. அத்தகைய பரிசை நித்தம் தனக்குத் தானே கொடுத்து வருகிறார் இவர். பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் பெருமை. மிக அரிதானவர்களுக்கு மட்டுமே அவர்களால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குப் பெருமை. அப்படிப்பட்ட அரிதானவர்களுள் ஒருவர்தான் திரு.கே.என்.சிவராமன். செய்யும் பணியில் நேர்த்தி, நேர்மையான அணுகுமுறை, எந்த ஒரு விஷயத்திலும்…

புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு!

திரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி உட்பட அனைத்து மீடியாக்களுமே, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த என் திறமையையும் உழைப்பையும் வெளி…

‘சுட்டி’ கணேசன்

நல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என் பாராட்டைத் தெரிவித்துவிடுவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன். அந்த வகையில் தன்…

கல்லூரி நட்பு

One of  my  College Mate  Mr. B. Anand  sent me an appreciation note for the welfare of my Company COMPCARE Software Private Limited in the occasion of Silver Jubilee Year 2017. In this occasion, I wish to thank him for his involvement and trust in my social activities and also contributing…

‘அப்புசாமி சீத்தாபாட்டி’, அக்கறை(ரை), பாக்கியம் ராமசாமி

ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள்  7-12-17 வியாழன்  இரவு 11.40க்கு இயற்கை எய்தினார். ‘ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்’  என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது தந்தை மற்றும் தாய் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல கதைகளை எழுதியுள்ளார்.  ஓவியர் ஜெயராஜின் மூலம் உருவம் பெற்ற  ‘அப்புசாமி சீத்தாபாட்டி’, ‘பாக்கியம் ராமசாமி’ மூலம் உயிர்பெற்று பரவலாக பிரபலமானார். நகைச் சுவையை எழுத்தில் வடிப்பது கடினம். அதை…

பள்ளி மாணவன் ஸ்ரீராம்

  இன்று எனக்குப் பரிசாக வந்த பிள்ளையார்  டேபிளில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மிக மிக எளிமையான பரிசுதான். ஆனால் இந்தப் பரிசு கொடுத்த நினைவுகள் விலைமதிப்பற்றது. எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் என் திறனுக்கும் திறமைக்கும் அடிகோலிய நாட்களையும், செயல்பாட்டையும் இந்தப் பரிசு நினைவில் நிஜம்போல காட்சியாக விரித்ததில் என் எனர்ஜி லெவல் பல்மடங்கு உயர்ந்தது. 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை…

மாயன் என்கிற ஆர்.கே

இன்றைய பொழுது பேரன்பில் நனைந்தது. நன்றி ஆர்.கே சார். இவர்களைப் போன்ற பெரியோர்கள் பலரில் உள்ளார்ந்த அன்பினால்தான் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து  என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. 2017 – காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு. நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்பா அம்மாவின் பணி நிமித்த மாற்றல் காரணமாக, நான் வளர்ந்தது திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம் என பல்வேறு ஊர்களில். இதனால் எனக்கு ஒரு குறிப்பிட்ட…

காந்தலஷ்மி சந்திரமெளலி

காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு எழுத்தாளர். இதோ இவர் எழுதிய கடிதம்! புவனா என்று நான் அன்புடன் அழைக்கும்,…

பருத்தியூர் சந்தானராமன்

என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே உள்ளது. அதை பிரிண்டுக்குச் செல்லும் வகையில் சரி செய்து கொடுக்க முடியுமா?’ என்று…

’உழைப்பே வாழ்க்கையாக…’ சடகோபன்

திருமிகு. நா.சடகோபன் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், நேரடியாக பொது மக்களுடன் பழகவும், உதவவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வரும் திருமிகு. நா.சடகோபன் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் விஜயபாரதத்தில் எடிட்டராக இருந்தபோது எனக்கு சமூக வாழ்வியல் பங்களிப்பை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அது இன்றுவரை தொடர்கிறது. ஒரு சமயம் புயலால்…

error: Content is protected !!