என் வாசிப்பு வழக்கம்!

என் வாசிப்பு வழக்கம்! நான் எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன். அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன். எழுத்து, ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  என அனைத்திலுமே ஆர்வமும் திறமையும்…

எழுதிச் செல்லும் விதியின் கை!

இலங்கை குண்டுவெடிப்பு பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அன்றைய தினம் எத்தனை மகிழ்ச்சியுடன் எழுந்திருத்திருப்பார்கள். ஒருவேளை இந்தக் கொடுமை நடக்காவிட்டால் மக்கள் அவரவர் குடும்பத்தோடு  ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருப்பார்கள். ஒரு விநாடியில் அத்தனை பேரின் சந்தோஷமும் சிதைந்து விட்டதே. நிச்சயமில்லாத வாழ்க்கையை நினைக்க நினைக்க வெறுமையே பதிலாகக் கிடைக்கிறது. எப்போதெல்லாம் மனம் வெறுமையாகிறதோ அப்போதெல்லாம் எனக்கு கவிமணி தேசிக விநாயகத்தின் மொழிபெயர்ப்பு கவிதை வரிகள்  பாடல் வரிகள்தான் நினைவுக்கு வரும்….

யார் நண்பர்?

யார் நண்பர்? ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர். ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு’  பின்புலம் ஆராய்ந்து பார்த்து  நட்பு வட்டத்தில் இணைத்திருப்பர். ஆனாலும் அவர்களுக்கே டிமிக்கிக்கொடுத்து…

வலம்!

வலம் இதழ்… முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில்…. மிக அழகான ஃபாண்டில்… எல்லா வயதினரும் படிக்கும் ஃபாண்ட் சைஸில்… அசத்தலான லேஅவுட். எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துக்களை அழகான தமிழில் எளிமையான நடையில் கொடுக்கிறார்கள். தமிழும், நடையும் அற்புதம். கதை, கட்டுரை, அரசியல், கார்ட்டூன், பயண அனுபவங்கள், ஆன்மிகம் என அத்தனையும் கிளாஸிக். குறிப்பாக ஏப்ரல் 2019 இதழில்… ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி( சுப்பு –…

பெயர்

நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக… ‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது?  – இதுதான் கேள்வி. ‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்… 25 வருடங்களுக்கு முன்பு பத்திரிகை தர்மம் எப்படி இருந்தது என்பதற்கு ஓர் உதாரணம். 1990-ம் ஆண்டு……

எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு

‘இறக்கை முளைத்தது பறக்கத் தெரிந்தது பறப்பது சுதந்திரமில்லை நிர்பந்தம் என்பது புரிந்தது’   ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’  நிறுவனர் திரு. கிருஷ்ணன் தன் டேபிளில் வைத்திருந்த இந்த கவிதை வரிகளே இந்த புத்தகம் முழுவதும் படிக்கத் தூண்டியது. ‘இந்த அழகான உலகில் அனைவரும் அடைய விரும்பும் ஒரு விஷயம் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான இலக்கும் அளவுகோளும் மாறிக்கொண்டே இருந்தபோதிலும் அனைவருடைய பயணமும் வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் இருக்கிறது. தனிமனிதன்…

சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!

மாணவர்களின் ஆர்வம் என்ன, திறமை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டும் ஒருங்கிணையும் ஒரு புள்ளியை அவர்களின் எதிர்காலமாகக் கொண்டு அதற்கான வாய்ப்பைத் தேடுவதில்தான் அவர்களின் வெற்றி உள்ளது. அந்த வகையில் பிறருக்கு உதவும் மனப்பான்மைகூட ஒரு திறமைதான். அதனடிப்படையில் அவர்கள் பணியை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செய்யப்படும் பணிகள் மனித உறவுகள் தொடர்பான தொழில்களிலும், சமூக நலப் பணிகளிலும்…

ஃபேஸ்புக் பதிவுகளும் மாற்றங்களுக்கு வித்திடும்!

என்னவென்று தெரியவில்லை. நேற்று எனது ஃபேஸ்புக் பதிவுகள் சம்மந்தமாகவே மூன்று பாராட்டுக்கள். ஒன்று நான் தினந்தோறும் எழுதிவரும் ‘இந்த நாள் இனிய நாள்’ அருமையாக இருக்கிறது என்று குடும்ப நண்பரின் பாராட்டு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின்  ‘இன்று ஒரு தகவல்’ போல அருமையாக உள்ளது என்ற ஒப்பீட்டுடன். இரண்டாவது ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் இருந்து ரெஃபரென்ஸ் எடுத்து தன் பள்ளி மாணவ மாணவிகளிடையே வகுப்பின் இடைஇடையே…

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்!

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்! இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையை… ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ‘மனதை Format செய்யுங்கள்’ என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தில் எழுதியிருந்தேன். சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து போதையில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது….

மகளிர் தினம் 2019

‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ – என்னைப் பார்க்கும் பலரும் சொல்வார்கள் ஆனால் இதற்காக நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. காரணம் என் குடும்ப அமைப்பு அப்படி. என் அம்மா… 40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் இவைதான் இவரின் சொத்து. எங்களுக்கு சேர்த்துவைத்ததும் அதுவே. அந்த வகையில் என் அம்மா…

error: Content is protected !!