வாழ்க்கையின் OTP-17 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2019)

சில வாரங்களுக்கு முன்னர் கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது. இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய  மாபெரும் அங்கீகாரம். இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வருகின்ற இளைஞர்களுக்காக சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். நேர்மையே உயரிய…

ராஜகோபால கனபாடிகள்!

ராஜகோபால கனபாடிகள்! எங்கள் நெருங்கிய உறவினரும் ஆகச் சிறந்த வேதவித்தகருமான நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் (56) டிசம்பர் 24-ம் தேதி இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இவர் சிறந்த வேத வித்வான். பாரம்பரியமான வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். வைதீகஸ்ரீ என்ற வேத பத்திரிகை நடத்தி வந்தார். http://www.vaithikasri.com/. பல்வேறு ஆன்மிக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். வேதம், உபநிடதம், தர்ம சாஸ்திரங்கள் குறித்து ஏராளமான ஆன்மிக…

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்க!

(NCBH குழும வெளியீடு, போன்: 044-26251968, 044-26258410, 044-26241288) சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட 2013–ம் ஆண்டு முழுவதும் ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளத்தில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அந்த இணையதளத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்படும் வாய்ப்பும் கிட்டியது. அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் கட்டுரைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு வித்தியாசமான கோணத்தில் கட்டுரைகளை எழுதி…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்! (நம் தோழி)

நேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. மொபைல் App-ல்  உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே டெலிவரி செய்யும் உணவோட்டிகள் இவர்கள். ‘இதெல்லாம் பெண்கள் வேலை’ என சொல்லி வீட்டு…

எழுத்தும் கிரியேட்டிவிட்டியும் தொழில்நுட்பமும் – நேர்காணல்!

எத்தனையோ நேர்காணல்கள்.  என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன்.  அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன். ‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது?’   நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே. இவை இரண்டையும் அஸ்திவாரமாக்கி உழைப்பை உரமாக்கினேன். என் திறமை ‘எழுதுவது’ மட்டுமே என…

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!

தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக  நான் எழுதிய 125 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள்  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த  நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்… இவற்றில் கடந்த 27 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும்…

வாழ்க்கையின் OTP-16 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2019)

நவம்பர் 14. குழந்தைகள் தினம். சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? அடிக்கடி எனக்கு தேவதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அன்றும் அப்படியே. அன்று ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அலுவலகத்தில்…

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக! 1992 முதல் இன்று வரை 1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன. குறளை அப்படியே படித்தல், தொடர்ந்து குறளை இனிமையான குரலில் பாடுதல்,  பின் அதன் விளக்கம், இறுதியில்…

அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள்  தயாரிப்பாளராக!

அனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை   Since 1992  200 – படைப்புகளுக்கும் மேற்பட்டவை கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது.  முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த…

தொலைக்காட்சி நிகழ்ச்சி / ஆவணப்பட இயக்குனராக!

தொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக!  1992 முதல் இன்று வரை 500  படைப்புகளுக்கும் மேற்பட்டவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எனக்கு புதிதல்ல. ஜெயா டிவி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும், அயல்நாட்டு தமிழர்களுக்கான சில தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தொழில்நுட்பத் தொடர்களை நடத்தி இருக்கிறேன். எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியும் இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன்  கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பிரபலமாகாத 1992-களில் இருந்து  எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம், என்…

error: Content is protected !!