பெண்!

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டிடிபி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் கடையில் 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம் பெண்கள் பணி புரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்தில் இருந்து அவர்களை அழைத்து வந்து வீடெடுத்துக்கொடுத்து வேலையும் கற்றுக்கொடுத்து சாப்பாடும் போட்டு நல்லபடியாக கவனித்துக்கொள்கிறார். மாதாமாதம் சம்பளத்தை…

பள்ளி பாடத்திட்டத்தில் நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்கள்!

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக அந்தந்த காலகட்டங்களிலேயே பதிவு செய்து வருகிறேன். அது எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியதும் அனைவரும் அறிந்ததே. என்னுடைய இந்த நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் படைப்புகளுக்கு (புத்தகங்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்) சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச்…

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்!   

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்   விரைவில் நலமுடன் நாடு திரும்புவற்கு பிராத்திப்போம்!   Pray for the safety of  Indian Air Force Wing Commander Abhinandan அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி பிப்ரவரி 28, 2019

இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம்

காலம் காலமாக ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் முன்னின்று ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும் வெற்றியடையவும் பிடிக்கும் ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று கலை, அரசியல், பிசினஸ் என பல்வேறு துறைகளில் முன்னேறிய பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்….

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்…

நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகத்துக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வருடம் (2019) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்(Affiliated to திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. தமிழ் இலக்கியம் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது. சென்னை பல்கலைக்கழகம்,  அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்  இவற்றில்… கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த…

இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம். – செய்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்களை மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது. என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய இலட்சியமே இராணுவத்தில் சேர்வதுதான். அதை அவன் தன் 10 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் பெற்றோருக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் கொள்கையில் மாறுவதாக இல்லை….

கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர்  ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை சார்பில் விவாதிக்க நானும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக ஒரு எழுத்தாளர்…

பேரன்பின் தொடர்ச்சி…

முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள். நித்தம் இந்தத் திரைப்படத்தில் வருவதைப்போல மூளை முடக்குவாதம் உட்பட பல்வேறு காரணங்களினால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பலரை நேரிலேயே பார்த்தும், பழகியும் வருவதாலும் நிதர்சனத்தை நித்தம் நேரில் சந்திப்பதாலும் இந்தத் திரைப்படம் பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இது மிக அவசியமான…

மேடை நிகழ்ச்சிகளின் அணுகுமுறை!

முகநூலில் நேற்று நான் எழுதிய  ‘அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்’ என்ற பதிவுக்கு கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்கள்  ‘சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்’ குறித்து இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது. இந்த பதிவில் முதலாவதாகப் பேசப்பட்ட நிகழ்வில் உட்கார சீட் காலியாக இருந்தும் ‘அது விருந்தினர்களுக்கானது’ என்று சொல்லி நிற்கச் சொல்லியமை குறித்த செயல்பாடு. அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது முற்றிலும் தவறு….

அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்!

‘சென்னை சுயாதீன திரைப்பட விழா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தினமலர் புகைப்பட ஜர்னலிஸ்ட் திரு. எல். முருகராஜ் பதிவைப் படித்தேன்… அதில் கடைசி பகுதி மட்டும் இங்கு உங்கள் பார்வைக்கு…. //‛சார் மீடியாவில் இருந்து வரார் உள்ளே கூட்டிட்டு போய் ஓரமா நிற்க வை’ என்றார் ஒருவர், உள்ளே காலி நாற்காலி இருக்கிறதே என்றபோது அது ‛விருந்தினர்களுக்கு’ என்றனர். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்கு…

error: Content is protected !!