வரி விளம்பரமும், நான் செய்த முதல் இண்டர்வியூவும்!

என் வயதில் வேலைக்காக அவரவர்கள் ஃபைலை எடுத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக இண்டர்வியூவுக்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் நான் என் நிறுவனத்துக்காக செய்த இந்த முதல் இண்டர்வியூ எனக்கு புதுமையான அனுபவமாக இருந்ததுடன் இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் உணர்த்தியது. 1999  வருடம். அப்போதெல்லாம் அலைபேசி கிடையாது. தொலைபேசி மட்டுமே. The Hindu வில் விஷுவல் பேசிக் புரோகிராமர் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தேன். எங்கள் முதல் பத்திரிகையில்…

THE JOURNEY – FUELLED BY DETERMINATION by Ramanan

THE JOURNEY – FUELLED BY DETERMINATION The Biography of  Sri. S. Sankaranarayanan by RAMANAN SSN என்று மூன்றெழுத்துக்களில் அனைவராலும் அறியப்படும் திரு. எஸ். சங்கரநாராயணன் (1912-1987) அவர்களின் சுயசரிதை புத்தகம் இது. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் திரு. ரமணன். SSN குறித்து சிறிய குறிப்பு. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கி தனியாக தொழில் தொடங்க வேண்டும்…

சுவாமி விவேகானந்தர் சிந்தனையில் நான்!

இன்று தேசிய இளைஞர் தினம் – சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். 2013-ம் ஆண்டு விவேனாகந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி தினமணியில் பணிபுரிந்து வரும் உயர்திரு. முரளி முத்துவேலு அவர்கள் www.vivekanantham150.com என்ற வெப்சைட்டை வடிவமைத்து அதில் அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் குறித்து தினம் ஒரு பதிவாக வெளியிட்டு வந்தார். பல தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்து கட்டுரைகள் எழுதி வாங்கி…

படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்!

திரு ரமணன் அவர்கள் எழுதிய THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லையே… எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கம்ப்யூட்டர் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்த மிக ஆரம்பக் காலகட்டத்திலேயே (1992) காம்கேர் என்ற நிறுவனத்தைத்தொடங்கி சாதி, மதம்…

தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கணும்!

2018 முழுவதும்… பிசினஸ் தொடர்பாக நான் சந்தித்து வருபவர்கள் அனைவருமே தன்னம்பிக்கைச் சிகரங்களாகவும், தாங்கள் பணிபுரியும் களம் வேறாக இருந்தாலும் தங்கள் தளத்தில் தொழில்நுட்பத்தின் உச்சத்தை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் வியத்தகு மனிதர்களாக அமைந்தது சிறப்பு. அதிலும் அனைவருமே அவரவர்கள் வயதிலும், தங்கள் களத்தின் அனுபவத்திலும் உச்சம் தொட்டவர்கள். நம்மைச் சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தும் நல்ல மனிதர்கள் தொடர்பில் இருப்பதே வரம்தானே. திருமதி. கிரிஜா ராகவன் –…

கற்ற கல்வியும் பெற்ற அறிவும்!

டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன்! இவருடன் இன்று ஒரு முக்கியமான பிராஜெக்ட் மீட்டிங். இவரது அறக்கட்டளை வெப்சைட் மற்றும் சமூகவலைதள பராமரிப்பு குறித்த டிஸ்கஷன். கடந்த 10 வருடங்களாக இவரும் நானும் பல சமூக சேவை அமைப்புகள் இளைஞர்களுக்காக நடத்திவரும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்துகொண்டிருக்கிறோம். இன்றைய டிஸ்கஷனின் இடையில் எதேச்சையாக இன்று அவரது நட்சத்திரப் பிறந்தநாள் என்று சொன்னார். இவரது பிறந்தநாளில் இவரது வாழ்க்கைப் பாதையை வியந்து பாராட்டி…

‘Uncompromised Honesty’ – நம் சுயத்தை மற்றவர்களும் உணரும்போது…

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்களுடனான சந்திப்பு…. முன்பும் திட்டமிடவில்லை. எதிர்பாராத சந்திப்பும் இல்லை. ஆனாலும் ஒருநாள் சந்தித்தோம். எழுத்து, பேச்சு, நாட்டு நடப்பு, கொஞ்சம் அரசியல், நிறைய தொழில்நுட்பம் என பல விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். வயது வித்தியாசமோ பணிபுரியும் களமோ தினமும் இயங்குகின்ற தளமோ எந்த விதத்திலும் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் இருவரின் உரையாடலும் அமையப்பெற்றது வரம். நம்மை நாம் அறிவோமே! என்னை பலரும் வாழும் விவேகானந்தர்…

நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கையாளர்!

டாக்டர் ஆர். ஜெயசந்திரன்… என்னுடைய இந்த வருடப் பிறந்த நாளுக்கு என்னை சந்திக்க வந்த முக்கியமான நபர். இவரைப் பற்றிய முக்கியமான விஷயத்தை நான் கடைசியில் தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொன்னால் இந்தப் பதிவை யாருமே படிக்காமல் கடந்துவிடுவீர்கள் என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இரு கண்பார்வையும் இழந்த மாற்றுத்திறனாளி. கல்லூரி முதல்வர். ‘எதற்காக கஷ்டப்படுகிறீர்கள் நானே வந்து சந்திக்கிறேன்…’ என்று சொல்லியும் கேட்காமல் தானே நேரில்…

இன்று புதிதாய் பிறந்தோம்(தேன்)

தொலைபேசித் துறையில் நுழைந்து தங்கள் கடின உழைப்பால்  சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் முன்னேறியவர்கள். அந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில் அப்பா அம்மாவைப் போலவும் செயல்படுவார்கள்… தாயுமானவராக அப்பா, தந்தையுமானவராக அம்மா… ஒருவருக்கு அம்மா…

எது முக்கியம்

அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி. கைது செய்யப்பட்ட ஆண்களின் முகத்துடன் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் போட்டு…

error: Content is protected !!