ஐகான்

காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது  ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன்,  இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள்  ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற  உத்வேகத்தை ஏற்படுத்தும். இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்….

படைப்புகள்

1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர் உருவானது. என் உழைப்பையும் கல்வி அறிவையும் திறமையையும் முதலீடாக்கி நிறுவனத்தை வளர்க்கத் தொடங்கினேன்….

அனிமேஷன்

அனிமேஷன் தயாரிப்புகள்  கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான…

வெப்சைட்டுகள்

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்காத  காலகட்டத்திலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் முதுகலைபட்டம் பெற்று (1987-1992),  தொழில்நுட்பம்  ‘வரலாமா வேண்டாமா’  என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் காம்கேரை தொடங்கி சாஃப்ட்வேர் தயாரிப்பில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு (1992), அது இன்டர்நெட்டுடன் இணைந்து மெல்ல நடைபழக ஆரம்பித்த நேரத்தில் வெப்சைட் வடிவமைப்பில் புது உத்திகளை புகுத்தி (1997),  நம் மக்களிடம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு…

சாஃப்ட்வேர்

காம்கேர் தொடங்கிய 1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர்கள் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அவை காட்சிப்பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது. எந்நேரமும் எனக்கு காம்கேரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலேயேதான் முழு கவனமும். நிஜக்கனவும், உறக்கக் கனவும் இதுவே. சாஃப்ட்வேர் தயாரிப்பில் புது உத்தி கம்ப்யூட்டர் பெரும்பாலானோரின் கனவுப் பொருளாக இருந்துவந்த…

எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர்

அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு  மிக முக்கியக்காரணம். 12 வயதில் இருந்தே எழுதத் தொடங்கியதால், என்  21 வயதுக்குள் கல்லூரி மேற்படிப்பு முடிப்பதற்குள்ளேயே கோகுலம், சாவி, கல்கி, மங்கையர்மலர், ராஜம், சுமங்கலி, விஜயபாரதம், கலைமகள், அமுதசுரபி என முன்னணி பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்து பத்திரிகை உலகம்   என்னை  எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தி…

தமிழில் சுருக்கமாக

  காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் Since 1992 ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டுவருகிறார்.   பல முறை…

விருதுகள்

விருதுகள்… முன்னாள் சிறப்பு  மாணவர் கெளரவம் (Outstanding Old Student) – By AVC College Diamond Jubilee Function, Mannampandal, Mayiladuthurai சிறந்த முன்னாள் கல்லூரி மாணவி (Outstanding Old Student Award)- By Shrimathi Indira Gandhi College, Trichirappalli Vocational Excellence Award – Rotary Club of Chennai PATNA சரஸ்வதி பீடத்தின் சர்வகலாவாணி – By Compcare Employees, Chennai சுதேசி பெண்…

Youtube சேனல்

காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது  காம்கேரின் முதன்மைப் பணியாக இருந்தாலும் ஆவணப்படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும்  தயாரித்து வழங்கி வருகிறோம்.  எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரித்து வருகிறோம். வானொலி மூலம் ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில் தினந்தோறும் ஒரு குறள்…

English – In Brief

Compcare K.Bhuvaneswari, CEO Compcare Software Pvt. Ltd., Chennai Since 1992 She has MSc in Computer Science and MBA to her credit. She has been CEO & MD of Compcare Software Pvt Ltd for the past 25 years, which is into Software Development. This organization is engaged in Website Design, Development…