ஃபேஸ்புக் பதிவுகளும் மாற்றங்களுக்கு வித்திடும்!

என்னவென்று தெரியவில்லை.

நேற்று எனது ஃபேஸ்புக் பதிவுகள் சம்மந்தமாகவே மூன்று பாராட்டுக்கள்.

ஒன்று நான் தினந்தோறும் எழுதிவரும் ‘இந்த நாள் இனிய நாள்’ அருமையாக இருக்கிறது என்று குடும்ப நண்பரின் பாராட்டு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின்  ‘இன்று ஒரு தகவல்’ போல அருமையாக உள்ளது என்ற ஒப்பீட்டுடன்.

இரண்டாவது ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் இருந்து ரெஃபரென்ஸ் எடுத்து தன் பள்ளி மாணவ மாணவிகளிடையே வகுப்பின் இடைஇடையே பேசுவதாகவும் மாணவர்களுக்கு அது நல்ல மோட்டிவேஷனாக இருப்பதாகவும் ஒரு ஆசிரியரிடம் இருந்து கிடைத்த வெளிப்படையான பாராட்டு.

மூன்றாவது Compcare Software Private Limited என்ற என் பிசினஸ் பக்கத்தில் (FB Business Page) நான் அவ்வப்பொழுது எழுதிவரும் என் பிசினஸ் அனுபவங்கள் குறித்த பாராட்டு. 20 வருடங்களுக்கு முன்னர்  விஷுவல் பேசிக் புரோகிராமராக என்னிடம் பணி புரிந்து அனுபவம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் போன் செய்து ‘இப்பவும் அதே சுறுசுறுப்புடன் இருக்கிறீர்களே… நாங்கள் எல்லாம் இப்பவே சோர்ந்துட்டோம் மேடம்…’ என்று சொல்லிவிட்டு விரைவில் சென்னை வந்து சொந்தமாக பிராஜெக்ட்டுகள் எடுத்து செய்யப் போவதாகச் சொன்னார்.

இவை போதாதா ஒரு நாளை இனிமையாக்க…

ஃபேஸ்புக் பதிவுகள் இந்த அளவுக்கு மக்களிடம் மாற்றத்தைக் கொண்டுவருவதை அறியும்போது நான் இன்னமும் கவனமாக செயல்பட வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 17, 2019

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari