வாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)

கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு உள்ளே நிகழும் அற்புதம். அதற்கு அந்த நம்பிக்கையே சாட்சியாகும். அந்த நம்பிக்கைக்கு உருவகம் கிடையாது. அதனால் அவரவர்கள் உணர்ந்தால்தான் உண்டு. அதை நிரூபணமும் செய்ய முடியாது. ஆனால், நம் உடலுக்கு வெளியே நடக்கும் பலவற்றுக்கு அறிவு சாட்சியாகும். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற பாடகர் ஒருவரின் கச்சேரிக்கு கூட்டம் அலைமோதுகிறது. அந்தக் கூட்டமும்,…

வாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)

பாசிட்டிவோ நெகட்டிவோ, ஒருவர்  பேசிய வார்த்தைகள்  செய்கைகள் எல்லாம் காலப்போக்கில்  மறந்துவிடும். ஆனால், அந்த வார்த்தைகளும் செய்கைகளும் நம்மை எப்படி உணர செய்ய வைத்தன  என்பதைப் பொறுத்துத்தான்  நட்பும் விரோதமும். எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை….

வாழ்க்கையின் OTP-11 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2019)

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை. பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம். முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம்….

வாழ்க்கையின் OTP-10 (புதிய தலைமுறை பெண் – மே 2019)

யார் நல்லவர் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.  இதற்கான விடை தேடிய போது பல விஷயங்களை ஆராய வேண்டி இருந்தது. தினந்தோறும் காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தொடரை எழுதி வருகிறேன். தினமும் ஒரு நல்ல செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன்…

வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)

சிம்மாசனத்துக்கு ‘ரிசர்வேஷன்’ செய்துவிடுங்கள்! அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு…

வாழ்க்கையின் OTP-8 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2019)

நலமாக இருங்கள்… வளமாக வாழுங்கள்! சில நாட்களுக்கு முன்னர் 40 வயதேயான என் நெருங்கிய உறவினர்  ஒருவர் விடுமுறை தினமன்று சாப்பிட்டு தன் 10 வயது பெண் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஹார்ட் அட்டாக். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். எப்போதும் தன்னை கலகலப்பாக வைத்துக்கொள்ளக்கூடியவர். எந்த விஷயத்தையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு பாரம் சுமக்க…

வாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019)

சமீபத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் என்னை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘உங்களால் எப்படி சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள் என இத்தனை பணிகளையும் மல்டிடாஸ்கிங்காக சிறப்பாக செய்ய முடிகிறது… மேலும் பிசினஸ் சவால்களையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்ள முடிகிறது?’      அதற்கு நான், ‘என் முடிவுகளை நானே எடுக்கிறேன்… வெற்றி தோல்வி எதுவானாலும் அது…

வாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)

‘ஐராவதம் இறுதிச்சடங்குக்கு வந்த 40 பேர்: தமிழ் வாழும்!’ – இந்தத் தலைப்பும் செய்தியும் உணர்த்தும் உண்மை நெருப்பாய் சுடுகிறது. ‘சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை எடுத்துரைத்தவர் ஐராவதம் மகாதேவன். ‘தமிழ், தமிழர்’என்று முகவரியுடன் அரசாள வருபவர்கள் மத்தியில் இந்திய ஆட்சிப்பணியைத் தமிழ் ஆய்வுக்காகத் துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். அவருடைய கடைசி…

வாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2018)

தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின் தொடக்கப்புள்ளி. தொடர்ச்சியாய் அதே விஷயத்தில் மூழ்கி சோர்வடைந்த மனதை கசக்கிப் பிழிந்து தற்கொலை அல்லது கொலைவரை கொண்டு செல்வது ஸ்ட்ரெஸ்ஸின் உச்சம். சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட ஹார்ட் அட்டாக், டயாபடிக்ஸ் போன்ற உபாதைகள் வருவதற்கு மிக முக்கியக்…

வாழ்க்கையின் OTP-4 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2018)

‘சார் என்னை நினைவிருக்கிறதா… நீங்க தான் என் பாஸா இருந்தீங்க… மேடம் ஞாபகம் இருக்கிறதா… நீங்கதான் என் எம்டியா இருந்தீங்க…’ இப்படி யாராது தங்கள் முன்னாள் நிறுவன தலைவர்களைப் பார்த்தால் மகிழ்ந்து கேள்விப்பட்டிருப்போமா? ஆனால் உலகில் எங்கு, எப்படிப்பட்டச் சூழலில் ஆசிரியர்களை பார்த்தாலும் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும். ‘நீங்கதான் என் தமிழாசிரியரா இருந்தீங்க, நீங்கதான்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon