அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது – இலக்கியச் சாரல் (April 23, 2009)

இலக்கியச் சாரல் அமைப்பினர் ஏப்ரல் 23, 2009 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தனர். இலக்கியச் சாரலின் இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான செய்தியை   இளைஞர்களுக்கான இனிய மாத இதழான இளையவன் என்ற பத்திரிகையில் இங்கு கிளிக் செய்து வாசிக்கலாம்.

OutStanding Alumni Award – Shrimati Indira Gandhi College (April 12, 2009)

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (1987-1990) படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘சிறந்த முன்னாள் மாணவி விருது’ ஏப்ரல் 12, 2009 அன்று வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் அனுபவங்கள்! நம் ஒவ்வொருவரையும் நம் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக நம்மை செதுக்குவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு…

சுதேசி தொழிலதிபர் விருது : Swadeshi Entrepreneur Award – By Swadeshi Jagaran Manch (July 19, 2008)

ஜூலை 19, 2008-ஆம் ஆண்டு கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு Swadeshi Entrepreneur Award என்ற விருதை Swadeshi Jagaran Manch வழங்கி சிறப்பித்தது. அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு சுதேசி தொழிலதிபர் விருது (Swadeshi Entrepreneur Award) வழங்கப்பட்டது. சுதேசி…

பெண் சாதனையாளர் விருது : Women Achiever Award – By Lakshmi Ladies Club, Inner Wheel Club of Nanganallur (March 7, 2008)

மார்ச் 7, 2008 அன்று நங்கநல்லூரில் லஷ்மி லேடீஸ் கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் இணைந்து இணைந்து கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு சாதனையாளர் விருது  வழங்கி சிறப்பித்தார்கள். அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு பெண் சாதனையாளர் விருது (Women Achievers Award) வழங்கப்பட்டது.

‘தன்னம்பிக்கைத் தாரகை’ – By டாக்டர் சரஸ்வதி ராமநாதன் (September 2, 2007)

செப்டம்பர் 2, 2007 – ம் ஆண்டு சென்னை வாணி மஹாலில் நடந்த  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கிய  டாக்டர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘தன்னம்பிக்கைத் தாரகை’ என்ற பட்டம் அளித்து கெளரவித்தார். டாக்டர் சரஸ்வதி ராமநாதன்… தமிழுக்காகவே உலகம் முழுவதும் சென்று தமிழ் பரப்பி  முத்தமிழ் பேரரசி…

யுவசக்தி இளம் சாதனையாளர் விருது : Yuva shakthi Youth Achiever Award – Yuva Shakthi & Anna University(January 10, 2006)

சாஃப்ட்வேர் துறையில் தமிழை தொடர்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் முன்னிலைப்படுத்தி வருவதற்காக காம்கேர் கே.புவனேஸ்வரிக்கு யுவசக்தி இளம் சாதனையாளர் விருது   ஜனவரி 10, 2006 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா ஆடிடோரியத்தில் நடந்த விழாவில் யுவ சக்தி அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகத்து ரெட் கிராஸ் அமைப்பும் இணைந்து வழங்கினார்கள். நிகழ்ச்சியின் புகைப்படங்களை பார்வையிட  …Yuva Shakthi Award Details

‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ – விருது (February 6, 2005)

பிப்ரவரி 6, 2005 அன்று ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் நிறுவுனரும், முதன்மை தலைமை நிர்வாக அதிகாரியுமான காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அவரது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து  ‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ விருதளித்து கெளரவித்தார்கள். பிப்ரவரி 6, 2005. வாழ்க்கையில் எனக்கு ஒரு பொன்னான நாள். அன்றுதான் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்…

சாதனைச் செல்வி – By புதுக்கோட்டை பி. வெங்கடராமன் (February 6, 2005)

புதுக்கோட்டை பி. வெங்கட்ராமன் அவர்கள் பிப்ரவரி 6, 2005 அன்று காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரின் திறமைகள் குறித்து கவிதை வாசித்து  ‘சாதனைச் செல்வி’ என்று பட்டம் அளித்து கெளரவப்படுத்தினார். 

சிறந்த எழுத்தாளர் விருது – நெய்வேலி புத்தகக் கண்காட்சி (August 8, 2004)

2004-ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு தொழில்நுட்ப இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பிற்கான விருது சான்றிதழும்,  சிறந்த எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டது.  புத்தகக் கண்காட்சியே மினி லாரியில்… முதன் முதலாக நாங்கள் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் அமைத்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 2004-ஆம் வருடம். நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி. அடிப்படையில் கற்பனை…

தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் திருவாசகம் CD – ஸ்ரீ ஜயேந்திரர் (February 11,2004)

எங்கள் காம்கேர் நிறுவனம் வடிவமைத்த ‘திருவாசகம்’ மல்டிமீடியா சிடியை தி.நகர் வாணி மஹாலில் பிப்ரவரி 11, 2004 –ம் தேதி,   ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியினை முன்னிட்டு  வெளியிட்டோம். தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட திருவாசகம் மல்டிமீடியா சிடியை  வர்த்தமானன்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon