ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் சார்பில், நவம்பர் 14, 2009 அன்று
மைலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லத்தில்
குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்
இந் நிகழ்ச்சிக்கு
ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லச் செயலாளர்
தவத்திரு ஸ்வாமி சத்யஜானாநந்தா,
தாளாளர் ஸ்வாமி இந்துநாதாநந்தா
முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன்,
திருமதி. சாவித்திரி ராமகிருஷ்ணன்,
பருத்தியூர் டாக்டர். சந்தானராமன் மற்றும்
பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தானராமன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை தந்து சிறப்பித்தனர்.
அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகளின் குழந்தையின் பிறந்த நாளை ஒட்டி…
அமெரிக்காவில்
மிசவுரியில் உள்ள செயிண்ட் லூயிஸில்
வாழுகின்ற
ஸ்ரீபிரியா மற்றும் வெங்கடாசலம் கிருஷ்ணன் தம்பதியினர்
கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
திரு வெங்கடாசலம் சாஃப்ட்வேர் துறையில்
பணி செய்து வருகிறார்.
இவர்கள், அமெரிக்காவில் உள்ள
என் சகோதரியின்
நெருங்கிய குடும்ப நண்பர்களுள் ஒருவர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.
முதல் குழந்தையின் பெயர்:கோகுல் வெங்கடாசலம் (Gokul Venkatachalam),
இரண்டாவது குழந்தையின் பெயர்:மேகுல் வெங்கடாசலம் (Mehul Venkatachalam).
இந்த தம்பதியினர்
தங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்கள் அன்று,
இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு
படிப்பு-உணவு-உடைக்காக
அங்கிருந்தபடியே ஏதேனும்
உதவி செய்து வருகிறார்கள்.
இந்த வருடம் முதல்
இவர்கள் எங்களது ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை
(Sripathmakrish Charitable Trust) மூலம்,
தங்கள் குழந்தைகளின்
பிறந்த நாளை கொண்டாட உள்ளனர்.
2009 வருடம் நவம்பர் மாதம்,
இரண்டாவது குழந்தையின் பிறந்த நாள்.
அக்குழந்தைக்கு ஐந்து வயது முடிந்து
ஆறு வயது தொடங்கியது.
திரு. வெங்கடாசலம் கிருஷ்ணன் தம்பதியினர் செய்த பொருளுதவியுடன்,
அவர்களுடைய சார்பில், 14-11-2009, சனிக்கிழமை அன்று
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லத்தில்
உள்ள 250 குழந்தைகளுகளுடன்
குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடினோம்.
அன்றைய தினம், எங்கள் டிரஸ்ட் உறுப்பினர்கள்
மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட நபர்களுடன்
நாங்கள் மயிலாப்பூர்
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில்
உள்ள குழந்தைகளோடு
மகிழ்ச்சியாக எங்கள் நேரத்தை செலவிட்டோம்.
மாணவர்கள் இல்லத்தில் உள்ள
குழந்தைகளின் சந்தோஷமும்,
வாழ்த்துகின்ற வார்த்தைகளும்,
போற்றுகின்ற மனதும்
பல மைல்களுக்கு அப்பால் இருக்கும்
திரு. வெங்கடாசலம் கிருஷ்ணன் தம்பதிகளின்
குடும்பத்தை ஆசிர்வதிக்கும்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சம்
நிகழ்ச்சியை
ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லச் செயலாளர்
தவத்திரு ஸ்வாமி சத்யஜானாநந்தா
மற்றும்
தாளாளர் ஸ்வாமி இந்துநாதாநந்தா அவர்கள்
தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக
முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள்
குழந்தைகளுக்காக
சிறப்பு உரை நிகழ்த்தி குழந்தைகளை ஊக்குவித்தார்.
அடுத்ததாக,
திருமதி. சாவித்திரி ராமகிருஷ்ணன் அவர்கள்
குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்வித்தார்.
மூன்றாவதாக,
பருத்தியூர் டாக்டர். சந்தானராமன் மற்றும்
பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தானராமன் அவர்கள்
குழந்தைகளுக்கு திருக்குறள் கதை
சொல்லி மகிழ்வூட்டினார்கள்.
இறுதியாக,
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவன CEO
காம்கேர். கே. புவனேஸ்வரி
திறமைக்கு ஏற்ற கம்ப்யூட்டர் படிப்புகள்
என்ற தலைப்பில் பேசியதோடு,
குழந்தைகளுக்கு ஏற்ற “தினம் ஒரு பழம்”,“தாத்தா பாட்டி கதைகள்”,“பேரன் பேத்தி பாடல்கள்”
போன்ற மல்டிமீடியா அனிமேஷன் சிடிக்களை
திரையிட்டுக் காட்டி உற்சாகப்படுத்தினார்.
ஸ்ரீ பத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில்
திரு.வி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமதி. பத்மாவதி
அவர்களின் நன்றி உரையுடன்
விழா இனிதே நிறைவுற்றது.
மீடியா செய்திகள்
அழைப்பிதழ்