#கவிதை: இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான்!

இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான் என அங்கலாய்ப்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கவிதை! மொட்டை மாடி வாக்கிங் போது காலை ஏழு மணிக்கே எதிர்வெயில் வாட்டி எடுக்க கிளம்பலாம் என எத்தனித்தபோது… எதிர்வீட்டு மொட்டை மாடி மத்திம வயது பெண் வடாம் பிழிந்துகொண்டிருக்க… அவர் முகத்தில் வெயில்படாதவாறு அவருடைய மகன் நகர்ந்து நகர்ந்து நின்று…

#கவிதை: பாசமும், மன்னிப்பும்!

  பாசமும், மன்னிப்பும்! குழந்தைகளிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் நிரம்பி வழிவது பாசம்! வயதில் முதிர்ந்த பெரியோர்களிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் ததும்பி வழிவது மன்னிப்பு! அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software ஏப்ரல் 8, 2022 #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

#கவிதை: புத்தக வாழ்த்து!

புத்தக வாழ்த்து! நான் போகிறபோக்கில் சொல்லவில்லை… நானாகவும் எதையும் சொல்லவில்லை… நிறைய R&D செய்துவிட்டுத்தான் சொல்கிறேன்… ‘நிறைய எழுதுங்க…’ ‘தொடர்ச்சியா எழுதுங்க…’ ‘அருமையா எழுதறீங்க… விடாமல் எழுதுங்க…’ என்று எனை வாழ்த்துபவர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் மட்டுமே என் எழுத்துகளை வாசிப்பவர்களாக இருக்கிறார்கள்… என் புத்தகங்களை தேடித் தேடி வாங்குபவர்களும்… ஒரு புத்தகம் கூட விடாமல் ‘இந்தப்…

#கவிதை: வாழ்நாள் பரிசும், விருதும்!

வாழ்நாள் பரிசும், விருதும்! நம் அனைவருக்குமே வாழ்நாள் பரிசும் உண்டு விருதும் உண்டு! அவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூட நாமே நிர்ணயிக்கலாம் நாமே வடிவமைக்கலாம் அதுதான் அதன் மாசிறப்பு! இன்று நாம் வாழும் வாழ்க்கை நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசு! நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை இன்று நாம்…

#கவிதை: இளமையும், முதுமையும்!

இளமையும் முதுமையும்! ஒரு கப் காபி தானே கலந்து குடிக்கும் வாய்ப்பே இல்லாத சூழலுக்கும்… ஒரு கப் காபி கலந்து கொடுக்கக் கூட ஆளே இல்லாத சூழலுக்கும்… இடையே தான் இந்தப் பெருவாழ்வின் நம்பிக்கை ஒட்டிக்கொண்டு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கிறது. காம்கேர் கே. புவனேஸ்வரி டிசம்பர் 26, 2021 | ஞாயிறு #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

#கவிதை: பலனை அனுபவிக்கக் கடமையைச் செய்!

பலனை அனுபவிக்கக் கடமையைச் செய்! கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே இது பகவத் கீதை! இதன் பொருள் தெரியாதவர் யாருமுண்டோ? ஆனால் நானோ கடமையையும் பலனையும் வேறுவிதமாக அணுகுகிறேன்… நித்தம் புதுப்புது கடமைகள் நமக்காக காத்துக்கொண்டிருப்பதே நாம் பிறப்பெடுத்திருப்பதன் பலன்தானே! ஆக, கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காமல்… கிடைத்திருக்கும் பலனுக்காகவே கடமையை செய்துகொண்டிருக்கிறோம்… என்ற புது …

#கவிதை: அப்பாவின் கையெழுத்து!

அப்பாவின் கையெழுத்து! ஒரு பயணத்தின் இடையில் தங்கி இருந்த ஓட்டலின் அறையை காலி செய்த நாளன்று டேபிளின் ஓரத்தில் பறந்து சென்று கசங்கி சுருண்டிருந்த காகிதத்தைக் கூட அனாதையாக அங்கேயே விட்டு வர மனமில்லாமல் அதை சுருட்டி பெட்டில் அடைத்துக்கொண்டேன்… காகிதத்தில் முக்கியமாக எதுவுமில்லை. அப்பா  ஏதோ எழுதிப் பார்த்து தேவையில்லை என கசக்கிப் போட்டது…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-215: ‘ரிப்ளை!’ எனும் அன்பின் மழை!

பதிவு எண்: 946 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 215 ஆகஸ்ட் 3, 2021 | காலை: 6 மணி ‘ரிப்ளை!’ எனும் அன்பின் மழை! இந்த கவிதையில் வரும் நான் என்பது நான் இல்லை, நீங்கள் என்பதும் நீங்களும் அல்ல. நான் என்பதும் நீங்கள் என்பதும் பொதுவெளியில் இயங்கும் ஒவ்வொரு ‘நானும்’, ஒவ்வொரு…

#கவிதை: கடமையைச் செய்!

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே! இதன் பொருள் என்ன தெரியுமா? பலனை உடனுக்குடன் ‘இன்ஸ்டண்ட்டாக’ எதிர்பார்க்காதே… அது உனக்கு எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத விதத்தில் எதிர்பார்க்காத சந்தோஷத்தை அள்ளி அள்ளித் தர ஓடோடி வரும் அதை வரவேற்பதற்காகவாவது நம்மை நாம் உற்சாகமாய் வைத்திருப்போமே! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software July 7, 2021…

#கவிதை: ‘எவ்வளவு’ எவ்வளவுகள்?

‘எவ்வளவு’ எவ்வளவுகள்? இந்தக்  கேள்வி ஆண்களை நோக்கிய கேள்வி மட்டும் அல்ல, பெண்களை நோக்கிய கேள்வியும் கூட! எவ்வளவு தன்னம்பிக்கையானவள் எவ்வளவு தைரியமானவள் எவ்வளவு சுயமானவள் எவ்வளவு நேர்மையானவள்… ஆஹா எவ்வளவு அற்புதமான மனுஷி! . . . இப்படி ‘எவ்வளவு’ எவ்வளவுகள்? எட்டி நின்று நாம் மற்றவர்களிடம் பழகுவதைப் பார்க்கும்வரை… கிட்டே நெருங்கி அவர்களிட(மு)ம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon