படைப்புகள்

1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர் உருவானது. என் உழைப்பையும் கல்வி அறிவையும் திறமையையும் முதலீடாக்கி நிறுவனத்தை வளர்க்கத் தொடங்கினேன். இடையில் MBA -வும் முடித்து பட்டம் பெற்றேன்.

1992-களில்   பெண்களுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று ஆசிரியர் பணி அல்லது திருமணம். ஆனால், என் கனவுகளே வேறு. என் பெயரில் கண்டுபிடிப்புகள் வரவேண்டும் என கற்பனை செய்து அதற்கேற்ப என் கல்வியோடு சேர்த்து என் திறமையையும் வளர்த்து மேம்படுத்தி வந்திருந்தேன்.

என் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது. அத்துடன் என் கல்வியறிவு,  திறமை, உழைப்பு என அனைத்தும் சேர்ந்துகொண்டு என் கனவை பலிக்கச் செய்தன.

எங்கள் காம்கேர் நிறுவன பேனரில்தான் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், வெப்சைட்டுகள், புத்தகங்கள் என அனைத்து படைப்புகளும் வெளிவருகின்றன.

 

(Visited 174 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari