பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்!

பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்! வண்ணமயமான நவராத்திரி அலங்காரம் கலைந்த நங்கநல்லூர் சாலைகள் முற்றிலும் வெறுமைக் கோலம். ஆனாலும், ஆஞ்சநேயர் கோயில் அருகில் மட்டும் ஓரிரு கடைகளில் நான் உள்ளே போக மாட்டேன் என கொலு பொம்மைகள் அடம் பிடிக்கும் குழந்தைகள் போல வரிசை கட்டி வீற்றிருந்தன. பூஜை சாமான் ஒன்று வாங்குவதற்காக…

சிங்கப்பூர், மலேசியா தீபாவளி!

சிங்கப்பூர், மலேசியா தீபாவளி! கடந்த வாரம் சிங்கப்பூர், மலேசியா பயணம். நாங்கள் சென்றதில் இருந்தே ஊரெங்கும் தீபாவளி கொண்டாட்ட தோரணைகள், தோரணங்கள். மலேசியாவில் தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை என்றார் டாக்ஸி டிரைவர் ஒருவர். செல்லும் இடமெங்கும் கண்களில் பட்ட துணிக் கடைகளில் எல்லாம் தீபாவளியை ஒட்டிய விற்பனைக் கூட்டம். உணவகங்களில் தீபாவளி பண்டிகைக்கான…

முன் அனுமானமும், அச்சு பிச்சு பேச்சுகளும்!

  முன் அனுமானமும், அச்சு பிச்சு பேச்சுகளும்! ஞாயிறு அன்று காலையில் எழுந்து பாலை எடுப்பதற்காக ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்தால், உள்ளே பல்ப் எரியவில்லை. அப்பா, ஸ்டபிலைசர் ஸ்விட்சை ஆன் ஆஃப் செய்து பார்த்தார். ஸ்டபிலைசரில் இருந்து இணைப்பை நீக்கி மெயினில் கொடுத்துப் பார்த்தார். ஃப்ரிட்ஜை ஐந்து நிமிடம் அணைத்து வைத்தும் பார்த்தார். ‘ம்… எதற்கும்…

பெண்ண்ண்ண்!

பெண்ண்ண்ண்! முன்பெல்லாம் நான்கு ஆண்கள் இருக்கும் கூட்டத்தில் ஒருவனாவது நல்லவனாக இருப்பான் என்பார்கள். அதனால்தான், இரவில் எலக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும்போது கூட கூட்டமில்லா பெண்கள் கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்த்து கூட்டமாக இருக்கும் பொது கம்பார்ட்மென்ட்டை தேர்ந்தெடுப்பார்கள். என் அம்மா தொலைபேசித் துறையில் இரவு, பகல் என 24 மணி நேர ஷிஃப்ட்டில் வேலை பார்த்தவர். இரவு ஷிஃப்ட்டுக்கு…

செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே!

செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே! நேற்று ஆதம்பாக்கம் வரை ஒரு வேலை. அப்பாவும் நானும் வேலை முடிந்து காரை நிறுத்திய இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு செருப்பு கடை. சிறிய கடைதான். ஆனால் மிக மிக நேர்த்தியாக இருந்தது. செருப்புக் கடையில் என்ன நேர்த்தி அமைந்துவிடப் போகிறது என நினைக்காதீர்கள். தூசி படியாமல்…

இசை கச்சேரியும், ஏஐ புத்தகமும்!

இசைக் கச்சேரிக்கு செல்பவர்கள் இசையை ரசிப்பார்கள். கூடுதலாக அங்கு கேண்டீன் போட்டிருந்தால் அந்த உணவு வகைகளை சுவைத்து சிலாகிப்பார்கள். இன்று என்னிடம் பேசியவர் சொன்ன விஷயம் இன்றைய பொழுதை இலகுவாக்கியது. இவரும் இசைக் கச்சேரிக்கு சென்றுதான் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இன்று மதியம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு போன் கால். பேசியவர் திருச்சியில்…

எத்தனை பெருமைமிகு தருணம்?

எத்தனை பெருமைமிகு தருணம்? Mind Blowing Picture! வயநாட்டின் முண்டக்கையில் நிலச்சரிவுக்குப் பிறகு, இரவும் பகலும் கடும் அயராத முயற்சியினால் 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை 31 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வெற்றிகரமாக கட்டி முடித்ததுள்ளது ராணுவம். இந்த ப்ராஜெக்ட்டுக்குத் தலைமை தாங்கியவரும், இந்த சாதனைக்குக் காரணமானவரும்தான் இந்தப் புகைப்படத்தில் பெய்லி பாலத்தில்…

கடமை எனும் டாப்பிங்!

ஒரு எழுத்தாளர் தனது கட்டுரையில் ஒரு காட்சியை விவரித்து அது குறித்த தன் சிந்தனையை எழுதி இருந்தார். எப்போதோ வாசித்தது. ஆனால் சாராம்சம் மறக்கவில்லை என்பதால் என் வார்த்தைகளில் விவரித்துள்ளேன். நிச்சயம் அவர்கள் இளம் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும். ஸ்கூட்டியில் முன்னே பள்ளி சீருடையில் ப்ரீகேஜி படிக்கின்ற வயதில் ஒரு சிறுவன், மகனாக இருக்க வேண்டும்….

நாகரிகம் பழகுவோம்!

நாகரிகம் பழகுவோம்! சென்னை ஆதம்பாக்கம் ஸ்ரீ லஷ்மி மஹாலில் மூன்று நாட்கள் நிகழ்வாக நடைபெற்று வந்த ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று. நிகழ்ச்சியை வருடா வருடம் சிறப்பாக நடத்தி வரும் ஸ்ரீராம் ஸேவா டிரஸ்ட், மதியம் வடை பாயசத்துடன் நிகழ்ச்சிக்கு வருகின்ற அனைவருக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்கின்றனர். நேற்று ஞாயிறு என்பதால்…

காரைக்குடி ஜாடிகள்!

காரைக்குடியில் செட்டிநாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பீங்கான் ஜாடிகள் பிரபலம். தனித்துவமாகவும் இருக்கும். பிப்ரவரி மாதம் 2024 –ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக ஒரு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். காரைக்குடி செல்வது அதுவே முதன்முறை என்பதால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கி இருந்து ஊரை சுற்றிப் பார்த்தோம். ஒருநாள் இரவு. சுற்றி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon