இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

மண்மணம் மாறாத மஞ்சரி!

மண்மணம் மாறாத மஞ்சரி! 2021-ம் ஆண்டு மஞ்சரி புது அவதாரம் எடுத்தது. நிர்வாகம் வேறொருவர் கைக்கு மாறியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  சுவாமிமலையில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. அதன் அறிமுகக் கூட்டம் சென்னையில் ஏற்பாடானபோது எனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முறையாக அழைப்பு வந்தது. அழைத்தவர், மஞ்சரியை மெருகேற்றி அதன் மண்மணம் மாறாமல் அதனை புது அவதாரம் எடுக்க…

வரம் பெற்ற இளவரசியும், குட்டி இட்லியும், பின்னே ஒரு தங்கத் தகப்பனும்!

வரம் பெற்ற இளவரசியும், குட்டி இட்லியும், பின்னே ஒரு தங்கத் தகப்பனும்! திடீர் பயணம். திட்டமிடாமல் கடைசி நிமிடத்தில் ஏற்பாடானதால் வழியில் A2B ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு முன்னால் உள்ள டேபிளில் ஒரு அப்பாவும் குட்டி மகளும். ஆறு ஏழு வயதிருக்கும் அந்த சிறுமி உட்கார வசதியாக உயரமான சேர்…

முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்!

  முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்! சந்தியாவுக்கும், சாந்தனுவுக்கும் விடுமுறை தினம். நானும், அப்பாவும் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு தாமதமாகும் என்று போன் செய்து தகவல் சொல்லி விட்டேன். நினைத்ததற்கும் மேல் நேரம் ஆகி இருட்டவும் தொடங்கி விட்டது. இரவு என்ன டிபன் செய்யலாம் என்று நினைத்தபடி வேகவேகமாக  வீட்டினுள் நுழைந்தோம். கமகமவென்று தோசை வாசனை…

அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை!

அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை! எனக்குத் தெரிந்த பெண் தன் மகள் மருத்துவப் படிப்பை நல்லபடியாக முடித்து ஹவுஸ் சர்ஜன் சேர்ந்தவுடன் பிரார்த்தனைக்காக மொட்டைப் போட்டுக்கொண்டார், மூன்று மாதங்களுக்கு முன்பு. அதன் பிறகு இப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். பாப் வைத்துக்கொண்டதைப் போல தலைமுடி வளர்ந்திருந்தது. நல்ல ப்ரொவஷனல் லுக். ‘ரொம்ப அழகா இருக்கு மேடம் ஹேர்…

வழி நெடுக பன்னீர் குளமும், இளநீர் தொப்பிகளும்!

வழி நெடுக பன்னீர் குளமும், இளநீர் தொப்பிகளும்! கொழுந்து விட்டு ‘பற்றி’ எறியாத குறையாக சென்னை வெயில். பர்சனல் வேலை ஒன்றுக்கு அவசியமாக மடிப்பாக்கம் வரை நேரடியாக செல்ல வேண்டிய சூழல். வீட்டில் இருந்தபடி கைவினைப் பொருட்கள் செய்து வரும் பெண்மணியிடம் ஆர்டர் கொடுத்திருந்தோம். வேலை முடிந்துவிட்டது, நேரில் வந்து பார்த்து ஓகே சொல்லிவிட்டால் ஃபைனல்…

வெயில் மழை!

வெயில் மழை! உடலைக் கருக்கும் சென்னை வெயில். இரண்டு தினங்கள் முன் ஒரு சோஃபா ஆர்டர் செய்திருந்தோம். அதை டெலிவரி செய்ய வருவதாக சொல்லி இருந்ததால், மதிய இடைவேளையில் காம்கேரில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். சொன்ன நேரம் தப்பாமல், 20, 22 வயதில் இரண்டு இளைஞர்கள் வியர்வைக் குளியலுடன் வீட்டிற்குள் கொண்டு வந்து அசம்பிள் செய்தார்கள்….

உலகின் ஆகப் பெரிய உசுப்பேத்தல் என்ன தெரியுமா?

உலகின் ஆகப் பெரிய உசுப்பேத்தல் என்ன தெரியுமா? ‘மேடம், அவங்கல்லாம் உங்க கால் தூசிக்குக் கூட சமமாகமாட்டார்கள்…’ அவரவர் கால் தூசி கூட அவரவர் அடி எடுத்து வைக்கும் அழுத்தத்துக்கு ஏற்பத்தானே ஒட்டும். பிறகெதற்கு அதை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும்? தூசி என்பது வெறும் தூசி அல்ல! தட்டிவிட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். தூசி…

#AI: ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்!

ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்! பாத்ரூமில் டைல்ஸ் மாற்றினோம். இரண்டு நாட்கள் இரண்டு பேர் வேலை செய்தார்கள். எங்கள் வீட்டு பில்டரிடமே அந்த வேலையை கொடுத்திருந்ததால், அவரிடம் வேலை செய்யும் இருவரை அனுப்பி இருந்தார். வேலை மிக நேர்த்தி. ஒரு முதன்மைப் பணியாளர். மற்றொருவர் அவருக்கு உதவியாளர். உதவியாளர் முதன்மைப் பணியாளரைவிட வயதில் மூத்தவர். வயது…

#AI: மெட்டாவெர்ஸ்

மெட்டாவெர்ஸ் இன்டர்நெட்டில் ஒரு புதிய உலகம். அந்த உலகை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். நம் அலுவலகமாகவோ, வீடாகவோ, திரை அரங்காகவோ, பூங்காவாகவோ, திருமண மண்டபமாகவோ, கல்லூரியாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அங்கே நம் உறவினர்களை, நண்பர்களை, அலுவகப் பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், விருந்தளிக்கலாம், பணி ஆலோசனை…

வேலையும், பக்தியும்!

வேலையும், பக்தியும்! சென்ற வாரம், பட்டுக்கோட்டைக்கு திடீர் பயணம். திருப்பட்டூரில் உள்ள A2B -ல் டிபன் சாப்பிட்டு செல்லலாம் என நினைத்துச் சென்றோம். சாப்பிட்டு முடித்ததும் ரெஸ்ட் ரூம் பயன்படுத்தச் சென்றேன். அந்த ஓட்டல் பெயர் பொறித்த சீருடை அணிந்துகொண்டிருந்த பெண் ஒருவர், கருமமே கண்ணாயினராக சுத்தம் செய்து கொண்டிருந்தார். கழிவறைகள் சுத்தமோ சுத்தம். அந்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon