காம்கேர் 33!

காம்கேர் 33!

எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் 33 ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

நீண்ண்ண்ண்ட நெடும் பயணம்!

1992 – ல் இதுபோன்றதொரு சரஸ்வதி பூஜை / விஜயதசமி நன்னாளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 33-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

33 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும் முன்னரே அத்துறையில் இரட்டைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏவும் முடித்து…

நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் தொழில்நுட்பப் பெண் பொறியாளர் என்ற விருதையும் பெற்று…

தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் எங்கள் காம்கேர் மூலம் நான் முனைந்த முயற்சிகளில் பல ‘முதன்’ முயற்சிகள். முன் உதாரணங்கள். ரோல் மாடல் ப்ராஜெக்ட்டுகள்.

குறிப்பாக, 33 ஆண்டுகளுக்கு முன்னரே இன்று பரபரப்பாக பேசப்படும் Ai தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் போட்டு ஆராய்ச்சிகள் பல செய்து முன்னோடியாக பல ப்ராஜெக்ட்டுகளை முன்னெடுத்து…

அதற்கெல்லாம் சாட்சியாக, தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும்… ஏன் உலகளாவிய முறையில் பல்வேறு கல்விக் கூடங்களில் எங்கள் காம்கேரின் Ai தயாரிப்புகளும், புத்தகங்களும், சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகளும் பாடத்திட்டமாக ஆய்வு குறிப்பேடுகளாக வீற்றிருக்கின்றன.

நீண்ட நெடும் பயணம்தான். ஆனால், களைப்பில்லை, சலிப்பில்லை, அலுப்பில்லை, அயற்சி இல்லை. அவ்வளவு சுகமான பயணம் என்று நினைக்க வேண்டாம். எது வந்தாலும் அதை பக்குவமாக கையாளும் மனப்பாங்கை இயல்பாகவே எனக்களித்து எல்லாவற்றில் இருந்தும் என்னை கேடயமாக இருந்து காப்பாற்றி வரும் இயற்கைக்கும், இறை சக்திக்கும், என் பெற்றோருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நவராத்திரி மாதத்தில் சரஸ்வதி பூஜை / விஜயதசமி நன்னாளில், என்றும் மனோரீதியாக எனக்கு ஆதரவாக நிற்கும் என் உடன் பிறந்தோருக்கும், என்னுடன் பயணிக்கும் எங்கள் காம்கேர் நிறுவன பொறியாளர்களுக்கும், உலகமெங்கும் எங்கள் காம்கேரின் தயாரிப்புகள் பரவலாக சென்றடையக் காரணமாக இருந்த / இருக்கும் எங்கள் மரியாதைக்குரிய வாடிக்கையாளர்களுக்கும்  என் அன்பையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர் (ComPcare Software)
அக்டோபர் 11, 2024 | வெள்ளிக்கிழமை


புதுமையான முறையில்
காம்கேர் புவனேஸ்வரியின் Ai அவதார் மூலம் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து!


English Version


ComPcare 33!

Our ComPcare Software Stepping into 33-rd Year!

What a long and fulfilling journey! Our ComPcare Software was founded on a day of Saraswathi Puja/Vijayadashami in 1992. Today, we proudly mark our 33rd year.

These 33 years have flown by, yet we have made significant strides with countless impactful projects.

Before computer technology made its mark in our country, I earned a dual degree in that field and completed my MBA. I was also honored to be recognized as the first female engineer to start an IT company in our nation.

Throughout Tamil Nadu, we have spread computer technology in various forms, through writing, speaking, audio, video, and software, pioneering many ‘firsts’ with ComPcare. These include model projects that set examples for others.

Notably, even 33 years ago, we laid the groundwork for today’s trending AI technology, leading numerous projects through extensive research.

As evidence of our efforts, our AI products, books, and software animations are incorporated into the curriculam of various educational institutions not just across Tamil Nadu but throughout India and even globally.

It’s indeed a long journey, yet it has not been tiresome or exhausting. I don’t see it as a struggle. No matter the challenges, I approach everything with a mindset of resilience, relying on nature and divine strength to guide and protect me.

I dedicate my love and gratitude to my parents, siblings, and the engineers of our ComPcare Software, especially during this Navaratri season on the day of Saraswati Puja/Vijayadashami Day.

Wishing everyone a blessed Saraswathi Puja and Vijayadashami!

With love,

ComPcare K. Bhuvaneswari, Founder
ComPcare Software
October 11, 2024 | Friday

(Visited 10,892 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon