சிங்கப்பூர், மலேசியா தீபாவளி!

சிங்கப்பூர், மலேசியா தீபாவளி!

கடந்த வாரம் சிங்கப்பூர், மலேசியா பயணம். நாங்கள் சென்றதில் இருந்தே ஊரெங்கும் தீபாவளி கொண்டாட்ட தோரணைகள், தோரணங்கள். மலேசியாவில் தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை என்றார் டாக்ஸி டிரைவர் ஒருவர். செல்லும் இடமெங்கும் கண்களில் பட்ட துணிக் கடைகளில் எல்லாம் தீபாவளியை ஒட்டிய விற்பனைக் கூட்டம். உணவகங்களில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் காரம் விற்பனை. பெரிய மால்களில் எல்லாம் அனைத்து முகப்புகளிலும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக சிறப்பு கோலம் மற்றும் அலங்கார தோரணங்கள். ஆங்காங்கே தீபாவளி நல்வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை உள்ளடக்கிய வண்ணமயமான தோரணங்கள். நாங்கள் சென்ற இடங்களுக்காக ஆங்காங்கே ஏற்பாடு செய்திருந்த டாக்ஸி டிரைவர்கள் நாங்கள் இறங்கும்போது புன்சிரிப்புடன் ‘ஹாப்பி தீபாவளி’ என வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர் (ComPcare Software)
அக்டோபர் 30, 2024 | புதன்கிழமை

(Visited 3,437 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon