ஸ்ரீபத்மகிருஷ் 2010 – விவேகானந்தர் பிறந்த நாள் விழா  

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை, தேசிய இளைஞர் தினமான விவேகானந்தரின் பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக

‘இயற்கையை காப்பாற்றுவோம் – பூமி வெப்பமயமாவதை தடுப்போம்’ என்ற சிறப்பு கட்டுரைப் போட்டியை 7, ஜனவரி 2010 அன்று நடத்தியது.

ஜனவரி மாதம் 12-ம் தேதி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழோடு ஸ்ரீபத்மகிருஷ் விருதும் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் மாணவ, மணவிகளை ஊக்கப்படுத்தி அவர்களை போட்டிக்குத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் தகுந்த மரியதை செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

இந் நிகழ்ச்சிக்கு
ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லச்
செயலாளர் தவத்திரு ஸ்வாமி சத்யஜானாநந்தா,
தாளாளர் ஸ்வாமி இந்துநாதாநந்தா,
விஜயபாரதம் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. நா. சடகோபன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை தந்து சிறப்பித்தனர்.

 நிகழ்ச்சியின் சிறப்பு

மயிலாப்பூர் சர் சிவசுவாமி கலாலயா உயர் மேனிலைப்
பள்ளி மாணவ, மாணவிகள்
பசுமைப்பட்டினம் – தெருக்கூத்து
என்ற சிறப்புக்
கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ராமகிருஷ்ணா மிஷின்
மாணவர்களின் பஜன்
ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்களின்
பக்தி பஜன் பார்வையாளர்களை
பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது

நிகழ்ச்சியை
மாணவ மாணவிகளுடன்
திரு. வி. கிருஷ்ணமூர்த்தி
திருமதி. கே. பத்மாவதி மற்றும் சிறப்பு விருந்தினர் திரு. நா. சடகோபன்
அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

விஜயபாரத பத்திரிக்கை ஆசிரியர்
திரு. நா. சடகோபன் அவர்கள்
மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்
இந்தியாவைப் பற்றியும்,
இந்திய நாட்டின் பெருமைகளைப் பற்றியும்
மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.

ஸ்ரீபத்மகிருஷ் விருது

இயற்கையைக் காப்பாற்றுவோம்-
பூமி வெப்பமயமாவதைத் தடுப்போம்
என்ற கட்டுரைப் போட்டியில்
வெற்றி வெற்ற
20 மாணவ-மாணவிகளுக்கு
சான்றிதழுடன்
ஸ்ரீபத்மகிருஷ் விருதும் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற
250 மாணவ-மாணவிகளுக்கும்
சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஒரு மாணவியே

நிகழ்ச்சியை,
மேற்கு மாம்பலத்தில் உள்ள
ஜெயகோபால் கரோடியா
இந்து வித்யாலயா  பள்ளியில்
ஏழாம் வகுப்புப் படிக்கும் செல்வி. ஜெய ரூபிணி
தன் இனிமையானக் குரலால்,
மழலைத் தமிழில்
தொகுத்து வழங்கினாள்.
இது நிகழ்ச்சியின்
சிறப்பு விருந்தினர்களாலும்,
பார்வையாளர்களாலும் பெரிதும்
பாராட்டப்பட்டது.

ஸ்ரீபத்மகிருஷ் விருது பெற்ற
மாணவ,மாணவிகள் விழாவின்
சிறப்பு விருந்தினர் திரு. நா. சடகோபன் மற்றும்
ஸ்ரீபத்ம கிருஷ் அறக்கட்டளை நிர்வாகிகள்
திரு. வி. கிருஷ்ணமூர்த்தி,
திருமதி. கே. பத்மாவதி,
காம்கேர் புவனேஸ்வரி
ஆகியோருடன் புகைப்படம்
எடுத்துக் கொள்ள விழா இனிதே நிறைவுற்றது.

மீடியா செய்திகள்

அழைப்பிதழ்

(Visited 125 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon