மீடியா பங்களிப்புகள்

 

21 வயது வரை (1982 – 1992) வெளியான கதை-கவிதை-கட்டுரைகள்!

12 வயதில் முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’, ஓவியம் ஆழியின் கைவண்ணத்தில். என் திறமைக்கு மகுடம் சூட்டிய கதையை அங்கீகரித்த பத்திரிகை கோகுலம்.

அதைத் தொடர்ந்து கலைமகள், சாவி, ராண, ராஜம், தினமலர் வாரமலர், நாரதர், பாக்யா, விஜயபாரதம், சுமங்கலி, சுபமங்களா என அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும், இல்லத்தார் சுடர், தமிழ் மலர், புஷ்கின் இலக்கியப் பேரவை, பீகாக், தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் என சிறு பத்திரிகைகளிலும் 100–க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என என் படைப்புகள் வெளியாகியுள்ளன.

21 வயதுக்குள் 100 – க்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்து பத்திரிகை உலகம்   என்னை  எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தியது. நினைவிலும், சேகரிப்பிலும் பத்திரப்படுத்திய படைப்புகளின் விவரங்கள்.

கோகுலம்-செய்யும் தொழிலே தெய்வம்-1982

கோகுலம்-கோபுவின் ஆசை-1987

நாரதர்-எங்க மாமியார்-1989

தேசிய பார்வையற்றோர் சம்மேளனம்-கண் பார்வையற்றோருக்கு எனது பணி-1989 (விருது பெற்றது)

தினமலர் – வாரமலர்-கல்யாணமான புதுசு-1989 (விருது பெற்றது)

கலைமகள்-வேரை விரும்பாத விழுதுகள்-1989

விஜயபாரதம்-அன்றாட வாழ்வில் தேச உணர்வு-1990 (விருது பெற்றது)

ராஜம்-என் கணவர் பரிட்சைக்குப் படிக்கிறார்-1990

ராஜம்-அம்மா பொய் சொல்கிறாள்-1990

ராஜம்-ஜோக்குகள்-1990

ராணி-ஜோக்குகள்-1990

பாக்யா-மயக்கம்-1990

தமிழ் மலர்-ப்ரீதி-1990

சுபமங்களா-ஜோக்குகள்-1990

சாவி-நியதிகள் மாறலாம்-1990  (விருது பெற்றது)

இல்லத்தார் சுடர்-பாரா முகம்-1990

விஜயபாரதம்-நவபாரத சிற்பிகள் நாம்-1991

ராஜம்-எதுக்காக அப்படி?-1991

புஷ்கின் இலக்கியப் பேரவை -தொலைதூரம் காலடியில்…-1991  (விருது பெற்றது)

பீகாக்(AVC College Magazine) -பெண் குழந்தைகள் ஆண்டு-1991

தினமலர்-ஜோக்குகள்-1991

இல்லத்தார் சுடர்-யதார்த்தங்கள்-1991

இல்லத்தார் சுடர்-ஒரு எழுத்தாளி காப்பாற்றப்படுகிறாள்-1991

பீகாக்(AVC College Magazine) -சமுதாய முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்கு-1992

சுமங்கலி-டாக்டரம்மா-1992

சுமங்கலி-சந்தேகம்-1992

சுமங்கலி-எது தானம்?-1992

Go Top

 தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App 

1992 முதல் இன்று வரை

காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு (1992) தொழில்நுட்பம் சார்ந்தும்,  வாழ்வியல், மனிதநேயம், நேர்மறை சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்தேன். தொழில்நுட்பக் கட்டுரைகள், தொடர்கள் என மீண்டும் பத்திரிகை உலகம் என் திறமைக்கு களம் ஏற்படுத்திக்கொடுத்தது.

3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 50-க்கும் மேற்பட்டத் தொடர்கள், 125 -க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நூற்றுக்கணக்கில் மேடைபேச்சுகள் என என் தொழில்நுட்ப  அறிவையும், வாழ்வியல் கருத்துக்களையும்  பல்வேறு தளங்களில் பரப்பி வருகிறேன்.

எங்கள் காம்கேர் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.

எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்தும்  சாஃப்ட்வேர்கள் குறித்து  பத்திரிகைகளில் எழுதி வருகிறேன்.  இதன் மூலம் தொழில்நுட்பம் மிக எளிதாக சாமானியர்களையும் சென்றடைகிறது.

‘நம் தோழி’ – சக்தி மசாலா குழும பத்திரிகை –  வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – Apr 2019 – Till Date

மின்னம்பலம்.காம் / minnambalam.com – கனவு மெய்ப்பட – Nov 2018 – Apr 2019 (Every Saturday)

தினசரி.காம்/ dhinasari.com – இங்கிதம் பழகுவோம்  – Oct 2018 – Apr 2019 (Every Tuesday)

புதியதலைமுறை பெண் – வாழ்க்கையின் OTP – Aug 2018 – Till Date

விகடகவி App Magazine / vikatakavi.in-கம்ப்யூட்ரோஸ்கோப் – தொழில்நுட்ப கட்டுரைகள் –Jan  2018 – Apr 2018

விகடகவி App Magazine / vikatakavi.in-கனெக்‌ஷன் – வாழ்வியல் கட்டுரைகள்-Nov 2017 – Jan 2018

விவேகானந்தம்150  டாட் காம்-விவேகானந்தர் பற்றிய கட்டுரைகள் www.vivekanandam150.com-Jan 2013 – Jan 2014

லேடீஸ் ஸ்பெஷல்-பெண்களை புரிந்துகொள்ளுங்கள்-Dec 2016 – Dec 2017

லேடீஸ் ஸ்பெஷல்-கம்ப்யூட்டரே கண் கண்ட தெய்வம்-Feb 2005 – Sep 2006

ஒரே நாடு-மாற்றத்துக்கான பாஸ்வேர்ட்-Feb 2017 – July 2017

விஜயபாரதம்-பாரதப் பெருமிதங்கள்-Aug 2016 – Dec 2016

விஜயபாரதம்-புத்தம் புதிதாய் சிந்திப்போமே-Feb 2014 – Jan 2015

விஜயபாரதம்-நல்லதோர் வீணை செய்தே-Feb 2015 – Dec 2015

விகடன் டாட் காம்-கம்ப்யூட்ராலஜி in vikatan.com-Oct 2015 – Nov 2015

குங்குமம்-Big Data தகவல் சூழ் உலகின் பிக் பிரதர்-July 2017 – Aug 2017

‘தி இந்து’ – தமிழ் – பெண் இன்று -வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்-Sep 2016 – Mar 2017

குமுதம் சிநேகிதி-ஹாய் ஹம்ப்யூட்டர்-Jun 2007 – Jan 2009

தினமலர்  வாரமலர்-வெளிநாட்டுக் காற்று-Nov 2009 – Jan 2010

தினமலர்  பெண்கள் மலர்  -ஆண்ட்ராய்ட் போன் அதிசயங்கள்-May 2016 – Nov 2016

தினமலர்  பெண்கள் மலர்  -காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்-Sep 2008 – Feb 2009

தினமலர்  பெண்கள் மலர்  -இவ்வளவுதான் கம்ப்யூட்டர்-Dec 2012 – Jun 2013

தினமலர்  கம்ப்யூட்டர் மலர்  -முதல் பக்க கவர் ஸ்டோரி-Apr 2008 – Dec 2009

கல்கி-காசு கொட்டும் மல்டி மீடியா – முழுமையான இணைப்பு புத்தகம் –Jun 13, 2004

கோகுலம்-லாஜிகா – Logica Puzzle for Students-Jul 2013 – Jun 2014

mmsmartlady.blogspot.com-ஸ்மார்ட் லேடி மங்கையர் மலர் வலைப்பூ பராமரிப்பு –May 2013 – Sep 2014

மங்கையர் மலர்-ஸ்மார்ட் லேடி தொடர் in Print-Feb 2013 – Jan 2014

மங்கையர் மலர்-உலகம்  உன் கையில், தொழில்நுட்பத் தொடர்-1998-1999

தமிழ் கம்ப்யூட்டர்-தொழில்நுட்பத் தொடர்கள்-1997 – 2003

 

வானொலி தொலைக்காட்சித் தொடர்கள்

1992 முதல் இன்று வரை

மக்கள் தொலைக்காட்சி-திறமையை சம்பாத்யமாக்கும் தொழில்நுட்பத் தொடர்-Jun 14, 2017 – Jun 20, 2017

தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் – TTN-அயல்நாட்டு வாழ் தமிழர்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் தொழில் வாய்ப்புகளும்-365 எபிசோடுகள் (Each  1/2  an Hour)

பொதிகை – தூர்தர்ஷன்-பெண்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் சுய தொழில் வாய்ப்புகளும்-Jun 2005 – Sep 2005

ஜெயா டிவி-இனிய இல்லம்– பெண்களுக்கான கம்ப்யூட்டர் கல்வி வேலை/தொழில்வாய்ப்பு-2006 – 2010 வரை தொடர்ச்சியாக

Go Top

கட்டுரைகள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App 

1992 முதல் இன்று வரை

மல்லிகை மகள் –  ‘வலை’க்குரல் – ஏப்ரல் 2019

குங்குமச் சிமிழ் – கூகுள் ப்ளஸ் Closed தகவல்களை சேமிப்பது எப்படி? – March 1-15, 2019

தினமலர் நாளிதழ் – கூகுள் ப்ளஸ் ஏன் மூடப்படுகிறது? – Feb 13, 2019

 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் – சப்ளை Vs டிமாண்ட் – Feb 2019

பஞ்சு மிட்டாய் –  ஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க! – Dec 13, 2018

மாணவர் சக்தி – பாரதியின் அடையாளங்கள்! – Dec 2018

 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் – நீங்கள் கற்ற கல்வி நிலைக்க – Nov 2018

ஹிந்துமித்ரன் – பாரதியை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா? – Oct 15-31, 2018

தினமலர் – செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு – Oct 19,2018 

குங்குமச்சிமிழ் – 4 ஆம் தொழில்புரட்சி  – Oct 1-16, 2018 & Oct 16-31, 2018

பஞ்சுமிட்டாய்.காம் – கோகுலம் சொல்லும் செய்தி – Sep 24 2018

தினமலர் – சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? – Sep 23, 2018 

கல்கி-நல்ல நண்பன் மோசமான எதிரி –  சமூகவலைதளங்களில் பாதுகாப்பு!-Jul 2018

குங்குமம்-தகவல் கசிவு! உண்மை நடந்தது என்ன… ஃபேஸ்புக்கில்?-Mar 2018

குங்குமச் சிமிழ்-உயிருக்கு உலைவைக்கும் ‘ப்ளூவேல் ஆன்லைன் கேம்’-Sep 2017

காண்டீபம்-இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம்-Jan 2017

காண்டீபம்-நிவேதிதையின் கல்வித் தொண்டு -Oct 2016

விஜயபாரதம்-வெளிவெப்பம் இருக்கலாம், வீட்டு நிழல் இருக்கணும்-Jul 2016

குங்குமச் சிமிழ் -சமூக ஊடகங்களில் ஊடுருவும் வக்கிரங்கள்-Jul 2016

தினமலர் பெண்கள் மலர்-சமூக வலைதளங்களில் ஆபாசப் புகைப்படங்கள், ஜாக்கிரதை-Jul 2016

சுட்டி விகடன்-சுட்டீஸ்களுக்கு ஆப்ஸ் குறித்த தொழில்நுட்பத் தகவல்கள்-Jul 2016

குங்குமச் சிமிழ் -கம்ப்யூட்டர் படித்தால் காசு அள்ளலாம்-Jun 2016

குங்குமம் தோழி-இண்டர்நெட் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?-Jun 2016

தினகரன் கல்வி மலர்-மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல-Apr 2016

தினகரன் ஆன்மிகம்-மகத்துவம் மிக்க மகாமக தானங்கள்-Feb 2016

விஜயபாரதம்-கலிகாலம்-Feb 2016

குங்குமம் தோழி-சைபர் க்ரைம் புகார் கொடுப்பது எப்படி-Feb 2016

விஜயபாரதம்-மஹாமகம் -Feb 2016

அவள் விகடன்-சோஷியல் மீடியா சீண்டல்கள் -Dec 2015

புதிய வாழ்வியல்-இணையத்தில் வேண்டும் சமநிலை-May 2015

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?-Mar 2015

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-திருட்டே இல்லாத ஊர்-நம்நாட்டில் தான்-Dec 2014

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-தினமும் லட்சம் பேருக்கு அன்னதானம்-Jun 2014

மங்கையர் மலர்-நம்பிக்கை நெஞ்சில் வை-May 2014

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-உலகிலேயே மிகப் பெரிய பள்ளி நம் நாட்டில்தான்-Apr 2014

ஜூனியர் விகடன்-‘ஒஃப் டே’-Mar 2014

அவள் விகடன்-பணம் கொட்டும் கணினித் துறை-Feb 2014

http://www.puthiyathalaimurai.com-வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! -Sep 2013

புதியதலைமுறை வெப்சைட்-போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள்-Sep 2013

குங்குமச் சிமிழ் -பிடித்த வேலையா, பிடித்த வேலையா-Aug 2013

வளர்தொழில்-பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்களின் மனநிலை-Jul 2013

அமுதசுரபி -ஐ.டியில் ஐடியல் பெண்கள்-Feb 2012

கோகுலம் கதிர்-பிசினஸ் பெண் புலிகள் சவாலா? சக்ஸஸ் தான்-Mar 2011

அம்மன் தரிசனம் -நிறைமணி விழா – ஒரு வேளாண்மை கொலு-Feb 2011

தினமலர் வாரமலர்-அமெரிக்கா என் பார்வையில்-Nov 2009

 

சிறப்புக் கட்டுரைகள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App 

1992 முதல் இன்று வரை

அமுதசுரபி தீபாவளி மலர்-இனி வரும் வெர்ச்சுவல் உலகின் அதிசயங்கள்-2015

அமுதசுரபி தீபாவளி மலர்-பழமையின் பரிணாம வளர்ச்சியே புதுமை-2010

அமுதசுரபி தீபாவளி மலர்-மல்டிமீடியாவில் ஓவியங்கள்-2005

 

விஜயபாரதம் தீபாவளி மலர்-சில நேரங்களில் சில முகநூல் மனிதர்கள்-2017

விஜயபாரதம் தீபாவளி மலர்-புதிய பாதையும் புதிய பார்வையும்-2016

விஜயபாரதம் தீபாவளி மலர்– ‘இங்கிதமாக’ பழகுவது எப்படி?-2015

விஜயபாரதம் தீபாவளி மலர்-நீங்களாகவே உங்கள் பிளாகை வடிவமைப்பது எப்படி?-2013

விஜயபாரதம் தீபாவளி மலர்-இலவச மடிக்கணினியின் உபயோகங்கள்-2012

விஜயபாரதம் தீபாவளி மலர்-உறவுச் சங்கிலியாக சோஷியல் நெட்வொர்க்குகள்-2011

விஜயபாரதம் தீபாவளி மலர்-தீராத நோய் தீர்த்து வைக்கும் தேவாரப் பாடல்-2010

 

விகடன் தீபாவளி மலர்-இங்கிலாந்தின் நன்கொடை சகோதரி நிவேதிதை-2016

விகடன் தீபாவளி மலர்-மனமிருந்தால் மார்க்கமுண்டு-2013

 

லேடீஸ் ஸ்பெஷல் – நம் அடையாளங்கள் – 2018

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்-இன்றும் அன்றும் என்றும் பெண்-2016

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்-கதை சொல்லம்மா கதை சொல்லு-2013

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்-பஞ்ச தந்திரம்-2011

 

திரிசக்தி தீபாவளி மலர்-திருஞானசம்மந்தரின் முதல் பாடலும் நிறைவுப் பாடலும்-2010

 

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்-நிழல் நிஜமான கதை-2012

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்-நால்வகை இலக்கியங்கள்-2011

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்-பன்னிரு திருமுறை விழாக்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம் –2010

 

விகடன் இயர் புக்-பிக் டேட்டாவும், திக் டேட்டாவும்-2018

விகடன் இயர் புக்-உலகின் மிகச்சிறந்த தானியங்கி புரூஃப் ரீடர் – Grammarly!  –2017

விகடன் இயர் புக்-மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள்-2016

விகடன் இயர் புக்-ஆப்ஸ் – ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ்-2015

விகடன் இயர் புக்-சைபர் க்ரைம் தொழில்நுட்ப விவரங்கள்-2014

விகடன் இயர் புக்-அத்தனை பேருக்கும் வேலை, அசத்தப் போகிறது தமிழகம்-2013

Go Top

பதிப்பளராகவும் எழுத்தாளராகவும் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்…

1992 முதல் இன்று வரை

‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி  ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.

உங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு,  நான் வழிகாட்டிய  படங்களுடன்  கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம். ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.

தற்போது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். சூரியன் பதிப்பகம் வாயிலாக நான் எழுதியுள்ள கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம், ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் போன்றவை தமிழ் பதிப்பக உலகில் முதன் முதலில் தமிழில் வெளியான  மொபைலுக்கான புத்தகங்கள்.

மனதை Format செய்யுங்கள், குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், திறமையை பட்டைத் தீட்டுங்கள், இப்படிக்கு அன்புடன் மனசு, படித்த வேலையா பிடித்த வேலையா,  என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதி உள்ளேன்.

இப்படியாக  தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக   நான் எழுதிய 125 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள்  பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாகவும்,  தமிழகமெங்கும் உள்ள அனைத்து நூலகங்களிலும் உள்ளன.

இபுக்ஸ்களை எங்கள் காம்கேர் வெளியீடாக வெளியிட்டு வருகிறோம். அவை அமேசான் கிண்டிலில் கிடைக்கும்.

புத்தகங்களை பார்வையிட… http://compcarebhuvaneswari.com/?p=1354

Go Top

பத்திரிகையாளராக  வெளியிட்ட மாத இதழ்…

2003-ம் ஆண்டில் இருந்து சில வருடங்கள் ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற  கம்ப்யூட்டர் மாத இதழுக்கு ஆசிரியராக  இருந்து, அந்தந்த இதழுக்குப் பொருத்தமான  ‘மல்டிமீடியா சிடி’ வடிவமைத்துத் தரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்.  அந்த பத்திரிகையின் அச்சு பிரதி மற்றும் டிஜிட்டல் பிரதி தயாரிப்புகள் இரண்டுமே காம்கேரின் பணிகளுள் ஒன்றாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Go Top

ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும், ஆப்களும்…

2016 – 2018  வரை  தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருந்தேன்.

2013-2014 வரை கல்கி குழுமத்தின் ஒரு அங்கமாக வெளிவரும் மங்கையர் மலர் பத்திரிகையில் ஸ்மார்ட் லேடி தொடர் எழுதி வந்ததோடு அதற்காகவே ஒரு பிளாகை உருவாக்கி வடிவமைத்து அதில் வாசகிகளின் பங்களிப்பை பப்ளிஷ் செய்து வந்ததோடு, ஃபேஸ்புக் மூலம் வாசகிகளின் தொழில்நுட்ப சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வாரத்தில் 2 நாட்கள் ஃபேஸ்புக் சாட் செய்து மங்ககையர் மலர் வாசகிகள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். https://mmsmartlady.blogspot.com/

ஜனவரி 2013 – ஜனவரி 2014  வரை  விவேகானந்தரின் 150-வது வெயந்தியை ஒட்டி நடத்தப்பட்டு வந்த vivekanandam150.com என்ற வெப்சைட்டில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளை தொடர்ச்சியாக ஒருவருடம் எழுதிவந்ததோடு அந்த வெப்சைட்டின் தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தேன். http://www.vivekanandam150.com

ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிருஷ்டி குழுமத்தில் இருந்து வெளிவரும் அமிழ்தம் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருக்கிறேன். http://amizhthamemagazine.blogspot.com

Go Top

பேச்சாளராக…

1992 முதல் இன்று வரை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாக இருந்து வருகிறேன்.

வருடந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான தொழில்நுட்ப கருத்தரங்குகளையும்,  குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு  ஒர்க்‌ஷாப்புகளையும் நடத்தி  வருகிறேன்.

ஒர்க்‌ஷாப்புகள் செய்திகளைப் பார்வையிட
http://compcarebhuvaneswari.com/?cat=37

 

Go Top

அனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை  

Since 1992 

கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது.  முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.

இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.

அடுத்தடுத்து  இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.

அனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமானது.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.

இப்போது  மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்.

Go Top

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!

1992 முதல் இன்று வரை

வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன.

குறளை அப்படியே படித்தல், தொடர்ந்து குறளை இனிமையான குரலில் பாடுதல்,  பின் அதன் விளக்கம், இறுதியில் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பொருத்தமான கதைகளுடன் கூடிய எளிய விளக்கம் என அதிகம் படிக்காத மக்களுக்கும் புரியும் வண்ணம் தயாரித்து வழங்கினேன்.

இதுபோல தினம் ஒரு கதை நிகழ்ச்சி  வருடம் முழுவதும் (365 நாட்கள்) தினமும் ஒலிபரப்பாகி வந்தது.

ஆல் இந்தியா ரேடியோவில் ‘கோடை விடுமுறையில் மாணவர்கள் படிக்க வேண்டிய தொழில்நுட்ப கல்வி’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் என் நேர்காணல்களும் ஒலிபரப்பாகி இருக்கின்றன. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன்.

Go Top

தொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக! 

1992 முதல் இன்று வரை

கம்ப்யூட்டர், இண்டர்நெட், மொபைல் தொழில்நுட்பம் என டெக்னாலஜி தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி, தேவையான கிராஃபிக்ஸ் விளக்கப்படங்கள் தயாரித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக மக்களுடன் பேசி விளக்கம் கொடுத்து  தமிழகமெங்கும் தொழில்நுட்பத்தை தமிழில் கொண்டு சென்றதில் எங்களுக்குப் பெரும்பங்குண்டு.

ஜெயா டிவி, பொதிகை டிவி, மக்கள் டிவி என அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர், இண்டர்நெட், மொபைல் தொழில்நுட்பம் சார்ந்த  கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி (தயாரித்து) வந்திருக்கிறேன்.

குறிப்பாக ஜெயா டிவியில்  இனிய இல்லம் என்ற நிகழ்ச்சி  தொடர்ச்சியாக 5 வருடங்கள்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பானது. ஸ்கிரிப்ட் எழுதுதல், தேவையான கிராஃபிக்ஸ் விளக்கப்படங்கள் தயாரித்தல், ஷூட்டிங் என அனைத்தும் எங்கள் காம்கேரில் தான்.

தவிர வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காகவும் TTN – தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் மூலம் 365 எபிசோடுகள் (ஒவ்வொன்றும் 1/2 மணி நேரம்) தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை  நடத்தி (தயாரித்து)  வந்திருக்கிறேன்.

மைசூர் பல்கலைக்கழகத்துக்காக அவர்கள் உயர்கல்வி பாடநூல்களுக்கான வீடியோ நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி இருக்கிறேன்.

மக்கள் தொலைக்காட்சியில் (ஜூன் 2017) திறமையை சம்பாத்யமாக்க உதவும் தொழில்நுட்பத் தொடரை  வழங்கி இருக்கிறேன்.

ஆவணப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்

1992 முதல் இன்று வரை

ஆவணப்படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் அப்பா அம்மாவுக்கும் எங்களுக்குமான புரிதல், அன்பு, நட்பு போன்றவற்றை வரும் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில்   ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தை (1-1/2 மணி நேரம்) இயக்கினேன். இதுவே நான் இயக்கிய முதல் ஆவணப்படம். https://youtu.be/k0CFnRpqjnk

அடுத்து  இந்திய மேற்கல்விக்கும், அயல்நாட்டு மேற்படிப்புக்குமான ஒப்பீடு (Comparative Study of Higher Studies in USA & in India) என்ற ஆவணப்படத்தை அமெரிக்காவில்  மிசெளரியில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஷீட்டிங் எடுத்து தயாரித்தேன். இந்த அனுபவம் விஷூவல் மீடியா  துறையில் சாதிப்பதற்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து தனி மனிதர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காக ஆவணப்படங்கள் தயாரிக்க ஆர்ம்பித்தேன்.

Go Top

(Visited 300 times, 1 visits today)
error: Content is protected !!