தமிழில் சுருக்கமாக

காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
Since 1992

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 27 ஆண்டுகளாக  செயல்பட்டுவருகிறார்.  இதுவரை 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் 100-க்கும் மேற்பட்டவை தொழில்நுட்பத்துக்காக,  25-க்கும் மேற்பட்டவை வாழ்வியலுக்காக. இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளன.

பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அங்கு தயாரித்த ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பல பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும்  நடைபெறும் கருத்தரங்களில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்துவருகிறார்.

இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தில், மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கலாசாரப் பரிமாற்றங்கள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைமுறையைப் பாதிக்கின்றன, அவற்றில் எவை  மேம்பாட்டுக்குரிய திருப்பங்கள், எவை திணிப்புகள் என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்.

இந்த நிறுவனத்தில் சாஃப்ட்வேர்கள் தயாரித்தல், வெப்சைட்டுகளை வடிவமைத்தல், மல்டிமீடியா அனிமேஷன் சி.டி-கள் தயாரித்தல், கல்வி, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல்துறை சார்ந்த இ-புத்தகங்களை உருவாக்குதல், ஆவணப்படங்கள் தயாரித்து வெளியிடுதல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர், ஹார்டுவேர், இன்டர்நெட், மொபைல் ஆப்ஸ் சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட நூல்களையும், வாழ்வியலுக்காக 25-க்கும் மேற்பட்ட நூல்களையும்  எழுதியுள்ளார். இவர் தமிழில் எழுதிய அத்தனை தொழில்நுட்பப் புத்தகங்களும் நம் தமிழக மக்களிடையே மிகவும் பிரசித்தம்.  இவர் ஆங்கிலத்தில் எழுதிய பல தொழில்நுட்ப  நூல்கள் கல்லூரி மாணவர்களிடையே பிரசித்தம்.

இவர்  எழுதிய  ‘ஃபோட்டோஷாப்’ புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் வந்தது பெருஞ்சிறப்பு.

தமிழகம்,  இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா,  ஸ்ரீலங்கா, மாஸ்கோ போன்ற நாடுகளிலுள்ள  நூலகங்களில் இவரது  புத்தகங்கள் இடம்பெற்று வாசகர்களுக்கிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் ஆய்வு நூல்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும் உள்ளன.

மேலும் இவரது  நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்அனிமேஷன்இகன்டன்ட்ஆடியோ வீடியோ படைப்புகளும்  பாடதிட்டமாக இடம்பெற்றுள்ளன.

இவரது தொழில்நுட்பப் புத்தகங்களும் இவரது நிறுவன சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகளும் பாடதிட்டமாக இருப்பதுடன் இவரது  தொழில்நுட்ப தயாரிப்புகளை வைத்து ஆராய்ச்சி செய்து  Ph.D பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக சைபர் க்ரைம் குறித்து இவர் எழுதி விகடன் வாயிலாக வெளியான  ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’என்ற புத்தகம்  சைபர் குற்றங்களும் தீர்வுகளும் என்ற ஆராய்ச்சிக்கும், இவர்  எழுதி மணிவாசகர் பதிப்பகம் வாயிலாக வெளியான   ‘டிஜிட்டல் நூலகம்’ என்ற புத்தகம் நூலகத்துறை சார்ந்த ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் தவிர, குழந்தைகள், பக்தி, இலக்கியம், ஆன்மிகம், மனிதவள மேம்பாடு பற்றிப் பல முன்னணிப் பத்திரிகைகளில் எழுதிவருகிறார். அவை சம்மந்தப்பட்ட சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார்.  12-வயதில் இருந்தே எழுதத் தொடங்கியவர்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கிய 1992-களிலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றதால், ‘தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற விருதைப் பெற்றுள்ளார்.

தன் பெற்றோரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினரில் (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள் Etc.,) திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’விருதளித்தும் கெளரவிக்கிறார்.

விரிவான தகவல்களுக்கான லிங்குகள்:

காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம் ஆண்டில் இருந்து…

காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்கள் சுடச் சுட!

சிறுகதைகள் – 100 க்கும் மேல்

கட்டுரைகள் – 3000 க்கும் மேல்

தொடர்கள் – 100 க்கு மேல்

புத்தகங்கள் – 125 க்கும் மேல்

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!

பத்திரிகையாளராக  வடிவமைத்து வெளிவந்த மாத இதழ் – 1 (மூன்று வருடங்கள் ஒவ்வொரு மாதமும்)

ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும் – 4

பேச்சாளராக பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 100 க்கும் மேல்

அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள்  தயாரிப்பாளராக – 200 படைப்புகளுக்கும் மேல்

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக – 1000 படைப்புகளுக்கும் மேல்

தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ஆவணப்பட கிரியேடிவ் டைரக்டராக – 500 படைப்புகளுக்கும் மேல்

(Visited 356 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari