‘விகடன்’ பா.சீனிவாசன்
ஓர் இனிய நாள். எங்கள் காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டில் விகடன் வாயிலாக எனது 100-வது புத்தகம் (கம்ப்யூட்ராலஜி) இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு மாதத்தில் (ஏப்ரல் 2017) வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்புக்கு முன்பே புத்தகம்…
‘தமிழ் கம்ப்யூட்டர்’ ஜெயகிருஷ்ணன்
திரு. க.ஜெயகிருஷ்ணன்! இவருக்கும் எனக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. வளர்தொழில் என்னும் பத்திரிகை ஆசிரியரான இவர் தமிழ் கம்ப்யூட்டர் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து 25 வருடங்களாகின்றன. எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் தற்போது 25-ஆம் ஆண்டில் சில்வர் ஜூப்லி வருடத்தில். என்னுடன் பயணித்து வரும் நல்லுள்ளங்களை நேரில் சந்திக்கும் முயற்சியில் நேற்றைய சந்திப்பு இவருடன்….
‘மணிமேகலை பிரசுரம்’ ரவி தமிழ்வாணன்
2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் எங்கள் முதன்மைப் பணியாக இருந்தாலும் எழுத்து என் உயிர்மூச்சு. என் சாஃப்ட்வேர் துறையில் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அறிவை எழுத்துவடிவில் அச்சு புத்தகமாகவும், இ-புத்தகமாகவும் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாகவே வெளியிட்டு அதிலும் முத்திரைப் பதித்து வருகிறோம். என்…
‘கண்ணதாசன் பதிப்பகம்’ காந்தி கண்ணதாசன்
2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. இதை ஒரு நாள் விழா வைத்து கொண்டாடிவிடாமல் இந்த வருடம் முழுவதும் என் புரொஃபஷனில் என்னுடன் பயணித்த அத்தனை நல்லுள்ளங்களையும் நேரில் சந்திக்க நினைத்து அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. 1992-களில் எங்கள் காம்கேர் சாஃட்வேர்…
’அநுராகம்’ நந்தா
பிள்ளையார் சுழி போட்டவர்! சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணியாக சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் என்றிருந்த நிலையில் எங்கள் படைப்புகள் மூலம் நான் கற்றறிந்த தொழில்நுட்பங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளியிட ஆரம்பித்தேன். என் அறிவுத் திறமையை எழுத்துக்கள்…