என் தாய் திருமதி பத்மாவதி,
தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே
தொலைபேசித் துறையில்
40 வருட காலம்
கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து
படிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.
தாய் திருமதி பத்மாவதி,
Senior Telephone Supervisor ஆகவும்,
தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி
Sub Divisional Engineer ஆகவும்
பணியாற்றினார்கள்.
எனக்கு ஒரு தங்கை (ஸ்ரீவித்யா) ஒரு தம்பி (சுவாமிநாதன்).
இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறை வல்லுநராக பணியாற்றுகிறார்கள்.
அலுவலக பணிஇட மாற்றல் (Transfer) காரணமாக
நாங்கள் இதுவரை பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளோம்.
விதவிதமான ஊர்கள்…
வித்தியாசமான சூழ்நிலைகள்…
வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர்கள்…
இவைகளின் காரணமாக
நாங்கள்
என்றும் புத்துணர்வோடு,
புதுப்பொலிவோடு,
நல்ல கற்பனைத் திறனோடு வளர முடிந்தது.
சிறுவயது முதலே
எங்கள் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில்
ஆங்காங்கே இருக்கும் ஆஸ்ரமங்களுக்கு சென்று
அங்குள்ள குழந்தைகளோடு சேர்ந்து
எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.
இப்படிப்பட்ட சூழலில்
எங்கள் காம்கேர்
நிறுவனத்தின் ஆண்டு விழாக்களை
இது போன்ற ஆஸ்ரமங்களுக்குச் சென்று
கொண்டாடி வந்தேன்.
இப்படியாக
நாமே தனியாக செய்து வரும் உதவிகளை
மற்றவர்களோடு
இணைந்து செய்யும் போது
இன்னும் அதிகமாக,
மேன்மையாக, பெரிய அளவில் செய்ய முடியும்
என்ற எண்ணம் தோன்றியது.
அதன் அடிப்படையில் உருவானதே
அப்பா அம்மாவின் பெயர்களை இணைத்து உருவாக்கிய
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை.