Youtube சேனல்

காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்…

சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது  காம்கேரின் முதன்மைப் பணியாக இருந்தாலும் ஆவணப்படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும்  தயாரித்து வழங்கி வருகிறோம்.  எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரித்து வருகிறோம்.

வானொலி மூலம் ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில் தினந்தோறும் ஒரு குறள் படித்து, பாட்டாக பாடி, பொருள் சொல்லி, கதை மற்றும் அன்றாட நிகழ்வுகளுடன் விளக்கம் கூறி 1330 குறள்களையும் பாண்டிசேரி FM -காக தயாரித்தளித்தோம். அதுபோல ‘தினம் ஒரு கதை’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கதைகளையும் தயாரித்தளித்தோம். தேவைக்கு ஏற்ப வானொலி நிகழ்ச்சிகளையும்  தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தொலைக்காட்சி வாயிலாகவும் கம்ப்யூட்டர் சார்ந்த  கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்முனைவோருக்கான நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வருகிறோம்.

ஜெயா டிவி, மக்கள் டிவி போன்ற சேனல்களில் நான் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக  TTN தொலைக்காட்சி மூலம் கம்ப்யூட்டர் கல்வி / பிசினஸ் வாய்ப்புகள் குறித்து நாங்கள் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகள் எங்களுக்கு அடையாளமாயின.

இவற்றில் தேர்ந்தெடுத்தவற்றை காம்கேர் யு-டியூப் சேனலில் கண்டு மகிழலாம்.

 


(Visited 514 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon