வெப்சைட்டுகள்

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்காத  காலகட்டத்திலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் முதுகலைபட்டம் பெற்று (1987-1992),  தொழில்நுட்பம்  ‘வரலாமா வேண்டாமா’  என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் காம்கேரை தொடங்கி சாஃப்ட்வேர் தயாரிப்பில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு (1992), அது இன்டர்நெட்டுடன் இணைந்து மெல்ல நடைபழக ஆரம்பித்த நேரத்தில் வெப்சைட் வடிவமைப்பில் புது உத்திகளை புகுத்தி (1997),  நம் மக்களிடம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றளவும் அதை தொடர்ந்து வருவதில் ஒரு சின்ன ஆத்ம திருப்தி.

கம்ப்யூட்டரையே நம் மக்கள் தொடுவதற்குக்கூட பயந்த காலகட்டத்தில் தாய்மொழியை ஆயுதமாக்கி அதில் சாஃப்ட்வேர்கள் தயாரித்து மக்களை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அருகில் ஈர்த்தேன். அதைத்தொடர்ந்து வெப்சைட்டுகள் வடிவமைப்பதிலும் புதுமையான யுத்தியை புகுத்தினேன். எங்கள் நிறுவன வெப்சைட்டில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒரு பக்கத்தில் அவர்கள் பெயரில் (உதா: www.compcaresoftware.com/bhuvaneswari) அவர்களின் ‘பயோடேட்டா’ என்ற கான்செப்ட்டை அந்தந்த கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் மாணவர்களுக்கான வெப்பக்கம் பிரபலமானது.

இதைத்தொடர்ந்து நம்மைச் சுற்றி இயங்கிவரும் மருத்துவமனை, மளிகைக்கடை, மெடிகல்ஷாப், கோயில் என அனைத்துக்கும் ஒருபக்க வெப்சைட்டுகளை எங்கள் வெப்சைட்டுகளுக்குள் சப்டொமைனாக உருவாக்கிக் கொடுத்தோம். (உதா: www.compcaresoftware.com/kbmedicals).

அடுத்து Blog அறிமுகமானபின் மிக அதிக அளவில் தனிநபர்கள், சிறு நிறுவனங்கள் என ஆங்கிங்கெனாதபடி பரவலாக அனைவருக்கும் பிளாக் உருவாக்கும் ஒர்க்‌ஷாப்புகளை நடத்தி அனைவரையும் பிளாக் மூலம்  இணைய தொழில்நுட்பத்துக்குள் கொண்டு வந்தோம்.

அதன்பின்னர் கார்ப்பரேட் மற்றும்  தொழிநுட்ப  நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்கலைகழங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும்  வெப்சைட் முதலான பல்வேறு  இன்டர்நெட் சார்ந்த தொழில்நுட்பத்துக்கு சப்போர்ட் செய்து வருகிறோம்.

இன்டர்நெட் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கி இருந்த காலகட்டத்திலேயே Java, Java Script, VBScript, EJB என பல்வேறு உயர்மட்ட சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி வெப்சைட்டுகள் வடிவமைத்த நாங்கள்  இன்று கால மாற்றத்துக்கு ஏற்ப எல்லா தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம்.

மாதிரிக்கு சில வெப்சைட்டுகள்

K.N.Sivaraman
DSVSTrust
Hinduculture TV
KomalAnbarasan
Thiruppanandal Temple
Venkataramiah
Nannilam Krishnan Koil
Mangayar Malar
Ramakrishna Math.
Krishnamurthy
Padmavathi
Mayan krishnamurthy
P.Venkataraman
Murugaraj Stories
Sethu Nagarajan
GSS
Athirathan
Dr.R.Jayachandran Many More…..

(Visited 339 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon