சாஃப்ட்வேர்

காம்கேர் தொடங்கிய 1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர்கள் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அவை காட்சிப்பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது.

எந்நேரமும் எனக்கு காம்கேரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலேயேதான் முழு கவனமும். நிஜக்கனவும், உறக்கக் கனவும் இதுவே.

சாஃப்ட்வேர் தயாரிப்பில் புது உத்தி

கம்ப்யூட்டர் பெரும்பாலானோரின் கனவுப் பொருளாக இருந்துவந்த காலத்தில் வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பத்திரிகைகள் என அனைத்தும் தங்களுக்கென சாஃப்ட்வேர் துறையை வைத்திருக்கவில்லை. காம்கேர் மூலம் அனைத்தையும் எங்கள் வசமாக்கினோம். வங்ககளின் கிரெடிட் கார்ட் அப்ளிகேஷன் பிராசஸிங் சாஃப்ட்வேர் , பள்ளிகளின் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் சாஃப்ட்வேர், மருத்துவமனை மருத்துவர்-நோயாளிகள் விவரங்கள், பத்திரிகைகளுக்கான சந்தாதாதர் பட்டியல் பராமரிப்பு என பல்வேறுவிதமான சாஃப்ட்வேர்களை எங்கள் காம்கேர் பேனரிலேயே  தயாரிக்கத் தொடங்கினோம். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தன் தயாரிப்புகளால் பிரபலமடையத்தொடங்கியது. இப்படியாக சாஃப்ட்வேர் தயாரிப்பில் புது உத்திகளைப் புகுத்தினேன்.

தாய்மொழியில் தொழில்நுட்பம்

அடுத்ததாக தமிழில் தொழில்நுட்பத்தைப் புகுத்தத் தொடங்கினேன். அதற்கு ஒரு நிகழ்வு காரணமானது.

25 வயதுமிக்க இளைஞர் ஒருவர் எங்கள் நிறுவனத்துக்கு வந்தார். ‘தமிழில் கம்ப்யூட்டர் சொல்லித்தர முடியுமா…’ என்று கேட்டார்.

நான் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு  ‘ஏன்… தமிழில்?’ என்றேன்.

அதற்கு அவர் ‘நான் நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை அணுகினேன் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள… ஆனால் அவர்கள் எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராததால் முதலில் ஆங்கிலம் பயிலுங்கள்… ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டர் வரும்’ என்று சொல்லி விட்டார்கள்… எனக்கு கம்ப்யூட்டர் கற்க வேண்டும். அதனால்தான்…’ என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினார்.

காம்கேர்  நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மட்டுமே செய்து வந்தாலும், அவருடைய பேச்சு எனக்கு ஒரு புது யுக்தியைக் கொடுத்தது.

‘நாம் ஏன் ஒரு நபருக்கு தமிழில் சொல்லிக்கொடுக்க வேண்டும்? பலருக்குப் பயனடையும் விதத்தில் அதை கொண்டுவரலாமே?’ என்ற எண்ணத்தில் என் அடிப்படைத் திறமையான எழுத்து மற்றும் படைப்பாற்றலுடன் என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை புத்தகமாக தமிழில் கொண்டுவரத் தொடங்கினேன். இன்று அந்தப் புத்தகங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

புத்தகங்கள் மட்டுமில்லாமல் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள் தயாரிக்க ஆரம்பித்தேன். முதன்முதலில் தமிழில் சாஃப்ட்வேர் வெளியிட்டதால் அதற்கான விருதும் அங்கீகாரமும் கிடைத்தது.

இதற்கும் 4 வருடங்கள் உருண்டோடி இருந்தன. தினம் தினம் புதுப்புது சிந்தனைகள். வித்தியாசமான கற்பனைகள். கற்பனைகளை சிந்தனைகளோடு இணைத்து நிஜத்தில் என் தொழில்நுட்ப அறிவை நிரூபிக்க உழைப்பு… உழைப்பு… உழைப்பு. இதை மட்டுமே நம்பினேன்.

கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம்

என் நிறுவனம் வழியே காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக மாணவ மாணவிகள் பள்ளி சீருடையில் செல்லும் கண்கொள்ளாக் காட்சி என் கண்களுக்கு விருந்து. அதை ஒட்டிய ஒரு பிசினஸ் ஐடியா எனக்குள் உதித்தது.

அப்போதெல்லாம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் என்று தனியாகக் கிடையாது. ‘நாம் ஏன் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஏற்படுத்தி,  அவர்களுக்கு சிலபஸ் தயாரித்துக்கொடுத்து, புத்தகங்கள் எழுதி தேவையான கம்ப்யூட்டர்களை வாங்கி ஒவ்வொரு பள்ளியையும் தொழில்நுட்பத்துடன் இணைக்கக் கூடாது?’ – இது என் அடுத்த திட்டமானது.

சென்னை ஆதம்பாக்கத்தில்  இயங்கிவந்த ஒரு  பள்ளியை அணுகினேன்.

1996-ம் ஆண்டு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் காம்கேர் நிறுவனமும் அந்த உயர் நிலைப் பள்ளியும் முறையாக ஒப்பந்தம் (MOU) போட்டுக்கொண்டு மூன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தினோம்.

ஒரு நல்ல நாளில் எங்கள் காம்கேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அந்தப் பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உருவாக்கி அமைத்தேன். அப்போது எனக்கு வயது 26.

உழைப்பினால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தலைகனமாக மாறாமல் என்னை வளர்த்தெடுக்கும் அளவுக்கு என் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்டது.

சிலபஸ் தயாரிப்பது அதற்குத் தேவையான புத்தகங்கள் எழுதுவது கம்ப்யூட்டர்களை வாங்கி இன்ஸ்டால் செய்வது என ரொம்ப பிசியானேன். அந்தப் பள்ளிக்கு இரண்டு கம்ப்யூட்டர் ஆசிரியர்களை இன்டர்வியூ செய்து நியமித்தேன்.

அடுத்தடுத்து பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொடுத்திருந்தாலும், எங்கள் காம்கேர் நிறுவனமே முதன்முதலில் அதற்கு அடிகோலியது.

காம்கேரின் சாஃப்ட்வேர் துறை வளர்ச்சி

இப்படியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஃப்ட்வேர்கள் தயாரித்தல், தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்லல், தேவையான தொழில்நுட்ப கல்வியறிவை ஏற்படுத்துதல், தாய்மொழியில் சாஃப்ட்வேர்கள் தயாரித்து மக்களை கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பத்துக்கு அருகில் ஈர்த்தல் என என்னளவில் என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து வந்தேன். அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்தேன்.

அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப டிபேஸ், ஃபாக்ஸ்பேஸ், ஃபாக்ஸ்புரோ, கிளிப்பர், விஷுவல் பேசிக், டாட்நெட், ஜாவா, பி.ஹெச்.பி, சி, சி++, விசி++ என பல்வேறு மொழிகளில் சாஃப்ட்வேர்கள் தயாரித்து வருகிறோம். இப்போது அத்தனையும் ஓபன் சோர்ஸ் புரோகிராமிங்கில்.

காம்கேரின் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் சில…

Computerization of Sales Section for  a Petroliam Company

Income Tax Report – Banking Software

Share Reports – Banking Software

Questionnaire software – Banking Software

Inter branch Reconciliation Statements – Banking Software

Billing Software

Stock Maintenance

VPP Software

Inventory Software

Accounting Software

School Mobile Monitoring Package

Multimedia Digital Library

Project Management System

Benifit Fund Software

Health Care Product System

Airlines Coding System

Chating & Messenger software

Law Coding System

University Linking Software

Housing Board allotment System

Jewellary Accounting System

HRMS Software

Automobile monitoring System

Wealthcare Product Software Management

Customer  Care System

Dynamic product Management System

Educational Processing System

Dynamic Banking System

Mother-Child Care Info

Blood bank System

Sales-Purchase Inventory System

Career Management System

Net Traffic analyser

Design-Implementation Tool for Software Tools

Robotic Material Transport system

Home Security System

Login System

Remote Access for Electronic Equipments

Numeric Controller

Non Visual Hearing Package Tool Research Analysis

Micro Controller based Pump

&

Many More

(Visited 487 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon