தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக நான் எழுதிய 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.
நான் எழுதுகின்ற நூல்கள் அனைத்தையுமே எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளை மாடலாக வைத்து நடைமுறை உதாரணங்களுடன் எழுதுகிறேன். அதனால் என் ஒவ்வொரு புத்தகமும் ஆராய்ச்சி நூல்போல மிக விரிவாகவும், எளிதாக புரியும்படி வழிமுறைகளுடனும், அதற்கான ஸ்கிரீன் ஷாட்டுடனும் அமையப்பெற்று, அந்தப் புத்தகங்களைப் படிக்கும் அனைவரும் தாங்களாகவே தங்கள் கம்ப்யூட்டரில் செயல்முறையாக செய்துபார்த்து புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்திருப்பேன். இதுவே காம்கேர் நூல்களின் சிறப்பு.
1992-ம் வருடத்தில் இருந்து நான் எழுதி வரும் தொழில்நுட்பப் புத்தகங்களில் பல சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்ந்த பல கல்லூரிகளில் இளங்கலை முதுகலை பாடதிட்டங்களாகவும், சமூக செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டங்களாகவும் இடம் பெற்றுள்ளன.
மேலும், எங்கள் காம்கேர் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இகன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள் பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடுகளுக்காகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
C, C++, C-Sharp DOT NET, Visual Basic DOT NET, Oracle போன்ற புரோகிராமிங் புத்தகங்கள் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சி புரோகிரமர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஐ.ஐ.டி (Indian Institute of Technology) மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு ஆய்வு நூல்களாக பயன்படுத்துகிறார்கள்.
‘கம்ப்யூட்டர் ரிப்பேரிங் & அசம்ப்ளிங்’ என்ற நூல் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் துறையில் பயணிப்பவர்களுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் படித்து சொந்தமாக ஹார்ட்வேர் சர்வீஸ் சென்டர் அமைத்து பல தொழில்முனைவோர் உருவாகி இருக்கிறார்கள்.
போட்டோஷாப், கோரல் ட்ரா, ஃப்ளாஷ், அனிமேஷன் போன்ற கிராஃபிக்ஸ் நூல்கள் அனிமேஷன் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு Reference Guide ஆகவும் பயன்படுகின்றன.
பதிப்பகம் வாயிலாக நான் எழுதி வெளியிட்ட / வெளியான 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் பெயர்களும், அவை கிடைக்கும் இடங்களும் உங்கள் பார்வைக்காக…
பதிப்பகங்களின் பெயர்களை க்ளிக் செய்து புத்தகங்களை பார்வையிடலாம், வாங்கலாம், மற்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.