

32 |
Ai Excellence Award! – Swadeshi Shodh Sansthan – March 9, 2026 |
31 |
Best Writer Award! – Mixed Bag Award Function! – September 14, 2025 |
30 |
சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது! – மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா! – March 10, 2024 |
29 |
முதன் முதலில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா படைப்புகளுக்கு டிஜிட்டல் பிள்ளையார் சுழி போட்டவர்! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு விழா! – November 7, 2022 |
28 |
சக்தி +ve 2022 (Sakthi +ve 2022) – By Ladies Special & Inner Wheel District 323 – March 27, 2022 |
27 |
பெண் சாதனையாளர் விருது (Women Achiever Award) – By Rotary Club of Anna Nagar Aadithya – May 11, 2019 |
26 |
நுண்ணறிவு மென் மாமணி – By சிவ நேயப் பேரவை – March 10, 2019 |
25 |
இவர் காம்ரேட் புவனேஸ்வரி! – By மணிமேகலை பதிப்பகம் – September 16, 2017 |
24 |
சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது (Sakthi T.K. Krishnasami Award) – பாரதி கண்ட புதுமைப் பெண் – By சைதை மகாத்மா காந்தி நூலக நிலையம் – October 9, 2016 |
23 |
Best digital Contributor to Ladies Special – By லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை – September 28, 2016 |
22 |
Best Digital Contributor to Vijayabaratham – By விஜயபாரதம் பத்திரிகை – June 5, 2016 |
21 |
சிறந்த முன்னாள் மாணவி விருது (Outstanding Alumni Award) – By AVC College Diamond Jubilee Function, Mannampandal, Mayiladuthurai – March 28, 2016 |
20
|
சாதனா விருது (Sadhana Award) – Lions ClubS International – March 8, 2016 |
19
|
சிறந்த புத்தகத்துக்கான விருது (Best Book Award) – By Pavithram : பவித்ரம் – August 30, 2015 |
18
|
இளம் தொழிலதிபர் விருது (Young Entrepreneur Award) – புதிய தலைமுறை அறக்கட்டளை – April 30, 2014 |
17
|
Vocational Excellence Award – Rotary Club of Madras Chenna PATNA – January 23, 2014 |
16 |
சிறந்த புத்தகத்துக்கான விருது (Best Book Award) – By Pavithram : பவித்ரம் – July 21, 2013 |
15 |
கணித்தமிழ் வல்லுநர் விருது – தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை – March 4, 2013 |
14
|
கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி விருதுகள் – புதுக்கோட்டை இலக்கியப் பேரவை – December 23, 2012 |
13
|
கணினி மேதை விருது – பருத்தியூர் கே. சந்தானராமன், ஹேமா சந்தானராமன் – April 2010 |
12 |
அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது (Lakshmi Ramana Memorial Art Science Young Achiever Award) – by இலக்கியச் சாரல் – April 23, 2009 |
11 |
சிறந்த முன்னாள் கல்லூரி மாணவி (Outstanding Old Student Award) – By Shrimathi Indira Gandhi College, Trichirappalli – April 12, 2009 |
10 |
சுதேசி தொழிலதிபர் விருது (Swadeshi Entrepreneur Award) – By Swadeshi Jagaran Manch – July 19, 2008 |
9 |
பெண் சாதனையாளர் விருது (Women Achiever Award) – By Lakshmi Ladies Club, Self Help Group, Inner Wheel Club of Nanganallur – March 7, 2008 |
8 |
தன்னம்பிக்கைத் தாரகை – By சரஸ்வதி ராமநாதன் – September 2, 2007 |
7 |
சிறந்த சாஃப்ட்வேர் தயாரிப்பாளர் விருது (Software Specialist Award) – By Yuva Shakthi & Anna University Red Cross, Chennai – January 10, 2006 |
6 |
சரஸ்வதி பீடத்தின் சர்வகலாவாணி (Saraswathi Peedaththin Sarvakala Vani) – By Compcare Employees, Chennai – February 6, 2005 |
5 |
சாதனைச் செல்வி விருது – By புதுக்கோட்டை பி. வெங்கடராமன் – January 16, 2005 |
4 |
சிறந்த எழுத்தாளர் விருது (Best Writer Award) – By நெய்வேலி புத்தகக் கண்காட்சி, நெய்வேலி – August 8, 2004 |
3 |
திருவாசகம் மல்டிமீடியா சிடி வெளியீடு – By ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் – February 11, 2004 |
2 |
தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அதிக அளவில் எழுதிய ஒரே நூலாசிரியர் – By கண்ணதாசன் பதிப்பகம் – ஜனவரி 2000 |
1 |
தமிழையும் கம்ப்யூட்டரையும் முதன் முதலில் இணைத்தவர்களுள் முதன்மையானவர்! – By Organisation – மார்ச் 1999 |

புவனேஸ்வரி
to
காம்கேர் கே. புவனேஸ்வரி!
Corporate Biography
1970 ஆம் ஆண்டு பத்மாவதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியருக்கு மூத்த மகளாக கும்பகோணத்தில் பிறந்தார் புவனேஸ்வரி. இவருக்கு ஸ்ரீவித்யா என்ற தங்கையும், சுவாமிநாதன் என்ற தம்பியும் உள்ளனர். பெற்றோர் இருவரும் தொலைபேசித் துறையில் பணியாற்றியதால், பணியிட மாற்றங்களின் காரணமாக பல்லடம், விருதாசலம், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசித்து, தமிழகத்தின் பல நகரங்களில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
பின்னர் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸும் பயின்றார். தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
சிறுவயதிலிருந்தே பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த ஐசக் நியூட்டன், சர்.சி.வி. ராமன், கணித மேதை ராமானுஜம், ஆபிரகாம் லிங்கன், இந்திரா காந்தி போன்றோர்களின் வாழ்க்கைச் சாதனைகளும், புகைப்படங்களும் இவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்களைப் போல தாமும் சமூகத்திற்கு பயனுள்ள சாதனைகளை நிகழ்த்த வேண்டும், தனது பெயரில் புதுமையான படைப்புகள் உருவாக வேண்டும் என்ற கனவை அன்றே விதைத்துக் கொண்டார்.
1992-ஆம் ஆண்டு எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தபின், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனையில் இருந்தபோது, இவரது தாய் பத்மாவதி ‘நாமே ஏன் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கக்கூடாது?’ என்ற ஆலோசனையை முன்வைத்தார். அந்தக் கனவிற்கு செயல்வடிவம் கொடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி.
அதன் விளைவாக 1992-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை நாளன்று “Computer Care” என்று பொருள்படும் வகையில் “Compcare software” (காம்கேர் சாஃப்ட்வேர்) நிறுவனம் உருவானது.
தொழில்நுட்பம் என்பது வெறும் கருவி மட்டுமல்ல, அது சாமானியர்களையும் சென்றடையும் எளிய நுட்பமாக மாற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இவரது தங்கையும், தம்பியும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர்.
வர்த்தக ரீதியாக மட்டுமே செயல்பட்டு வணிக வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், இவர் இயங்கிவரும் தொழில்நுட்பக் களத்தை இலக்கியத்துக்கும், கல்விக்கும், ஆன்மிகத்துக்கும் முழுமையாக பயன்படுத்தி பல்வேறு புதுமைகளை உருவாக்கி வருகிறார்.
நம் நாட்டில் கணினி தொழில்நுட்பம் பரவலாக அறிமுகமாகும் முன்பே கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்ற இவர், வெளிநாடுகளில் இருந்து கிடைத்த அழைப்புகளையும் வாய்ப்புகளையும் ஏற்காமல், இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்தார். அதன் மூலம் 1992-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர், முதன்மை செயல் அதிகாரி, ஆராய்ச்சியாளர், அறிவியலாளர், தொழில்நுட்ப வல்லுநர், கிரியேட்டிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஒருங்கே வகித்து, தனது தனித்துவமான பாதையைத் தானே உருவாக்கியுள்ளார்.
இவரது வாழ்க்கையை ‘காம்கேருக்கு முன்’ மற்றும் ‘காம்கேருக்குப் பின்’ என இரு காலகட்டங்களாகப் பார்க்கலாம். காம்கேருக்கு முன், புவனேஸ்வரி மிக அமைதியானவர், பயந்த சுபாவம் கொண்டவர். யாருடனும் அத்தனை சுலபத்தில் பேசிவிட மாட்டார். பெற்றோரின் அரவணைப்பில் தானுண்டு தன் படிப்புண்டு என்று வாழ்ந்து வந்தார். ஆனால் தன்னம்பிக்கையை உள்ளுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு படிப்புடன் சேர்த்து தன் திறமையையும் சேர்த்து வளர்த்தெடுத்து வந்தார்.
காம்கேருக்குப் பின், புவனேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து ‘காம்கேர் புவனேஸ்வரி’ ஆனார். இவருக்குள் இருந்த தன்னம்பிக்கை பிரவாகமாக வெளிப்பட ஆரம்பித்து தன்னம்பிக்கையின் மறு உருவமாக மாறினார். சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்து, பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி, நிர்வாகம் செய்து, சாஃப்ட்வேர் அனிமேஷன், ஏஐ தயாரிப்புகளை உருவாக்கி, அவற்றை உலக சந்தையில் முன் நிறுத்தி, விற்பனையிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார்.
தனது நிறுவனத்தின் சார்பிலேயே வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அதன்படி, அமெரிக்காவின் மிசெளரி பல்கலைக்கழகத்தில் ‘நம் நாட்டு உயர்கல்விக்கும் அயல் நாட்டு உயர்கல்விக்கும் இடையிலான ஒப்பீடு’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கும் பணிக்காக முதன்முறையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அதன் பின்னர் உலகின் பல நாடுகளில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாடுகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு தனது தொழில்நுட்பப் பங்களிப்பால் உயர்ந்தார்.
காலப்போக்கில் “காம்கேர் என்றால் புவனேஸ்வரி; புவனேஸ்வரி என்றால் காம்கேர்” என்று மக்கள் அடையாளப்படுத்தும் அளவுக்கு, தனது ஆளுமையையும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் ஒன்றிணைத்து வெற்றிகரமான பிராண்டாக உருவாக்கியுள்ளார்.
இன்றைய உலகை மாற்றி அமைத்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஆற்றலையும் எதிர்கால முக்கியத்துவத்தையும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பே உணர்ந்து, 1992-ஆம் ஆண்டிலிருந்தே அதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கினார். அப்போதில் இருந்தே செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைக் கணித்து, தனது நிறுவனம் உருவாக்கிய சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், கார்ட்டூன்கள், மல்டிமீடியா தயாரிப்புகள், வெப்சைட்டுகள் உள்ளிட்ட அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து பல புதுமைகளை உருவாக்கி வரும் தொலைநோக்கு சிந்தனையாளர்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், வெப்சைட்டுகள் மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
திருமணம் என்ற இல்லறவழி விடுத்து தொழில்நுட்பம், கல்வி, இலக்கியம், ஆன்மிகம், சமூக முன்னேற்றம் வழி நுழைந்து, 1992 ஆம் ஆண்டில் இருந்து சோர்வில்லாமல் உழைத்து வரும் கடுமையான உழைப்பாளி.
இவர் தன் பெற்றோரை நேசிக்கிறார். வாழும் பாரத நாட்டையும் நேசிக்கிறார். அதனால்தான் இவரது நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் நம் தேசம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. நம் நாட்டு தயாரிப்பை அயல்நாட்டினரும் பயன்படுத்தும்வண்ணம் கொண்டு சேர்ப்பதுதான் இவரது பிரதான நோக்கமாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்தியாவின் முன்னோடி தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
உலக அளவில் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஏஐ முன்னேற்றங்களில், இந்தியாவின் சார்பில் இவரது பங்களிப்பு தனித்துவமானதும் குறிப்பிடத்தக்கதுமாக திகழ்கிறது. ஏஐ துறையில் முன்னோடியாக விளங்கி, தனது சாதனைகளால் நாட்டிற்குப் பெருமை சேர்த்து வரும் சிறந்த அறிவியலாளர் இவர்.
நல்ல ஆரோக்கியமான விருந்து சாப்பிடுவதற்கு முன் ‘பசியைத் தூண்டும்’ சுவையான ‘அப்பிடைசர்’ சாப்பிடுவதைப் போல், இவரது வெற்றிப் பயணத்தை இன்னும் விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன், அண்மையில் இவர் வெளியிட்ட ஏஐ படைப்புகளை பார்ப்போம். ஒவ்வொன்றும் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், உலகச் சாதனை படைத்த படைப்புகளாக விளங்குகின்றன!
2025 ஆம் ஆண்டு, இவர் தயாரித்த ‘VK Alias Victory King’ என்ற சுயசரிதைப் படம், உலகிலேயே முதன்முதலாக தமிழில் Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சுயசரிதை படம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இது மூன்று சீசன்களாக, ஒவ்வொரு சீசனிலும் 7 எபிசோடுகளில், 7 மணி நேரம் ஓடக் கூடிய உலகின் முழுநீள Ai படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் Ai துறையில் 33 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சிகள் செய்து வரும் அறிவியலாளர் காம்கேர் கே. புவனேஸ்வரி!
‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? இது இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால், இவரது தந்தையின் இயற்பெயரான வி. கிருஷ்ணமூர்த்தியையும், புனைப்பெயரான விக்டரி கிங்கையும் இணைத்து உருவாக்கப்பட்டத் தலைப்பு. ‘விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி!’ என்ற தலைப்பில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தினந்தோறும் காம்கேர் கே. புவனேஸ்வரியின் தந்தை பகிர்ந்து வரும் வாழ்வியல் கருத்துக்கள் மிகப் பிரபலம்.
2024 ஆம் ஆண்டு, ஏஐ தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய ‘அசத்தும் ஏஐ’, ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ்’ என்ற இரண்டு நூல்களும், தமிழ்ப் பதிப்பக உலகில் முதன்முறையாக அச்சுப் புத்தகங்களிலேயே பேசும் ஏஐ அவதாரை அறிமுகப்படுத்திய புதுமையான படைப்புகளாகும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ள QR Code-ஐ மொபைலில் ஸ்கேன் செய்தால், அந்த அத்தியாயத்தின் சுருக்கத்தை நூலாசிரியரின் ஏஐ அவதாரே கண் முன் தோன்றி விளக்குகிறது. அச்சு ஊடகத்தையும் டிஜிட்டல் உலகையும் ஒருங்கிணைத்து, ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் இரண்டு அச்சுப் புத்தகங்கள் இவையே. இந்தப் புரட்சிகரமான சாதனையின் முன்னோடி இவரே!
2022 ஆம் ஆண்டு, காம்கேர் கே. புவனேஸ்வரி ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரித்து வெளியிட்ட திருவாசகம், உலகிலேயே முதன்முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆன்மிகப் படைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. திருவாசகத்தின் 658 பாடல்களை உள்ளடக்கிய 51 பதிகங்களையும், தமிழ் மற்றும் ஆங்கில ஒலி பெயர்ப்புடன் அதாவது Transliteration-டன் ஏஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அச்சுப் புத்தகத்தில் உள்ள பாடல்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால், ஏஐ அவதார் கண் முன் தோன்றி, பாடல்களைத் துல்லியமான உச்சரிப்புடன் பாடுவதுடன், திரையில் பாடல் வரிகளையும் வெளிப்படுத்தும். அச்சு ஊடகத்தையும் டிஜிட்டல் உலகையும் ஒருங்கிணைத்து, ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஆன்மிகப் படைப்பு இதுவே.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காம்கேர் கே. புவனேஸ்வரி ‘அறம் வளர்ப்போம்’ என்ற அறநெறி இலக்கியத்தை எழுதி முதல் வெர்ஷனாக வெளியிட்டார். இந்தப் படைப்பும் உலகிலேயே முதன்முதலாக ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறநெறி இலக்கியம் என்ற சிறப்பைப் பெற்றது. இது தமிழ் அற வார்த்தைகளின் தொகுப்பு. ஆத்திச்சூடியில் அறம் 1 வரியிலும், திருக்குறளில் அறம் 2 வரிகளிலும், நாலடியாரில் அறம் 4 வரிகளிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ‘அறம் வளர்ப்போம்’ நூலில் அறம் 3 வரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் மத்தியில் காம்கேர் கே. புவனேஸ்வரி ‘அறம் வளர்ப்போம்’ என்ற அறநெறி இலக்கியத்தின் இரண்டாவது வெர்ஷனை வெளியிட்டார். அச்சுப் புத்தகத்தையும் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்த உலகின் முதல் அறநூல் முயற்சி இதுவாகும். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அறவார்த்தையின் QRCode-யும் மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால், அதற்கான விரிவான விளக்கத்தை ஏஐ அவதார், குரலும் காட்சியுமாக வழங்கும். மேலும் கருத்துக்கு ஏற்ற அனிமேஷன்களும் திரையில் தோன்றி, வாசிப்பை உயிரோட்டமிக்க அனுபவமாக மாற்றுகின்றன.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் காம்கேர் கே. புவனேஸ்வரி ‘அறம் வளர்ப்போம்’ என்ற அறநெறி இலக்கியத்தின் மூன்றாவது வெர்ஷனை வெளியிட்டார். இந்த வெர்ஷனில், Open Source தொழில்நுட்பத்தின் மூலம், படைப்பாளியுடன் வாசகர்களும் இணைந்து தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த அறநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Open Source தொழில்நுட்பத்தில் உருவான உலகின் முதல் அறநூல் முயற்சி என்ற சிறப்பைப் பெறுகிறது. இதனால் ஒரு புத்தகம் வெறும் வாசிப்பு அனுபவமாக மட்டும் இல்லாமல், அனைவரும் இணைந்து உருவாக்கும் உயிருள்ள அறவளர்ச்சி இயக்கமாக மாறுகிறது. இந்த இயக்கத்தில் தனியார் பள்ளிகள் மட்டுமில்லாது, அரசு பள்ளிகளும் பங்கேற்று தங்கள் மாணவர்களின் பங்களிப்பை வழங்கி வருவது இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.
சிலரின் வாழ்க்கையில் சில செயல்கள் மட்டுமே புதுமையின் தடம் பதிக்கும். ஆனால் காம்கேர் கே. புவனேஸ்வரியின் ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு படைப்பும் புதுமையின் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன. இவர் மனதில் உதிக்கும் எண்ணங்கள் வெறும் கற்பனைகள் அல்ல; நாளைய உலகிற்கான விதைகள். இவர் பதிக்கும் ஒவ்வொரு அடியும், மற்றவர்கள் பயணிக்க புதிய பாதையாக மாறுகிறது. அதனால்தான் இவர் புதுமையை உருவாக்குபவர் மட்டுமல்ல; புதுமையின் புதிய அடையாளமாக விளங்குபவர். இப்படியாக தொழில்நுட்ப உலகில் இவர் எடுத்த முன்னெடுப்புகள் அனைத்தும் முதல் முயற்சி; முதல் சாதனை. எப்படி சாத்தியமாயிற்று… பார்ப்போமா?
1992- ஆம் ஆண்டு நம் நாட்டில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய, முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரம் பெற்றவர் காம்கேர் கே. புவனேஸ்வரி. சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு தொழில்நுட்ப அறிவையும் அது சார்ந்த ஆளுமையையும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே இவர் பெற்றதன் பின்னணி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. இவர் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தபோது இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட்டை இன்டியன் ஆயில் கார்ப்பரேஷனில் (iOC) செய்தார். மற்ற மாணவ மாணவிகள் தினமும் 2 மணி நேரம் ப்ராஜெக்ட் செய்ய வந்தால், புவனேஸ்வரி 8 மணி நேரம் முழுநேர பொறியாளர் போல் பணி செய்வார். அதுமட்டும் இல்லாமல், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் அலுவலகம் சென்று ப்ராஜெக்ட் செய்ததால் அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்கு புவனேஸ்வரி மீது மிக நல்ல அபிர்ப்பிராயம் இருந்தது. அவருடைய தனித்துவமான அணுகுமுறையினால் ‘இன்டிபென்டன்ட் கேர்ள்’ என பட்டப்பெயர் வைத்தே அழைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்போதுதான் அவர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு துறையையும் கம்ப்யூட்டர் மயமாக்கிக் கொண்டு வந்தார்கள். ஏப்ரல் 1992-லேயே கல்லூரி ப்ராஜெக்ட் காலகட்டம் முடிந்துவிட்டாலும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அக்டோபர் 1992 வரை ஐஓசி அலுவலகத்தின் சில துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்க உதவினார். இப்படி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொண்டார் காம்கேர் கே. புவனேஸ்வரி. (1992)
இவர் நிறுவிய ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டு, ‘காம்கேர் கே. புவனேஸ்வரி’ என்று அழைக்கப்படுகிறார். சிலரின் பெயரால் நிறுவனங்கள் புகழ் பெறும். சிலரின் நிறுவனங்களால் பெயர்கள் புகழ் பெறும். ஆனால் காம்கேர் கே. புவனேஸ்வரியின் வாழ்க்கையில் இந்த இரண்டும் ஒன்றாக இணைந்தன. அவர் உருவாக்கிய ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் பெயரே, அவருடைய தனிப்பட்ட அடையாளமாக மாறி, ‘காம்கேர் கே. புவனேஸ்வரி’ என்ற பெயரை ஒரு தனித்துவமான முத்திரையாக உலகம் முழுவதும் பதித்தது. 1992-ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பெயர் வெறும் அழைப்புப் பெயராக அல்ல; தொழில்நுட்பம், புதுமை, நம்பிக்கை, சாதனை ஆகியவற்றின் அடையாளமாகப் பயணித்து வரும் ஒரு மதிப்புமிக்க பிராண்டாக விளங்குகிறது. (1992)
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் ஆங்கிலத்திற்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த காலகட்டத்தில், தமிழ் மொழியையும் தொழில்நுட்ப உலகையும் இணைக்கும் உறுதியான பாலமாக விளங்கியவர். 1992-ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் கல்வியை தமிழில் முதன்முதலாக அறிமுகப்படுத்தி, தமிழர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கும் இடையே புதிய வரலாற்றுப் பாதையை உருவாக்கிய முன்னோடி. (1992)
தமிழ் மொழியையும், சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தையும் முதன்முதலாக ஒருங்கிணைத்த சாதனை முன்னோடி! (1993)
“ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும்” என்ற தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தவர். சாஃப்ட்வேர்களைத் தமிழ் மொழியிலேயே வடிவமைத்து, அவற்றை சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் முன்னோடி இவரே! (1993)
சாஃப்ட்வேர்களை தமிழ் மொழியில் வடிவமைத்ததுடன் அவற்றை சிறு நிறு வனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில், மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து தமிழ் சாஃப்ட்வேர் சந்தையை உருவாக்கிய தனிப்பெரும் முன்னோடி இவரே! (1994)
சொந்தமாக சாஃப்ட்வேர்களை விலைக்கு வாங்க வசதியில்லாத நிறுவனங்களின் நிலையை உணர்ந்து, தாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களை மாத வாடகைக்கு வழங்கும் புதிய முறையை அன்றே அறிமுகப்படுத்தியவர். இன்றைய உலகளாவிய ஐடி துறையே கொண்டாடும் ‘சாஃப்ட்வேர் சர்வீஸ்’ (SaaS – Software as a Service) முறைக்கு வித்திட்ட மிகச்சிறந்த வியாபார முன்னோடி இவரே! (1994)
நம் நாட்டில் முதன்முதலாக ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் கல்வியை முதன் முதலாக அறிமுகப்படுத்தி, அதனை முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கியதிலும் முன்னோடியாகத் திகழ்கிறார். 1994 காலகட்டத்தில் நம் நாட்டில் எல்லோருக்குமே கம்ப்யூட்டரும் சாஃப்ட்வேரும் புதிது என்பதால் எல்லோரிடமும் அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதன்மையானப் பணியானக இருந்தது காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு. முதலில் ‘நாம் ஏன் பள்ளி கல்லூரிகளை கம்ப்யூட்டர் மயமாக்கக் கூடாது?’ என்ற யோசனை தோன்றவே, புவனேஸ்வரி சென்னை ஆதம்பாக்கம் ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியை அணுகி அவர்களுக்கு கம்ப்யூட்டரின் முக்கியத்துவம், கல்வியில் கம்ப்யூட்டர்களின் பங்கு, எதிர்காலம் எல்லாவற்றையும் எடுத்துப் புரிய வைத்தாள். புவனேஸ்வரியின் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. அந்தப் பள்ளி இவரது காம்கேர் நிறுவனம் வாயிலாக முழுமையாக கம்ப்யூட்டர் மயமானது. அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தி, கம்ப்யூட்டர் சென்டர் அமைத்து, அதில் இவர்களே அசம்பிள் செய்த மூன்று கம்ப்யூட்டர்களை இன்ஸ்டால் செய்து, சிலபஸ் போட்டுக் கொடுத்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக புத்தகங்கள் எழுதி, அதற்காகவே கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தி, பாடங்கள் நடத்தி, தேர்வுகள் வைத்து, சான்றிதழ் கொடுத்து ஒரு மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தினார் காம்கேர் கே. புவனேஸ்வரி. இதன் பிறகுதான், நம் நாட்டில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் மெல்ல மெல்ல தோன்ற ஆரம்பித்தன. (1994)
முதன் முதலில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பொறியாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்து Work From Home திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலும் முன்னோடியாகத் திகழ்கிறார் காம்கேர் கே. புவனேஸ்வரி. இதற்குக் காரணம் பெண்கள்தான். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதுதான் உண்மை. கம்ப்யூட்டர் நம் நாட்டில் அறிமுகமாகிக் கொண்டிருந்த 1992 -களில் பொதுவாகவே கம்ப்யூட்டர் சயின்ஸைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் மிகக் குறைவு. அதிலும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படி இருக்கும்போது கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் என்றில்லை, வேறு எந்தப் பிரிவை பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும் அவர்களை வேலைக்கு எடுத்து, கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்து, வேலைக்கு அமர்த்த ஆரம்பித்தார். இதற்கே நான்கைந்து மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் அவர்கள் வீட்டில் வேலைக்குச் செல்ல எதிர்ப்பு, திருமணம், குழந்தைப் பிறப்பு என பல்வேறு காரணங்களினால் வேலையை விட்டு நின்றுவிடுவார்கள். அவர்களுக்குக் கொடுத்தப் பயிற்சியும், இவர் எடுத்த முயற்சியும் வீணாகக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்களிடமும், அவர்களின் வீட்டினருடனும் பேசி அனுமதி பெற்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அவர்கள் வீடுகளில் நிறுவி, வேலைகளையும் அவர்கள் வீட்டிற்கே அனுப்பி, தினமும் மாலை 6 மணிக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் அன்றைய தினம் வேலை செய்த அவுட்புட்டை ஃப்ளாப்பியில் பெற்றுக் கொள்வார். எத்தனை சவாலான முயற்சி இது. இதையும் எந்த சுணக்கமும் இன்றி அறிமுகப்படுத்தி வரலாற்று சாதனைப் படைத்தார். (1996)
தமிழில் கல்வி சம்மந்தப்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடர்களை பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியதிலும் இவரே முன்னோடி. ‘மங்கையர் மலர்’ பத்திரிகையில் ‘உலகம் உன் கையில்’ என்ற தொடர் வாயிலாகவும், ‘தமிழ் கம்ப்யூட்டர்’ பத்திரிகை தொடர்கள் வாயிலாகவும் அதற்கும் பிள்ளையார் சுழி போட்டவர். (1996)
தமிழில் கல்வி சம்மந்தப்பட்டதொழில்நுட்ப நூல்களை எழுதத் தொடங்கியதிலும் இவரே முதன்மையானவராக விளங்குகிறார். முன்னணிப் பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவற்றை பதிப்பித்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டின. (1999)
தமிழில் இவர் எழுதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நூல்களே, பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாகப் பாடத்திட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவர். இவரது முதல் மூன்று தொழில்நுட்ப நூல்களுமே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. (2000)
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன்முதலாக அச்சுப் புத்தகத்துடன் Floppy / CD / DVD போன்றவற்றை இணைத்துக் கொடுத்ததிலும் முன்னோடி இவரே. இவர் எழுதிய பெரும் பான்மையான தொழில்நுட்ப நூல்களில், அந்தந்த நூலுக்குத் தொடர்புடைய ப்ராஜெக்ட்டுகளை இவர் நிறுவனத்திலேயே தயாரித்து விற்பனை செய்யும் புத்தகத்துடன் ஃப்ளாப்பி / சிடிக்களில் இணைத்துக் கொடுத்துப் புதுமைகள் பல செய்தார்.(2000)
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும், எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல் போன்ற சாஃப்ட்வேர்களையும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் JAWS, NVDA போன்ற Screen Reading Software -கள் மூலம் பயிற்சி அளித்ததில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். (2000)
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தன் இளம் வயதிலேயே கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பக் கருத்தரங்குகளைத் தொடர்ச்சியாக நடத்தி, அவற்றை கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்த்ததில் இவர் ஒரு முன்னோடி! 1992 முதல் 2000 வரை கம்ப்யூட்டர் தொழில்நுட்பக் கருத்தரங்குகள், 2000 முதல் 2005 வரை இன்டர்நெட், ப்ளாக், அனிமேஷன், சாஃப்ட்வேர் கருத்தரங்குகள், 2005 முதல் 2015 வரை யு-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், பிரிண்டிங், வெப்சைட் வடிவமைப்புக் கருத்தரங்குகள், 2015 முதல் 2020 வரை Open Source மற்றும் Software as a Service கருத்தரங்குகள், 2020 க்குப் பிறகு ஏஐ கருத்தரங்குகள் என தான் பெற்ற தொழில்நுட்ப அனுபவங்களை தனக்குள் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், தன்னைச் சார்ந்த இந்த சமுதாயத்துக்கும் பகிர்ந்தளித்து அனைவருக்கும் முன்னோடியாக ஊக்கசக்தியாக விளங்குகிறார். (2000)
ஆல் இந்தியா ரேடியோ மற்றும் பாண்டிச்சேரி FM உள்ளிட்ட பல்வேறு அலைவரிசைகளில், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற தொழில்நுட்ப நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக, 2000 முதல் நடத்தி வருகிறார். ஆரம்பக் காலத்தில் கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப நிகழ்ச்சிகள், இடைக்காலத்தில் இன்டர்நெட், அனிமேஷன் மற்றும் அவை சார்ந்த உயர் தொழில்நுட்பங்கள், இன்றைய ஏஐ யுகத்தில் ஏஐ சார்ந்த நிகழ்ச்சிகள் என வானொலி ஊடகம் வாயிலாகவும் சாமானியர்களுக்குத் தொழில்நுட்பப் புரட்சியைக் கொண்டு சேர்த்ததில் இவர் ஒரு சாதனை முன்னோடி! (2000)
2000-ஆம் ஆண்டு ‘தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க்’ (TTN) மூலம் உலகளாவிய அயல்நாட்டுத் தமிழர்களுக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியதே இவரது தொலைக்காட்சிப் பயணத்தின் ஆரம்பம். அதனைத் தொடர்ந்து பொதிகை, ஜெயா டிவி, மக்கள் டிவி, வின் டிவி, விகடன் டிவி, DD தமிழ் எனப் பல்வேறு முன்னணித் தொலைக்காட்சிகள் வாயிலாக இன்றளவும் இவரது தொழில்நுட்பப் பரப்புரைத் தொடர்கிறது. தொலைக்காட்சி ஊடகத்தின் வழியே தொழில்நுட்பப் புரட்சியை மக்கள் மயமாக்கியதில் இவர் ஒரு வரலாற்றுச் சாதனையாளர்! (2000)
இந்தியாவில் இன்டர்நெட் அறிமுகமான காலத்தில், பெருநிறுவனங்கள் மட்டுமே வெப்சைட்டுகள் வைத்திருந்தன. அந்த நிலையை மாற்றி, வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் பயோடேட்டாவை ஒரு பக்க வெப்சைட்டாக (Single Webpage) மாற்றிக் கொள்ளும் புதிய சேவையை இவர் அறிமுகப்படுத்தினார். தனி நபர்களும் வெப்சைட்டுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்து, நம் நாட்டில் இன்டர்நெட் பரவ வழிவகுத்ததில் இவர் ஒரு முக்கிய முன்னோடி! (2000)
சொந்தமாக வெப்சைட் தொடங்க வசதியில்லாத சிறு வணிகர்களுக்கு, செலவே இல்லாத ‘Blog’ தொழில்நுட்பம் மூலம் தமிழிலேயே வெப்சைட்டுகளை வடிவமைத்துக் கொடுத்தார். சிறு வியாபாரிகளையும் இன்டர்நெட் பயனாளர்களாக்கி, தமிழ் டிஜிட்டல் உலகில் ஒரு வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்திய முன்னோடி இவரே! (2000)
முதன் முதலில் ரெடிமேட் அனிமேஷன் சாஃப்ட்வேர்கள் எதையும் பயன்படுத்தாமல், C மொழியைப் பயன்படுத்தி புரோகிராம் எழுதி கார்ட்டூனாக யானையை வரைந்து, அது அனிமேஷனில் மானிட்டரின் இடது பக்கத்தில் இருந்து வலதுபக்கம் செல்வதைப் போல ஸ்கிரீன் சேவர் உருவாக்கி, புரோகிராம் மூலம் அனிமேஷன் செய்ய முடியும் என நிரூபித்ததிலும் முன்னோடி இவரே! (2000)
தமிழில் முதன்முதலாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வயதில் பெரியோர் என அனைவருக்கும் அவரவர் வயதுக்கு ஏற்ப பொருத்தமான கான்செப்ட்டுகளுடன் அனிமேஷன் சிடிக்களை வடிவமைத்தவர். (2000)
தமிழில் கார்ட்டூன் முதல் ஆன்மிகம் வரை அனைத்துவிதமான மல்டி மீடியா படைப்புகளையும் சிறப்பாக வடிவமைத்துத் தயாரித்ததுடன், முதன்முதலாக அவற்றை மிகக் குறைந்த விலையில் (ரூ.99) அனைவருக்கும் கொண்டு சேர்த்து சாதனைப் படைத்தவர். (2000)
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மழலைப் பாடல்களை முதன்முதலாக அனிமேஷனில் வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தவர்! காம்கேர் கே. புவனேஸ்வரியின் கதை கோகுலத்தில் வெளியான போது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்தான் கோகுலத்தின் எடிட்டர் என்பது கூடுதல் தகவல்! முதல் கதையை வெளியிட் டவரின் குழந்தைப் பாடல்களை முதன் முதலாக அச்சில் இருந்து டிஜிட்டலுக்குக் கொண்டு சேர்த்தவர் என்பது Wonderful Coincidence! (2000)
பத்திரிகைகளுடன் இணைந்து தொழில்நுட்பக் கருத்தரங்குகளை நடத்த ஆரம்பித்ததிலும் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார். முதன் முதலில் ‘லேடீஸ் ஸ்பெஷல்’ என்ற புகழ்பெற்ற மாத இதழுடன் இவரது ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் இணைந்து ‘காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்’ என்ற தொழில்நுட்பக் கருத்தரங்கை நடத்தினார். தமிழகமெங்கிலும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் கம்ப்யூட்டர் துறை சார்ந்த சுயதொழில் முனைவராக உருவெடுத்தார்கள். அதன் பிறகு பத்திரிகைகளுடன் மட்டுமல்ல, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் யு-டியூப் சேனல்களுடனும் இணைந்து தொழில்நுட்பக் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். (2001)
கூகுள் காலத்துக்கு முன்பே தாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களிலும் அனிமேஷன்களிலும் Search ஆப்ஷன்களைப் பொருத்தியவர். குறிப்பாக, மல்டிமீடியா படைப்புகளாக இவர் உருவாக்கிய திருவாசகம் மற்றும் திருக்குறள் இரண்டிலும் Search ஆப்ஷனைப் பொருத்தி, அதன் மூலம் எழுத்தாகவோ, வார்த்தையாகவோ, வரியாகவோ அல்லது பாடல் எண்ணாகவோ எப்படி வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப விருப்பமானதைத் தேடி எடுக்கும் வசதியுடன் வெளியிட்டபோது அவை உலகளாவிய புகழ் பெற்றன. (2001)
கம்ப்யூட்டரில் பார்த்து படிக்கும்படி தொழில்நுட்ப நூல்களை வடிவமைத்து CBT எனப்படும் Computer Based Tutorial நுட்பத்தை முதன்முதலில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தி, அச்சுப் புத்தகங்களுக்கு டிஜிட்டல் வடிவம் கொடுத்து புதுமைகளைப் புகுத்தியதிலும் இவரே முன்னோடி. (2001)
தொழில்நுட்ப நூல்களை ABT எனப்படும் Audio Based Tutorial நுட்பத்தின் மூலம் வடிவமைத்து அச்சுப் புத்தகங்களை குரல் வடிவில் ஆடியோவாகவும் கேட்கும்படி நம் நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதிலும் முன்னோடி இவரே. (2002)
இன்டர்நெட் நம் நாட்டில் அறிமுகம் ஆக ஆரம்பித்ததும் WBT எனப்படும் Web Based Tutorial என்ற நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப புத்தகங்களை வெப்பக்கங்களுக்கு ஏற்ப வடிவமைத்து, அச்சுப் புத்தகங்களை வெப்பக்கங்களில் வாசிக்க வைத்தலிலும் இவரே முன்னோடி. (2002)
கல்வி நிறுவனங்களுக்கான பாடப் புத்தகங்களை அனிமேஷனுடனும், பேராசிரியர்களின் உரைகளை லைவாக ஷூட்டிங் எடுத்தும், படங்கள் வரைந்தும் வடிவமைத்து சிடிக்களில் இ-கன்டென்ட் படைப்புகளை உருவாக்கி, மாணவர்களை Self Learning பழக்கத்துக்கு கொண்டு வந்து புதுமைகளை புகுத்தியதிலும் இவரே வரலாற்று முன்னோடி. (2003)
இவர் அறிமுகப்படுத்திய ABT நுட்பத்தின் மூலம் தகவல்களை ஆடியோ வடிவில் வெளிப்படுத்த முடிவதாலும், அந்த நுட்பத்தை CBT, WBT, E-Content படைப்புகளிலும் பொருத்தி வடிவமைக்க முடியும் என்பதாலும், இவர் தயாரிக்கின்ற படைப்புகள் அனைத்துமே பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் அமைந்தன. இந்த சாதனையிலும் முதன்மையானவர் இவரே. (2003)
Audio Based Tutorial மூலம் பேசும் புத்தகங்களை உருவாக்குவதற்கு, நூலாசிரியரின் நூலை அவரே படித்து ரெகார்ட் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஒருவர் எழுதிய பத்து நூல்களை ABT ஆக வடிவமைக்க பத்து நூல்களையும் அவரே வாய்விட்டு படித்து ரெகார்ட் செய்ய வேண்டும். அதற்கு ஒரு மாற்று வழியை 2003-லேயே கண்டுபிடித்த சாதனையாளர் இவர். அதுவே வாய்ஸ் க்ளோனிங். ஒருவரது குரலை நகல் எடுத்து, அதைப் பயன்படுத்தி அச்சுப் புத்தகங்களை ரெகார்ட் செய்யாமலேயே ஆடியோவாக பதிவு செய்ய முடியும். நம் மக்கள் இன்று ஏஐ மூலம் பயன்படுத்தும் இந்த நுட்பத்தை அன்றே கண்டுபிடித்தவர். (2003)
2003-ம் ஆண்டு தமிழில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துக்காகவே தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற தொழில்நுட்ப மாத இதழுக்கு சில வருடங்கள் எடிட்டராக பொறுப்பில் இருந்தார். இதன் மூலம், தமிழ்ப் பத்திரிகை உலகில் ‘தொழில்நுட்பப் பத்திரிகையின் முதல் பெண் எடிட்டர்’ என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார். ஒவ்வொரு மாதமும் அச்சுப் பத்திரிகையுடன், அதற்காகவே தயாரிக்கப்பட்ட பிரத்யேக அனிமேஷன் சிடியை இலவசமாக வழங்கினர். தனது நிறுவனப் பணிகளுள் ஒன்றாக, இந்த அச்சுப் பத்திரிகை மற்றும் அனிமேஷன் சிடி தயாரிப்பு ஆகிய இரண்டையுமே முன்னின்று தலைமையேற்றுச் செவ்வனே வழி நடத்தினார். (2003)
இயல்பான கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மிக்க இவர், அவற்றைச் தன் நிறுவனத்தின் எழுத்து, பேச்சு, சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் படைப்புகளில் புகுத்தித் தொழில்முறையில் வெற்றி கண்டவர். ஆவணப்படங்கள் இயக்குவதிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். பெற்றோருக்கும் தங்களுக்குமான ஆழமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக, இளம் வயதிலேயே இவர் எழுதி, தயாரித்து, இயக்கிய ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற 1½ மணி நேர ஆவணப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. (2007)
தன் கல்வி அறிவின் மூலம் தான் கற்றதையும், தன் நிறுவனத்தின் மூலம் தான் பெற்றதையும், தன் இளம் வயதிலேயே இந்த சமுதாயத்துக்கு திருப்பி செலுத்தும் வகையில் தன் பெற்றோரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன் மூலம் பார்வைத் திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் சாஃப்ட்வேர்களை உருவாக்கிக் கொடுக்க ஆரம்பித்ததுடன், அவர்களுக்காக தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த ஆரம்பித்தார். (2007)
பெரும்பாலோர் தங்களின் தனிப்பட்ட திறமைகளுக்காக விருதுகளைப் பெறுவதிலேயே கவனம் செலுத்திய காலத்தில், முற்றிலும் வித்தியாசமான சிந்தனையுடன் ஆண்டுதோறும் திறமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருது கொடுத்து கௌரவித்து வருகிறார். இவர் தன் இளம் வயதிலேயே (37) தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கிய இந்த உயரிய சேவைப் பயணம், தொடர்ந்து சமூகத்தில் பலருக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது! (2007)
சிறுவர் சிறுமியர்களை கதைகள் எழுத வைத்து அவற்றை அச்சு புத்தகமாக பதிப்பித்து வெளியிட ஆரம்பித்ததிலும் முதன்மையானவர் இவரே. அந்த வகையில் 12 வயதேயான பள்ளி மாணவி செல்வி. நிவாசினி ஆங்கிலத்தில் எழுதிய ‘The finding of a new world’ புத்தகத்தை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். (2008)
நம் நாட்டில் யு-டியூப் பிரபலமாக ஆரம்பித்த காலத்திலேயே ‘காம்கேர் டிவி’ என்ற யு-டியூப் சானலை உருவாக்கி அதன் மூலமும் கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர், இன்டர்நெட் முதலான நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தவர். யு-டியூப் மூலம் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்த ஆரம்பித்ததிலும் இவரே முன்னோடி! (2010)
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஸ்க்ரைப்களின் (Scribes) உதவியின்றி, தன்னம்பிக்கையுடன் சுயமாகத் தேர்வெழுத உதவும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் சாஃப்ட்வேர் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exam). மாற்றுத்திறனாளிகளின் கல்வி வாழ்விலும், தொழில்நுட்பத் துறையிலும் புதியதோர் புரட்சியை ஏற்படுத்திய இந்த முன்னோடி சாஃப்ட்வேரை வடிவமைத்தவர் காம்கேர் கே. புவனேஸ்வரி. (2017)
கொரோனா காலகட்டத்தில் பத்திரிகைத் துறையே வீழ்ந்துகொண்டிருந்த சமயத்தில் கல்கி, மங்கையர் மலர் உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளையும் உள்ளடக்கியக் கல்கிக் குழுமம் இவரை அணுகியது. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் அனைத்து இதழ்களையும் டிஜிட்டல் மயமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கல்கிக் குழுமம் மட்டுமல்ல, விஜயபாரதம் உள்ளிட்ட சில பத்திரிகைகளுக்கு அவர்களின் சப்ஸ்கிருப்ஷன் மற்றும் பில்லிங் செக்ஷனை டிஜிட்டல் மயமாக்கினார். (2022)
காம்கேர் கே. புவனேஸ்வரி தொழில்நுட்பத் துறையில் இயங்கி வந்தாலும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், பதிப்பாளராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்குக் கிடைத்த மாபெரும் அனுபவத்தின் வாயிலாகக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம். 2016-2018 வரை தேசிய சிந்தனை கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருந்தார். 2013-2014 வரை கல்கி குழுமப் பத்திரிகையான மங்கையர்மலரில் ‘ஸ்மார்ட் லேடி!’ என்ற தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்தி, ஃபேஸ்புக், ப்ளாக் முதலான சமூக வலைதளங்கள் மூலம் மங்கையர்மலர் வாசகிகளுடன் உரையாடி, அவர்களுக்காகவே தொடர்ந்து தொழில்நுட்பக் கட்டுரைகளையும் எழுதி அவர்கள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதே காலகட்டத்தில் விவேகானந்தரின் 150 ஆவது ஜெயந்தியை ஒட்டி நடத்தப்பட்டு வந்த விவேகானந்தம் டாட் காம் என்ற வெப்சைட்டில் தொடர்ச்சியாக விவேகானந்தர் குறித்து கட்டுரைகள் எழுதியதோடு அதன் தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். 2018 ஆம் ஆண்டு சிருஷ்டிக் குழுமத்தில் இருந்து வெளிவந்த அமிழ்தம் மின்னிதழிழை வடிவமைத்துக் கொடுத்ததுடன் அதன் ஆசிரியர் குழுவிலும் பொறுப்பில் இருந்தார். இப்படி நேரடியாகவும், நட்பு ரீதியாகவும் பல்வேறு பத்திரிகைகளுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக இருப்பதுடன் ஆசிரியர் குழுவிலும் பொறுப்பில் இருந்து வருகிறார். (2026)
தொழில்நுட்பக் கால மாற்றத்திற்கேற்ப தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் கருத்தரங்குகளை நடத்தி வரும் காம்கேர் கே. புவனேஸ்வரி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளின் முதன்மைச் சிறப்பு விருந்தினராகவும் விளங்குபவர். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் உயரிய தத்துவத்திற்கேற்ப, தன் தொழில்நுட்ப அறிவை உலகெங்கும் பகிர்ந்து, வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செம்மைப்படுத்தி வருகிறார். அண்மையில், 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஏஐ துறை சார்ந்து உரையாற்ற இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதே இதற்கு சான்று. (2026)
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவரது பல தொழில்நுட்பப் புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. வருடந்தோறும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இவரது எழுதுகின்ற நூல் பாடத்திட்டமாவது உறுதி. அந்த வகையில் இவர் ஒரு சாதனை முன்னோடி! (2026)
12 வயதிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கதை, கோகுலம் பத்திரிகையில் வெளியான ‘செய்யும் தொழிலே தெய்வம்’. தன் 21 வயது கல்லூரி காலத்திற்குள்ளாகவே 100-க்கும் மேற்பட்ட கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முன்னணிப் பத்திரிகைகளில் வெளியான அவை, பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளன. ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற முது மொழிக்கேற்ப, தன் தொழிலையே தெய்வமாகப் போற்றி, எழுத்துத் துறையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார். 1990-ல் சாவி பத்திரிகையில் வெளியான ‘நியதிகள் மாறலாம்’ என்ற கதை ‘காலம்தோறும் (1930-2020) பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் : எழுத்தும், போக்கும்’ என்ற தலைப்பில் P.hd செய்து 2026-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற திரு. இரா. குமரகுருபரன் அவர்களின் ஆராய்ச்சியில் இடம்பெற்றுள்ளது. (2026)
இவரது தொழில்நுட்பக் கட்டுரைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தினமலர், தினமணி, தினகரன், தி இந்து தமிழ், கல்கி, மங்கையர் மலர், விகடன், விஜயபாரதம், காண்டீபம், லேடீஸ் ஸ்பெஷல், மலர்வனம், Mixed Bag (English E-Magazine), அமுதசுரபி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் இவரது கட்டுரைகளும் தொடர்களும் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றன. கால மாற்றத்துக்கு ஏற்ப, அச்சுப் பத்திரிகையில் மட்டுமில்லாது இ-பத்திரிகைகளிலும் தொழில்நுட்பக் கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவற்றில் மின்னம்பலம் டாட் காம், தினசரி டாட் காம் போன்ற இ-பத்திரிகைகளில் வெளியான கட்டுரைத்தொடர்கள் உலகக்புகழ் பெற்றன. (2026)
1992 முதல் இன்று வரை ஒரு எழுத்தாளரின் படைப்புகள், காலத்தின் எல்லையைக் கடந்து மூன்று தலைமுறைகளாலும் கொண்டாடப்படுகின்றன என்றால், அதைவிடப் பெரிய பேறும் பெருமையும் இந்த இலக்கியப் பயணத்தில் வேறென்ன இருந்துவிட முடியும்? (2026)
தனது நிறுவனம் மூலம் தான் பெற்று வரும் அரிய தொழில்நுட்ப அனுபவங்களை, அந்தந்தக் காலகட்டத்திலேயே உடனுக்குடன் நூல்களாக ஆவணப்படுத்தி வருபவர். அதனாலேயே, தன் படைப்புகளைத் ‘தொழில்நுட்ப டைரி’ என்று பெருமையோடு குறிப்பிடுகிறார். உலகளாவிய தொழில்நுட்ப இலக்கிய வரலாற்றில், தன் படைப்புகளுக்கு இப்படியொரு அர்த்தமுள்ள மகுடத்தைச் சூட்டிய வேறு எவரும் இலர் என்ற தனித்துவப் பெருமைக்குரியவர்! (2026)
தகவல் தொழில்நுட்பத் துறையில், தனி ஒருவராக 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, உலகளாவிய வரலாற்று சாதனை படைத்த தனித்துவமிக்க நூலாசிரியர்! (2026)
தமிழக நூலகங்களில் நிறைந்திருந்த இவர் எழுதிய தொழில்நுட்ப நூல்களைப் படித்து, இன்று ஐடி துறையின் உயரிய பதவிகளில் சாதித்து வருகின்றனர் எண்ணற்ற கிராமப்புற இளைஞர்கள். ஒரு படைப்பாளியாக இவரை உச்சிமுகரச் செய்யும் ஆகச்சிறந்த வாழ்நாள் அங்கீகாரம் இதுவே! (2026)
தமிழகம் மற்றும் இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீலங்கா, மாஸ்கோ போன்ற நாடுகளிலுள்ள நூலகங்களிலும் இவரது புத்தகங்கள் இடம்பெற்று வாசகர்களுக்கிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து இவர் எழுதிய ‘போட்டோஷாப்’ நூலிற்கு வந்திருந்த பாராட்டுக் கடிதமே இதற்கு சான்று! (2026)
காம்கேர் கே. புவனேஸ்வரியின் தலைமையில் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் உருவாக்கிய சாஃப்ட்வேர்கள், அப்ளிகேஷன்கள், இணையதளங்கள், அனிமேஷன்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பப் படைப்புகளின் எண்ணிக்கை 1000-க்கும் மேல். விவசாயம் முதல் விண்வெளி வரை, உற்பத்தித் துறைகள் முதல் சேவைத் துறைகள் வரை, கல்வி முதல் மருத்துவம் வரை என பல்வேறு துறைகளில் இவரது தொழில்நுட்பப் பங்களிப்பு பதிவாகியுள்ளது. அதனால், ‘இவரது நிறுவனம் பங்களிக்காத துறையே இல்லை’ என்று கூறுவது மிகையல்ல. அந்தத் துறைகளுக்காக இவர் தயாரித்த சாஃப்ட்வேர்கள் உலக அளவிலும் பரவி புகழ்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். (2026)
காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல்கள் வெளிவராத ஊடகங்களே இல்லை என்று சொல்லலாம். 1992-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அவரது நேர்காணல்கள், தொழில்நுட்ப உலகில் இவர் இன்னும் ஓயாமல் இயங்கி வருவதற்கான வலுவான சான்றாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் புதுமையான படைப்புகளை மையமாகக் கொண்டு வெளியாகும் காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல்களின் எண்ணிக்கை 200-ஐ எட்டியுள்ளது. அந்த நேர்காணல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதற்காக பரிசீலனையில் இருப்பதுதான் இவரது பணிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும்.(2026)
காம்கேர் கே. புவனேஸ்வரி, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, இவரது தொழில்நுட்ப பங்களிப்பைப் பாராட்டி ‘Outstanding Alumni Award’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதேபோல, எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி தனது வைர விழா ஆண்டில், சாஃப்ட்வேர் துறையில் இவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி ‘Outstanding Performance in IT Field’ என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவ்வாறு, தாம் கல்வி பயின்ற நிறுவனங்களாலேயே இருமுறை கௌரவிக்கப்பட்டு, பெருமையுடன் கொண்டாடப்படும் முன்னணி தொழில்நுட்ப ஆளுமையாக காம்கேர் கே. புவனேஸ்வரி திகழ்கிறார். (2026)
தாம் பெற்ற கல்விக்காக நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் அவ்வப்போது நடைபெறும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் போதெல்லாம் மறுக்காமல் சென்று, மாணவிகளுக்கு இவர் தொழில்நுட்ப உரைகள் நிகழ்த்தி வருகிறார். அதேபோல், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவுடன் இணைந்த Education Committee-யில் ஆலோசகராக சில ஆண்டுகள் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், அந்தக் கல்லூரியின் அழைப்பின் பேரிலும், கல்லூரிக்கு நேரில் சென்று இவர் அவ்வப்போது தொழில்நுட்ப உரைகள் நிகழ்த்தி வருகிறார். இவ்வாறு, தாம் கல்வி பயின்ற கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இன்றளவும் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவது காம்கேர் கே. புவனேஸ்வரியின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். (2026)
1992-ஆம் ஆண்டு நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தையும், அதற்கான விருதையும் Tamil Nadu Cultural Academy அமைப்பின் மூலம் பெற்ற காம்கேர் கே. புவனேஸ்வரி, தொடர்ந்து தனது ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் வாயிலாக உருவாக்கி வரும் சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள் மற்றும் ஏஐ படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு விருதைப் பெற்று வரும் இவர், நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பின்னரும் உயரிய விருதுகளைத் தொடர்ந்து பெற்று வருவது அவரது அர்ப்பணிப்பான உழைப்பிற்குச் சான்றாக விளங்குகிறது. ஆம், 2022-க்குப் பிறகு இவர் பெற்றுள்ள விருதுகள், அவரது சாதனைகளுக்கு மணிமகுடம் சூட்டுவதைப் போல் அமைந்துள்ளன.
2022 ஆம் ஆண்டு, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு விழாவில் ‘குழந்தைக் கவிஞரின் பாடல்களை முதன் முதலில் அச்சில் இருந்து டிஜிட்டலுக்கு அனிமேஷன் வடிவில் கொண்டு சென்று அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் காம்கேர் கே. புவனேஸ்வரி’ என்று புகழாரம் சூட்டி விருதளித்து கெளரவித்தார்கள்.
28 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தொய்வும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கும் ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையும், ‘Inner Wheel District 323’ யும் இணைந்து, காம்கேர் கே. புவனேஸ்வரியின் சாஃப்ட்வேர் துறை சாதனைகளுக்காக 2022 ஆம் ஆண்டு ‘Shree Shakthi Award’ விருது அளித்து கெளரவித்தனர்.
ஏஐ துறையில் இவர் செய்துவரும் சாதனைகளுக்காக 2024 ஆம் ஆண்டு மலர்வனம் மின்னிதழ் இவருக்கு ‘சிறந்த ஏஐ ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து கெளரவித்தது.
2026 மகளிர் தினத்தை ஒட்டி சென்னை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 09-03-2026 அன்று Swadeshi Shodh Sansthan – Tamil Nadu Chapter சார்பாக இவருடைய 33 வருட ஏஐ ஆராய்ச்சிகளை கெளரவிக்கும் விதமாக Ai Excellence Award வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சிலர் செய்யும் சில செயல்கள் மட்டுமே புதுமையாக இருக்கும். ஆனால் காம்கேர் கே. புவனேஸ்வரி மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் புதுமையின் முத்திரை பதித்தவையாக இருக்கும். இவர் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும் புத்துணர்ச்சியுடனும் புதுமையுடனும் மிளிர்ந்து, புதிய பாதைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாகத் திகழ்கின்றன. இதுவே காம்கேர் கே. புவனேஸ்வரியின் தனிச்சிறப்பாகும். இதே சிறப்புடன் இவரது செயல்பாடுகளும், இவரது நிறுவனமும் நூறாண்டுகள் தொடர்ந்து இயங்கி, மக்களுக்குப் பயன் அளித்து, மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துகிறோம்.







