அக்ஷர – மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களின் தலைமையில், வடிவமைப்பில், எடிட்டிங்கில் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் 24 மொழிகளில் இந்திய இலக்கியத்துக்கான இணைய இதழ்.
இந்த முயற்சி என்னை ஈர்த்தமைக்கு முதல் காரணம் இதன் பெயர் – அக்ஷர.
இரண்டாவது காரணம் – 24 இந்திய மொழிகள் என்ற என்ற பிரமாண்டம்.
அக்ஷர-வின் முதல் இதழை வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக் மூலம் அறிந்தபோது ஆச்சர்யப்பட்டேன். இன்பாக்ஸில் இதை வடிவமைத்தது யார் என கேட்டேன். ‘நான் தான்… ஏன் ஏதேனும் பிழை இருக்கிறதா?’ என பதிலும் சொல்லி கேள்வியும் கேட்டிருந்தார்.
நான் வியந்தேன். காரணம். மாலன் அவர்களை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் மட்டுமே எனக்குப் பரிச்சியம்.
அக்ஷர-வுக்குப் பிறகுதான் இவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.
ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் முதுகலைப்பட்டம் பெற்றவர் என்பதையும்…
மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ்.ஆஃபீஸ் தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச்சொல் அகராதி ஒன்றையும் தொகுத்தளித்தவர் என்பதையும்…
சமகால இலக்கியம், அரசியல் விஷயங்கள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார் என்பதையும்…
அறிந்தபோது வியப்பும் பெருமையும்.
ஒரு எழுத்தாளர், அதே துறையில் மேலைநாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று, தமிழ் சார்ந்த தொழில்நுட்பத்தை கால மாற்றத்துக்கு ஏற்ப அப்டேட் செய்துகொண்டு, சமகால இலக்கியத்தை சமகால தொழில்நுட்பத்துடன் இணைத்து இழைத்து அக்ஷர மூலம் கொண்டு வந்ததை அறிந்து…
வியந்து பெருமைப்பட்டதோடு நின்று விடாமல் இவரது உயரிய முயற்சியான அக்ஷர-வை மக்களுக்கு பரவலாக்க வேண்டும் என நினைத்தேன்.
இவரைச் சார்ந்த நண்பர்கள் / உறவினர்கள் சிலரிடம் அக்ஷர குறித்து கருத்து கேட்டு சேகரித்தேன். அதில் என் கருத்துக்களையும் இணைத்தேன்.
எதேச்சையாக இவரது பிறந்தநாளும் அக்டோபர் 8 என அறிந்தேன். இதையே இவரது பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.
http://www.akshra.org/category/on-akshra/
தொழில்நுட்பம் சார்ந்த தமிழுக்கு இவருடைய உயரிய பங்களிப்புக்கு தொழில்நுட்பக் களத்திலேயே / தளத்திலேயே வாழுகின்ற என்னால் ஆன சிறிய பங்களிப்பு…
இவருடைய திறமையையும், உழைப்பையும் மட்டுமில்லாமல்…
இவருடைய நேர்மையும், பண்பும், ஒழுக்கமும் இன்றைய இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே பின்பற்ற வேண்டிய பண்புகள்.
பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 8, 2018