அறம் வளர்ப்போம் 83-89

அறம் வளர்ப்போம்-83
மார்ச் 23, 2020

பாரம்பரியம் –  நம் தலைமுறைப் பெருமை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை, அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்த வேண்டிய கடமை

நமது முந்தைய தலைமுறைப் பெருமைகளுக்கு பாரம்பரியம் என்று பெயர்.

நமது பாரம்பரியம் நமது பெருமை என்ற பெருமித உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம் பாரம்பரியத்தை போற்றிப் பாதுக்காக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டாகும்.

நம் பாரம்பரியத்தை நாம் அறிந்து வைத்திருப்பதுடன் நம் அடுத்தத் தலைமுறையினருக்கும் கடத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-84
மார்ச் 24, 2020

முன்னெச்சரிக்கை – தற்காப்பு அறிவுறுத்தல்கள், அனுபவங்களின் பாடம், வரும் முன் காக்கும் யுக்தி

நடந்தேறிவிட்ட பிரச்சனைக்கான விளைவுகளை எடுத்துரைப்பது எச்சரிக்கை, பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக அறிவுறுத்துவது முன்னெச்சரிக்கை.

நம்முடைய நேரடி அனுபவங்களின் வாயிலாகவோ அல்லது பிறரது அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களினாலோ நம் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருப்பதற்கு முன்னெச்சரிக்கை என்று பெயர்.

ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் ஒரு யுக்தியே முன்னெச்சரிக்கை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-85
மார்ச் 25, 2020

எதிர்பார்ப்பு –  பற்றுதலுடன் கூடிய மகிழ்ச்சியான உணர்வு, எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கும், வாழ்க்கைக்கு நம்பிக்கைக்கொடுக்கும்  

எதிர்பார்ப்புகள் என்பது நமக்கு நடக்க இருக்கும் அல்லது நாம் விரும்பும் ஒரு நிகழ்வு குறித்த மகிழ்ச்சியான உணர்வு.

நம் எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கவல்லது. அதாவது ஒரு கடினமான வேலையின் கடினத்தன்மையின் மீது ஒரு எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு செயல்படும்போது அதை சுலபமாக எதிர்கொண்டு வெற்றுகரமாக முடிக்க முடியும் மனவலிமை கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தாது. நம்மிடம் வைக்கும் எதிர்பார்ப்பு நம் வாழ்க்கைக்கு நம்பிக்கைக்கொடுக்கும். பிறரிடம் வைக்கும் எதிர்பார்ப்புகள் மற்றவர்களை சார்ந்ததாக இருப்பதால் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai


அறம் வளர்ப்போம்-86
மார்ச் 26, 2020

சேவை –  அத்தியாவசியமான உதவிகள், எதிர்பார்பில்லாமல் பிறருக்காக பணி  செய்தல், ஆத்ம திருப்த்தியுடன் வேலை செய்தல்

அத்தியாவசியமான உதவிகளை தேவைக்கு ஏற்ப சூழல் அறிந்து செய்வதே சேவை எனப்படும்.

பிறருக்காக உதவி செய்யும்போது அதில் எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்தால் அது சிறப்பு பெறும்.

எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்காக செய்யப்படும் உதவிகளை ஆத்ம திருப்த்தியுடன் செய்யும்போது சொல்லணா மகிழ்ச்சி உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி பல்கிப் பெருகுவது உறுதி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-87
மார்ச் 27, 2020

தியாகம் –  தன்னலம் துறத்தல், விட்டுக்கொடுத்தல், ஆசைகளை கைவிடல்.

பிறர் நலனுக்காக தன்னலம் துறந்து பணி செய்தலை தியாகம் எனலாம். வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் சரி யாராவது ஒருவரின் தியாகத்தினாலேயே அது நிமிர்ந்து நிமிர்ந்து நிற்கும்.

நமக்குப் பிடித்ததை பிறருக்காக விட்டுக்கொடுப்பதும் தியாகம்.

நம் ஆசைகளை பிறருக்காக கைவிடுவதுகூட தியாகத்தில்தான் அடங்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-88
மார்ச் 28, 2020

வாய்ச்சவடால் –  ஆரவாரமாக பேசுவது, ஆர்ப்பாட்டம் பேச்சில் மட்டுமே செயலில் அல்ல, பிறரை தூண்டிவிடும் அளவுக்கான பேச்சுவன்மை  

தன்னால் எதையும் சுலபமாகச் செய்துவிட முடியும் என்பது போன்ற அல்லது தனக்கு எதுவும் பெரிதல்ல என்பது போன்ற தோரணையை ஏற்படுத்தும் ஆரவாரப் பேச்சுக்கு வாய்ச்சவடால் என்று பெயர்.

ஆர்ப்பாட்டமான பேச்சுத் திறமையுடன் வாய்ச்சவடால் செய்பவர்களால் பெரும்பாலும் பேசுவதை செயலில் காட்ட முடியாது.

பிறரை தூண்டிவிடும் அளவுக்கு வாய்ச்சவடால் செய்து பேசுபவர்களின் திறமை மேடை பேச்சுகளுக்கும் மார்க்கெட்டிங் பணிகளுக்கும் மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 59 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon