இங்கிதம் பழ(க்)குவோம்: 1-6

ஏப்ரல் 14, 2020 to ஏப்ரல் 19, 2020

 1. ஆண் என்ன, பெண் என்ன?
 2. எதிலும் பொய் வேண்டாமே!
 3. உதவி கேட்டால் செய்ய முயற்சிப்போமே!
 4. பாரபட்சமின்றி பழகலாமே!
 5. தனித்துவத்துடன் செயல்படுவோமே!
 6. பொறாமைப்பட வேண்டாமே!

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 1
ஏப்ரல் 14, 2020

ஆண் என்ன, பெண் என்ன?

ஆண் பெண் பேதமில்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.

ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் பற்றிய புரிதலையும் பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் பற்றிய புரிதலையும் மென்மையாக எடுத்துச் சொல்வது சிறந்தது.

முடிந்தவரை அவரவர்கள் வேலையை அவரவர்கள் செய்துகொள்ளப் பழக்குவோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 2
ஏப்ரல் 15, 2020

எதிலும் பொய் வேண்டாமே!

சிறு விஷயங்களுக்குக்கூட பொய் சொல்ல வேண்டாமே. ஏனெனில் நாம் என்ன பேசுகிறோமோ அதையே நம் மனம் நம்பிவிடும்.

‘நாம் செய்யப்போவதை மட்டுமே சொல்லுவோம்’என்ற நம்பிக்கைக்கு (உண்மைக்கு) நம் மனதை பழக்கப்படுத்தியிருந்தால் மட்டுமே நாம் செய்கின்ற செயலுக்கான உத்வேகம் நமக்குள் உண்டாகும். அந்த உத்வேகமே நேர்மறையான சூழலை உண்டாக்கும். நம்முடைய செயல்களை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வல்லமையை கொடுக்கும்.

மாறாக, ‘நாம் சொல்லுவதை எல்லாம் அப்படியே சிரமேற்கொண்டு செய்யமாட்டோம்’என்ற நம்பிக்கைக்கு (பொய்மைக்கு) நம் மனது பழக்கமாகி இருந்தால் நமக்குள் உத்வேகமோ, சூழலோ, ஆற்றலோ எதுவுமே நமக்கு சாதகமாக இருக்காது. நம் செயல்பாடுகளும் வெற்றியடையாது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 3
ஏப்ரல் 16, 2020

உதவி கேட்டால் செய்ய முயற்சிப்போமே!

யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் அது நம் சக்திக்கு உட்பட்டதாக இருக்கிறதா என ஆராய வேண்டும்.

நம் சக்திக்கு உட்பட்டதாக இருந்தால் உடனே உதவி செய்ய முயற்சிக்க வேண்டும்.

மாறாக, நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் அவர்களை காக்க வைக்காமல் தகுந்த காரணத்தைச் சொல்லி விடுவது சாலச் சிறந்தது. அவர்கள் வேறு வழியில் முயற்சிக்க வசதியாக இருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 4
ஏப்ரல் 17, 2020

பாரபட்சமின்றி பழகலாமே!

வயது வித்தியாசமின்றி மரியாதை கொடுத்துப் பழகுவோமே.

ஏழை பணக்காரர் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் எல்லோரையும் சரிசமமாக பாவிப்போமே.

பாரபட்சமின்றி பழகுவதை வழக்கமாக்கிக்கொள்ளலாமே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 5
ஏப்ரல் 18, 2020

தனித்துவத்துடன் செயல்படுவோமே!

ஊரோடு ஒத்துவாழ வேண்டியதுதான். ஆனாலும் நமக்கென சில கொள்கைகளை வைத்துக்கொள்வதன் மூலம் தனித்துவத்துடன் செயல்பட முடியும்.

ஒரு தவறை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக அது சரியென்று ஆகிவிடாது. அதையே நாம் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை.

தனித்துவத்துடன் செயல்படும்போது மனநிறைவும் ஆத்மதிருப்தியும் உண்டாகி தன்னம்பிக்கை உணர்வு மேலோங்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 6
ஏப்ரல் 19, 2020

பொறாமைப்பட வேண்டாமே!

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். தனித்திறன் கொண்டவர்கள். எனவே யாருடனும் நம்மை ஒப்பிட்டுகொள்ளத் தேவையில்லை.

பிறருடன் ஒப்பிட்டுக்கொள்ளும்போது பொறாமைப்படத் தோன்றும். உயர்வு மனப்பான்மை அல்லது தாழ்வு மனப்பான்மை எழும்.

பொறாமைப்படும்போது நம் இயல்பைமீறி நடந்துகொள்வோம். நம் சுயத்தை இழப்போம். பிறருக்காக போலியாக வாழ ஆரம்பிப்போம். எனவே பொறாமைப்பட வேண்டாமே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 71 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon