காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய நூல்கள் குறித்து வாசகர் பார்வை!

கிருஷ்ணசிவம் : இவர் 1992-ல் இருந்து நான் எழுதிவரும் தொழில்நுட்பப் புத்தகங்களில் பெரும்பாலானவற்றை வாசித்து தானும் பயன்பெற்று தன்னைச் சார்ந்தவர்களிடத்திலும் பகிர்ந்து வருகிறார். என் புத்தகங்களின் வாயிலாக டாட்நெட், ஜாவா, ஆரக்கிள் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி  கடந்த  ஆறு வருடங்களாக தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார். வெப்சைட்டில் எனது எல்லா புத்தகங்களையும் ஒரே இடத்தில் கவனித்த இவர் என்னை வாழ்த்தி கவிதை ஒன்றை எழுதி அனுப்பினார். அன்புக்கு நன்றி!

உலகத் தரம் வாய்ந்த…
ஆய்வு நூல்கள் போல…

அழகு தமிழிலும்
புரியும் ஆங்கிலத்திலும்…

ஐடி நிறுவனங்களிலும்
அனிமேஷன் துறையினர்களுக்கும்
வழிகாட்டி நூல்களாக அமையப்பெற்று
வழிகாட்டி வருகின்ற…

தமிழகத்தில் மட்டுமல்ல
இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல
உலகளாவிய நூலகங்களிலும்
இடம்பெற்று வருகின்ற…

இளங்கலை முதல் முதுகலை வரை
ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட
அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும்
பயன்படும் வகையில் பல்வேறு
பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாக
வைக்கப்பட்டுள்ள…

காம்கேர் கே. புவனேஸ்வரியின்
தொழில்நுட்பப் புத்தகங்களும்
வாழ்வியல் நூல்களும்
எண்ணிக்கையில் 150-ஐ தாண்டி
சாதனை படைத்துள்ளன…

இவரது புத்தகங்கள் மட்டுமல்ல
இவர் நிறுவனத்தில் தயாராகும்
சாஃப்ட்வேர், அனிமேஷன்
ஆவணப்படங்கள் கூட
பல்கலைக்கழக அந்தஸ்த்தில்…

1992-முதல் இன்று வரை
தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியத்தில்
இவர் கற்றதையும் பெற்றதையும்
எழுத்து, ஆடியோ, வீடியோ என
பல்வேறு வடிவில்
இந்த சமுதாயத்துக்கு
பயன்படும் வகையில்
படைப்பாக்கம் செய்து
பதிவாக்கியுள்ளார்…

இவரது படைப்புகளை வைத்தே
ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெறும்
மாணவர்கள் உருவாகி
உள்ளார்கள் என்பதும்…

சுயமாக தொழில் செய்து
முன்னேறும் தொழில் முனைவோர் பலர்
உருவாகி உள்ளார்கள் என்பதும்…

தமிழகத்தில் தமிழில்
கல்வி பயின்று
உலகம் முழுதும்
பல்வேறு நாடுகளில்
தொழில்நுட்ப வல்லுனர்களாக
பணியாற்றி வரும் பலர்
இவரது படைப்புகள் வாயிலாக
தொழில்நுட்பம் பயின்றவர்கள் என்பதும்…

இவரது உழைப்பின் சான்று!

கிருஷ்ணசிவம் 

(Visited 57 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon