மனோ தைரியம்!

சரியானதை யோசிப்பவர்…

தனக்குப் பிடித்த வேலையை செய்பவர்…

தன் மனசாட்சிக்கு சரியெனப்படுவதை பேசுபவர்…

மாயவரத்தான் கி ராமேஷ்குமார்…

இவரும் என் சகோதரனும் பி.எஸ்.ஸி படித்தபோது

நான் எம்.எஸ்.ஸி முதலாம் ஆண்டில்…

நாங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள்!

என் சகோதரன் வயதை ஒத்த இவருக்கு பைபாஸ் சர்ஜரி என்றதும் கொஞ்சம் அதிர்ந்தேன்!

புகை, மது என உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் எந்த பழக்கமும் இல்லை. மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சுபாவம். இத்தனை இருந்தும் இவருக்கு(ம்) பைபாஸ்…

காரணம் சுற்றுப்புற சூழல் மாசினால் சுவாசிக்கும் காற்றில் மாசு, நாம் அருந்தும் தண்ணீரில் மாசு, காய்கறி பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களிலும் உரங்களினாலும் பிற கலப்படங்களினாலும் மாசு…

இவை காரணமாக நாம் நம் உடலை எத்தனை கவனமாக பார்த்துக்கொண்டாலும் எல்லா கோளாறுகளும் அழையா விருந்தாளிகளாய் நம்மை வந்து சேர்கின்றன.

புகை, மது போன்ற பழக்கங்கள் எதுவுமே இல்லாதவர்களுக்கு  இதுபோன்ற உடல்நலக் கோளாறுகள் வருவதற்கு 25 சதவிகித வாய்ப்பென்றால், இந்தப் பழக்கங்கள் இருப்பவர்களுக்கு 50 சதவிகித வாய்ப்பு. அவ்வளவுதான்.

இவரது மன உறுதியும், தைரியமுமே இவருக்கு மனோபலத்தையும், தேக பலத்தையும் கொடுத்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் ஒருசில எழுத்தாளர்கள் தங்களுக்கு நடந்த பைபாஸ் சர்ஜரி குறித்து மிக பயங்கரமான எழுத்து நடையில் கட்டுரையாகவும், புத்தகமாகவும் எழுதியதை படித்திருக்கிறேன். அதைப் படிப்பவர்கள் என்றேனும் ஹார்ட் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனால் அந்த எழுத்தாளர்களின் அனுபவங்கள் நினைவுக்கு வந்து மகோதைரியத்தை வலுவிழக்கச் செய்யும். அந்த அளவுக்கு தங்கள் அனுவங்களில் சுயபச்சாதாபத்தை இழைத்திருந்தார்கள்.

ஆனால்

ரமேஷ்குமார் தனது மருத்துவமனை அனுபவத்தை தனக்கும் பிறருக்கும் நேர்மறை சிந்தனையை உண்டாக்கும் வகையில் பாசிட்டிவாக புகைப்படத்துடன் பதிவிட்டு வந்தார்.

பைபாஸாக இருந்தால் என்ன அதற்கும் மேல்தான் வந்தால்தான் என்ன… மனோதைரியத்துடன் இருந்தால் எமனையும் சந்தித்துவர முடியும் என்பதை நிரூபித்துள்ள இவர் நீடூழி வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Softawre

மே 23, 2019

(Visited 54 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari