
அனைவருக்கும் வணக்கம்.
2025…
கிட்டத்தட்ட 34 வருட அனுபவத்தில்!
எங்கள் காம்கேர் சாஃப்ட்வேரில், மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளுக்கு Ai சாஃப்ட்வேர்களை தயாரித்து வழங்கினோம்…
இன்னும் சில துறைகளுக்கு Ai சாஃப்ட்வேர்கள் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம்…
சில பத்திரிகைகளுக்கும் Ai ப்ராஜெக்ட்டுகள் செய்ய ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்…
பல பல்கலைக்கழகங்கள், சில கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என Ai குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். Ai குறித்து எளிமையாக பேசுவதும், உரையாடுவதும் மகிழ்ச்சியே…
சில தனியார் நிறுவனங்கள் அழைத்த நிகழ்ச்சிகளில் பணி நிர்பந்தம் காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை…
இரண்டு ஆங்கில இதழ்களில் Ai குறித்த கட்டுரைகள் எழுதினேன்… Mixed Bag இதழில் எழுதியதற்காக Best Writer in English என்ற விருது / அங்கீகாரத்தை அளித்தார்கள்.
வழக்கம் போல் சில தமிழ் பத்திரிகைகளில் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேவையான Ai கட்டுரைகளை எழுதி வந்தேன்.
1992-ல் இருந்தே தொழில்நுட்பத்தை நம் மக்களிடையே பரவலாக்க எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ என பல்வேறு விதமாக கொண்டு சென்றுள்ளதில் இந்த வருடமும் மகிழ்ச்சியே…
34 வருட அனுபவத்தில், 2025 டிசம்பருடன், எம் நிறுவன ப்ராஜெக்ட்டுகள் மூலம் எனக்கு கிடைக்கும் அனுபவங்களை எல்லாம் கருத்தரங்குகள் மூலம் கற்றுக் கொடுத்ததில் எம் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்துக்கும் மேல் எட்டியது.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் திருமந்திர வாக்கிற்கேற்ப எம் நிறுவன ப்ராஜெக்ட்டுகள் மூலம் கிடைக்கின்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருவதில் பெருமகிழ்ச்சியே…
எங்கள் நிறுவனத்தில், 1992-ல் தொடங்கிய Ai ஆராய்ச்சிகள் பல்வேறு பரிணாமங்களைக் கடந்து இன்று எளிய முறையில் மக்கள் பயன்படுத்தும் பதத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதில் மகிழ்ச்சி.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இந்த வருடம் (2025) டிசம்பர் 9 ஆம் தேதி என் பிறந்த நாள் அன்று என் அப்பாவின் ஆட்டோபயோகிராஃபியை Ai ல் தயாரித்து வெளியிட்டேன், எங்கள் குடும்ப உறவினர்கள் முன்னிலையில். விரைவில் 2026 ஆம் ஆண்டு பொதுவெளியிலும் வெளியிடுவேன்.
இது உலகிலேயே முதன் முதலாக Ai – ல் தயாரிக்கப்பட்ட சுயசரிதை. (நான் அறிந்த வரை….)
எங்கள் உறவினர்கள், ‘உன் பிறந்த நாள் அன்று உன் வளர்ச்சியைத்தானே வெளியிட வேண்டும்…. ஆனால் அப்பா அம்மாவின் சுயசரிதையை வெளியிட்டுள்ளாய்…’ என்ற போது நான் சொன்ன பதில் இதுதான்:
நான் இயங்கும் துறையின் உச்சத்தில் இருக்கும் Ai தொழில்நுட்பத்தில் என் பெற்றோரின் ஆட்டோபயோகிராஃபியை தயாரித்து வெளியிட்டுள்ளேன்.
மொத்தம் 21 பகுதிகள், 3 சீசன், ஒவ்வொரு சீசனிலும் 7 பகுதிகள். இதன் பின்னணியில் அசாத்திய உழைப்பு உள்ளது. என் அறிவு, ஆற்றல், திறமை என என் ஒட்டு மொத்த சக்தியையும் செலவழித்து கொண்டுவந்துள்ள இந்த ஆட்டோபயோகிராஃபி ஒன்று போதுமே ‘நான் யார் என்று சொல்ல?’ இதைவிட என்னைப் பற்றிய வளர்ச்சியை வேறெப்படி சொல்ல முடியும்? நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இப்படி செய்தேன், அப்படி உழைத்தேன், இத்தனை கண்டுபிடிப்புகள் கொண்டு வந்தேன் என்றெல்லாம் பேசுவதைவிட ஒரு செயல் ஒற்றை செயல் எல்லாவற்றையும் தூக்கி நிறுத்த வேண்டும் அல்லவா?
அந்த ஒற்றை செயல்தான் ‘என் அப்பாவின் ஆட்டோபயோகிராஃபி ‘விகே (எ) விக்டரி கிங்’ (VK Alias Victory King).
விரைவில் இதன் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 1, 2026 | வியாழன்







