Reading Ride – ரா. ஸ்ரீதர்!

ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்)
ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி
பண்ணந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

அசத்தும் Ai – நூல் குறித்து  திருமிகு. ரா.ஸ்ரீதர்! 

நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர்.  நான் முதுகலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த புதிதில் (2012 ) கம்ப்யூட்டர் மடிக்கணினி என்பது ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்த கருவியாக இருந்தது . கண்ணாடி ரூம்.. மினுக் மினுக் என்ற திரை.  டக் டக்கென்று மாறும்  விண்டோ ஸ்கிரீன்ஸ் என்று பிரமிப்பாக இருந்தது.

எங்களுக்கு நடக்கும் பயிற்சி வகுப்பில் பவர் பாயிண்ட் மூலமாக அழகாக திரையில் எழுத்துக்கள் போட்டோக்கள் வண்ண வண்ண வடிவமைப்புடன் கூடிய டிரான்ஸிஷன் எனப்படும் கிராஃபிக்ஸுடன் தோன்றி மறையும்.

நான் பயிற்சி அளிப்பவரிடம்  ‘எப்படி இந்த கிராஃபிக்ஸ் செய்தீர்கள்?’ என்று கேட்பேன். ‘ கம்ப்யூட்டர் மூலம்’ என்று சொல்லிவிட்டு நகர்வாரே தவிர, ‘பவர் பாயிண்ட் மூலம்’ என்று ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. எனக்கும் கம்ப்யூட்டரை கையாண்டு மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் MCQ,  பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் என்று தயாரித்து பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஆசை. பள்ளியில் உள்ள கணினி ஆசிரியரிடம் கேட்டால்  ‘சேலரி பில் போடுவதற்கே நேரம் இருப்பதில்லை. உங்களுக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்?’ என்று சொல்லிவிட்டார். அப்போதைய தனியார் பயிற்சி நிறுவனங்களும் அதிக அளவில் பணம் வாங்கிய காலம் அது. இப்படி நான் ஏங்கிக் கொண்டே தான் இருந்தேன். ஒரு நாள் எதேச்சையாக எங்கள் ஊர் காரிமங்கலம் நூலகத்தில் அடுக்கில் புதிதாக கணினிப் பிரிவு என்ற லேபிள் போட்டு புத்தகங்களை அடுக்கினார்கள். அதில்  ‘காம்கேர் கே புவனேஸ்வரி’ அவர்களின் பவர் பாயிண்ட் கற்றுக் கொள்வதைப் பற்றிய (2013) தமிழில் மிக மிக எளிமையாக புரியும் வகையில் நிறைய படங்களுடன் புத்தகம் இருந்தது. நான் கட்டணம் கட்டி கெஞ்சி கூத்தாடி அந்த புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்து எனது நோட்டில் ஃப்ளோ சார்ட் போல பலவித குறிப்புகளை எடுத்துக் கொண்டேன், கற்றுக் கொண்டேன். ஒரு குழந்தைக்கு எப்படி தாயானவள் விரல் பிடித்து மேடு பள்ளங்களில் ‘இப்படி வா அப்படி போ’ என்று சொல்லி அழைத்துச் செல்வார்களோ அதுபோல்  ‘காம்கேர் புவனேஸ்வரி’ அவர்கள் அந்த புத்தகத்தில் வழிகாட்டி இருந்தார்கள். மேலும் எம் எஸ் வேர்ட், எம் எஸ் எக்ஸ் எல், மாணவர்கள் அனைவருக்கும் ஈமெயில், அவ்வப்போது அலுவலக வேலைகளில் CEO DEO Email அனுப்புவது..  Covering letters, Result Analyisis, Questions Papers by MS word and  Marks analysis by MS Excel எல்லாமே செய்தது எல்லாமே காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களின் புத்தகங்களின் மூலமாக  தமிழில் கற்றுக் கொண்டேன்.

அவர்களின் புத்தகங்களின் மூலமாக இன்று நான் AI வரைக்கும் கற்றுக்கொள்ள முற்படுகிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்கள் ஆரம்பத்தில் எனக்கு தமிழ் மூலம் சொல்லித்தந்த கம்ப்யூட்டர் புத்தகங்கள் தான்.

எங்களுக்கு புதிதாக அரசு லேப்டாப் தந்த போது கூட லேப்டாப் A To Z புத்தகம் கூட மிக மிக உபயோகமாக இருந்தது தமிழில் எனக்கு. தற்போது ஆச்சரியப்படும் வகையில் இன்றைய தமிழக அரசு மைக்ரோசாப்ட் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு AI CHATGPT பயிற்சிகளை தருவது எனக்கு கடந்த கால ஏக்கங்களை நினைவுபடுத்துகிறது. தமிழ் மூலம் எளிமையாக கம்ப்யூட்டருடைய மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் காம்கேர் கே புவனேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி. பண்ணந்தூர். கிருஷ்ணகிரி மாவட்டம்.

(Visited 921 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon