அசத்தும் Ai – தமிழ்ப் பதிப்பக உலகின் முதன் முயற்சி, புதுமை, சாதனை, வெற்றி!

பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப்
புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்!
காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா!
முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! 
 

சூரியன் பதிப்பகம் + காம்கேர் கே. புவனேஸ்வரியின் முயற்சியின் வாயிலாக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டும்தான் தமிழ்ப் பதிப்பக உலகில் Ai-காக வெளியாகி உள்ள முதல் இரண்டு புத்தகங்கள்.

இந்த இரண்டு புத்தகங்களும் தயாரான நாளில் இருந்து இன்று வரை ஆன்லைனில் எங்கள் காம்கேர் யு-டியூப் சேனலில் தினம் ஒரு சிறப்பு அழைப்பாளரை அழைத்து அறிமுகம் செய்ய வைத்திருக்கிறோம். இதுவும் முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை என்றும் சொல்லலாம். நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் ஒரு யுக்தி. அதனால் கொஞ்சம் தற்பெருமை இருந்துவிட்டுத்தான் போகட்டுமே! அனுமதிக்கலாம். தவறில்லை.

பதிப்பக உலகில் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். தமிழ்ப் பதிப்பக உலகில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இது முதன் முயற்சியாக இருக்கலாம். அது குறித்து இன்னும் நீண்ட ஆராய்ச்சி செய்யவில்லை. காரணம் Ai ஆராய்ச்சிப் பணிகளுக்கே நேரம் சென்றுவிடுகிறது.

மீண்டும் உறுதி செய்கிறோம்…

தமிழ்ப் பதிப்பக உலகில் Ai – காக முதன் முதலில் இரண்டு நூல்களை வெளியிட்டதும் அதில் இதுவரை யாருமே செய்யாத புதுமையை (அட்டை முதற்கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் கண்முன் தோன்றி பேசுகின்ற Ai அவதார்கள் ) செய்ததும் சூரியன் பதிப்பகமும் காம்கேர் கே. புவனேஸ்வரியும்தான் என்பதை இந்தப் பதிவின் மூலம் உறுதி செய்கிறோம்.

இதுபோல புத்தகக்காட்சி நடைபெற்ற 19 நாட்களும் ஒரு புத்தகத்துக்கே 19 சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து தொடர்ச்சியாக அறிமுக விழா எடுத்ததும் புதுமையே. Ai புத்தக அறிமுக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அவர்களின் Ai அவதாரையே உருவாக்கி டிஜிட்டல் பரிசளித்தோம். ஆன்லைன் நிகழ்ச்சிக்கு டிஜிட்டல் பரிசு பொருத்தம் தானே?

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை அழைப்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

புத்தகங்களை எப்படி வாங்குவது?
வாட்ஸ் அப்: 9444949921

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 24, 2024 | புதன்

#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024

நூல் அறிமுக விழாவை சிறப்பித்தவர்களுக்கு அளித்த அவதார்கள் இந்த வீடியோவில்!

(Visited 19,833 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon