அப்பாவின் நட்சத்திர பிறந்த நாள்!
இன்று அப்பாவின் நட்சத்திர பிறந்தநாள். திருவான்மையூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கும், அடையார் அனந்தபத்மநாபன் சுவாமி கோயிலுக்கும் சென்றுவிட்டு அடையார் சங்கீதாவில் சாப்பிட சென்றோம்.
அங்கு நாங்கள் சாப்பிடும் டேபிளுக்கு எதிரே உணவை வீணாக்காதீர் என்று பொதுவாக சொல்வதற்கு பதிலாக அரிசி நமக்கு கிடைக்க எத்தனை நாளாகிறது. எத்தனை பேரின் உழைப்பு அதில் அடங்கி உள்ளது என்பதை படத்துடன் விளக்கி இருந்தார்கள். சாப்பாட்டைவிட அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பொதுவாக நான் பிறந்த நாள் பதிவை எழுதுவதில்லை. ஆனால் இன்று உணவை வீணாக்காதீர் விளம்பரத்துக்கான படம் என் மனதை தொட்டது. ஆகவே, இந்தப் பதிவு!
சங்கீதா ஓட்டலின் 40 ஆவது ஆண்டுவிழா என்பதால் மைசூர்பாகு ஸ்வீட்டை கிஃப்ட் பாக்ஸில் வைத்து கொடுத்தார்கள். அப்பாவுக்கு பிறந்த நாள் பரிசு போல அமைந்தது. (புகைப்படத்தில் அப்பாவும் அம்மாவும் அதைத்தான் வைத்துள்ளார்கள்)
அப்பா காலையிலேயே பாதாம் அல்வா செய்திருந்தார். தானே தன் கையால் செய்வதுதான் பிடிக்கும் என்பதால் அம்மாவும் நானும் அந்த ஆர்வத்துக்கு குறுக்கே நிற்க மாட்டோம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 9, 2025