அறம் வளர்ப்போம் 27-33

அறம் வளர்ப்போம்-27
ஜனவரி 27, 2020

அடக்கம் –  அமைதியை கொடுக்கும், அறியாமையை விலக்கும், பெருந்தன்மையை வளர்க்கும்.

எத்தனை அறிவாளியாக இருந்தாகும் அடக்கமாக இருக்கும்போது நமக்குள் ஓர் அமைதி உண்டாகும்.

அடக்கமாக இருக்கும்போது நிறைய சிந்திக்க நேரம் இருக்கும். நம் அறியாமை விலகும்.

அடக்கமாக இருந்தால் நம் பெருந்தன்மை மனப்பான்மை கூடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-28
ஜனவரி 28, 2020

வாய்மை –  பொய் பேசாதிருத்தல், உண்மையை பேசுதல், தீமையில்லா வார்த்தைகளை பேசுதல்

பொய் பேசாமல் இருப்பதே வாய்மை எனப்படும்.

உண்மையை மட்டுமே பேசுதல் வாய்மை எனப்படும்.

பிறருக்கு தீமை கொடுக்காத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதும் வாய்மையே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chenna

அறம் வளர்ப்போம்-29
ஜனவரி 29, 2020

ஈடுபாடு –  செயல் திறனை அதிகரிக்கும், ஆக்க சக்தியை கொடுக்கும், புத்துணர்வுடன் செயல்பட வைக்கும்.

ஒரு வேலையை ஈடுபாட்டுடன் செய்யும்போது அது நாம் செய்கின்ற பணியை முழுமையாக செய்ய வைக்கும்.

செய்யும் செயல்களில் நாம் காட்டும் ஈடுபாடு நம் ஆக்க சக்தியை அதிகரிக்கும்.

நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்படுவதற்கு எல்லா விஷயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது ஒன்றே வழியாகும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-30
ஜனவரி 30, 2020

மனத்தூய்மை –  முகத்தில் பொலிவைக் கூட்டும், நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்கும்,  செய்யும் செயல்களில் அழகை உண்டாக்கும். 

ஒருவரது மனம் தூய்மையாக இருந்தால் அது அவர்கள் முகத்தின் பொலிவை கூட்டும்.

மனத்தூய்மையுடன் செயல்படுபவர்கள் செல்லுமிடமெங்கும் நேர்மறை அதிர்வலைகள் உண்டாகும்.

மனத்தூய்மையுடன் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஓர் அழகு தானாகவே உண்டாகி வெற்றியை நோக்கி நகரும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-31
ஜனவரி 31, 2020

புறத்தூய்மை –  சுகாதாரம், சுத்தம், தூய்மை

நம்மை சுகாதாரமாக வைத்துக்கொள்வதுதான் புறத்தூய்மையின் முதல் அடி.

நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது இரண்டாவது அடி.

நம் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது மூன்றாவது அடி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-32
பிப்ரவரி 1, 2020

இன்னா செய்யாமை –  துன்பம் செய்யாதிருத்தல், நன்மைகளையே செய்தல், துன்பம் செய்பவருக்கும் நன்மையே செய்தல்

இன்னா செய்யாமை என்பது பிறருக்கு துன்பம் செய்யமல் இருத்தல் என்று பொருள்.

பிறருக்கு தீமை செய்யாததுடன் நல்லவற்றையே செய்ய முயற்சித்தலும் இன்னா செய்யாமையே.

இன்னும் சொல்லப் போனால் துன்பம் செய்பவருக்கும் நன்மையே செய்ய முடியுமாயின் அதுவே ஆகச் சிறந்த அறம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-33
பிப்ரவரி 2, 2020

கோபம் –  அன்பை அழிக்கும், உறவை முறிக்கும், நட்பை விலக்கும்

கோபமாக இருக்கும்போது நமக்குள் இருக்கும் அன்பு சிதையும். வார்த்தைகள் சிதறும்.

கோபத்தினால் அன்பு அழிவதால் பிறருடனான சுமூகமான உறவுமுறை முறிந்து போகும்.

அன்பு குறைந்து கோபம் அதிகரிக்க அதிகரிக்க நம் நட்புகளை நாம் அதிக அளவில் இழக்க வேண்டியிருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 174 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon