Feedback – ஹலோ With காம்கேர் -160: நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி?

நேற்றைய என் பதிவு இன்றைய பதிவுக்குக் கருவானது எப்படி?

நேற்றைய என் பதிவு மரண பயம் குறித்தும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்மணியின் உடலை அவர்கள் உறவினர்கள் வாங்க மறுத்தது குறித்துமே.

நேற்று காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது  இரண்டு போன் அழைப்புகள். ஒருவர் திருமலைக் குமாரசுவாமி அவர்கள். மற்றொருவர் ஈஸ்வரமூர்த்தி நடராஜன்அவர்கள். இருவருமே ஃபேஸ்புக் பதிவுகளை மட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பே என் தொழில்நுட்பப்  புத்தகங்களையும் படித்தவர்கள். பயன்படுத்தியவர்கள்.

இருவருமே நேற்று நான் எழுதி இருந்த பதிவைப் படித்துவிட்டு பாராட்டினார்கள். என்னை பாராட்டியதைவிட என் பெற்றோரை ஒருபடி அதிகமாகவே பாராட்டினார்கள். நாட்டில் நடக்கின்ற குற்றங்களுக்கு காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறை, முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் என் சில விஷயங்களை அலசினோம்.

இதுபோல என்னுடன் சேர்த்து என் பெற்றோர்களைப் பாராட்டுவது எனக்குப் புதிதல்ல. மிக இளம் வயதிலேயே சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி சுதேசி சிந்தனையுடன் இந்தியன் தயாரிப்புகளையே தயாரித்து எழுத்து, பேச்சு, அனிமேஷன், ஆவணப்படங்கள் என எனக்கான பாதையை நான் அமைத்துக்கொண்டதால் பெரும்பாலானோருக்கு என்னைப் பார்த்து ஆச்சர்யம். தங்கள் குழந்தைகளுக்கு என்னை ரோல் மாடலாக்கினார்கள். என் பெற்றோரின் வளர்ப்பு முறையை மெச்சினார்கள்.

இந்த நிலை 27 வருடங்கள் கடந்தும் மாறாமல் இருப்பதுதான் எனக்கு ஆச்சர்யம். அன்றும் என் பெற்றோரைக் கொண்டாடினார்கள். இன்றும் கொண்டாடுகிறார்கள்.

எல்லா படைப்பாளிகளின் பெற்றோரும் இதுபோல கொண்டாடப்படுகிறார்களா என என் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

நேற்று காலையில் நடந்த தொலைபேசி உரையாடலின் பாதிப்பில் ‘உங்கள் அபிமான எழுத்தாளர்களையும், அவர்களின் படைப்புகளையும், நீங்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளால் கொண்டாடுவீர்கள்? என்று கேட்டிருந்தேன்.

எல்லோருமே மிக சிறப்பாகவே சொல்லி இருந்தீர்கள். என் அறிவிப்பை மதிப்பு தங்கள் கருத்தைப் பதிவிட்ட அனைவருக்கும் என் அன்பும், நன்றிகளும்.

ஈஸ்வரமூர்த்தி நடராஜன் அவர்கள் ‘here can be only one compcare k Bhubaneswar and none can neither excel nor reach her intellectual height. She is a gifted child with gifted parents.She touched all the sphere technical psychological logical and life guiding write ups.Even in today writing it was similar to M.K.Gandhi sathyasothanai and autobiogrpy of yogi.In her writeup there will not be any hypocracy or arrogance or authoritarian so. Moreover she is having tender mild and melting heart. Therefore her writings will not hurt or wound anybody and the writings will be so mild and smooth’ என்று என்னுடன் சேர்த்து என் பெற்றோரையும் பாராட்டி இருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பாக ராம்குமார் அவர்கள் விடியற்காலையில் எழுந்ததும் அவர் மனநிலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். என் பதிவினைப் படித்துவிட்டால் மனம் சமன் அடைந்துவிடும் என எழுதி இருந்தார். உண்மையிலேயே இந்த அளவுக்குப் பயனுள்ளதாக என் எழுத்து அமைந்திருப்பது குறித்து மனநிறைவு உண்டானது.

மேலும், ஜெயா சிங்காரம் அவர்கள் ‘உங்கள் எழுத்து என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. நான் எப்படி யோசிக்க வேண்டும் என்று புரிந்துள்ளது. உங்களால் அடுத்தவர் மனஉணர்வுகளை புரிந்து கொள்கிறேன்’ என்று கூறியிருந்ததும்…

செந்தில்குமார் ஆரமிர்தம் அவர்கள் ‘உணர்வுகளை உள்வாங்கி உள்ளத்தை தொடுவதைப் போல எழுதுகிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்ததும்…

தங்கமுனியசாமி ஜெகன்நாதன் அவர்கள் ‘தொழில்நுட்பக் கட்டுரைகளையும் ஜனரஞ்சகமான நடையில் எழுதும் உங்கள் எழுத்து நடை சிறப்பு’ என்று சொல்லி இருந்ததும்…

புவனேஸ்வரி முரளிதரன் அவர்கள்  ‘Versatile writing. நீங்கள் எழுத்தில் தொடாத துறையே இல்லை என்பது வியக்க வைக்கிறது. போகிற போக்கில் பல படைப்பாளிகள் மீதும், படைப்புகளின் மீதும், concepts மீதும்ப வெளிச்சம் பாய்ச்சும் தங்கள் எழுத்தின் மூலம் பல புதிய விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறேன்’ என்று எழுதியிருந்ததும்…

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

தவிர, குமரேசன் கந்தசாமி அவர்கள் ‘உளவியல் சார்ந்த சமூக அக்கறை கொண்ட எழுத்து’ என்றும், முருகேசன் பாலகிருஷ்ணன் அவர்கள் ‘பாமரனுக்கும் புரியும் நறுக், சுருக் வார்த்தைப் பிரயோகம்’ என்றும், சங்கர நாராயணன் பாலசுப்ரமணியன் அவர்கள் வழக்கம்போல ‘அருமை பெருமை இனிமை’ என்றும், இருங்கோவேல் அவர்கள் ‘அருமையான படைப்பு, தொடரட்டும் வாழ்த்துக்கள்’ என்றும், ஜெயந்தி சதீஷ் அவர்கள் ‘உண்மைகளையும் ஓட்டங்களையும் அழகாய் மிக லாவகமாக கையாள்கிறீர்கள்’ என்றும், சுட்டி கணேசன் அவர்கள் ‘அருமை மேடம்’ என்றும், குணராஜ் அவர்கள் ‘அருமை’ எனவும், சவுந்தர்ராஜன் ரகோத்தமன் அவர்கள் ‘அந்தந்த நேரத்தில் மனதில் பட்டதை பதிவிடுவேன்’ என்றும், கண்ணன் சரண்யா அவர்கள் ‘Simply Superb’ என்றும், பானு கணேசன் அவர்கள் ‘மிகவும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டுவேன்’ என்றும், கிருபா முருகேசன் அவர்கள் ‘உங்கள் எழுத்தைப் புரிந்துகொண்டு வாசகர்களும் தங்கள் கருத்தை எழுத வேண்டும் என தூண்டுவதாக உள்ளது’ என்றும், வெங்கடசேஷன் சங்கர் ‘எழுத்தாளர்களுடன் அவர்கள் எழுத்துக்களை விவாதிப்பேன்’ என்றும், கோவிந்தராஜன் அவர்கள் ‘எழுத்தாளர்களின் எழுத்துக்களின் குறை நிறைகளை விவாதிப்பேன்’ என்றும், கணேஷ் பாபு அவர்கள் ‘உங்கள் பதிவுகள் தினமும் என்னைப் படிக்கத் தூண்டும்’ என்றும், வெல்லங்கிரி சுப்ரமணியம் அவர்கள் ‘மிகவும் அருமை’ என்றும், சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன் அவர்கள் ‘மிகவும் அருமையான பதிவு, நன்றி, மகிழ்ச்சி’ என்றும் பின்னூட்டமிட்டிருந்தார்கள்.

அத்தனையும் அருமை. அருமையிலும் அருமை. வெகு சிறப்பாக இருந்தது.

இவை அனைத்தும் கொடுத்த உற்சாகத்தில் அமைந்ததே ‘வாசகர்கள் எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா?’ என்ற இன்றையப் பதிவு.

மீண்டும் அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 35 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon