கடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும் விடியற்காலை பதிவுகளுக்கு வந்திருக்கும் பாராட்டுரை
உதயபாபு அவர்களின் பாராட்டு
‘கொரோனா’ உயிர் பயத்தில் காலம் தள்ளும் காலமிதில்
எடுத்த காயத்தை முடித்துக்காட்டிய
மன உறுதி! எனக்கு பாடமானது.
‘ஹலோ வித் காம்கேர்’
ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கவில்லை!
ஒரே ஒரு நாள் மட்டும்
சிஸ்டம் தவறி பதிவிட தாமதமான சூழல்
அதைக்கூட மொபைல் வழி முன்னதாக அறிவித்த
உங்களது சின்சியரிடி எனது மகளுக்கு பாடமானது.
டென்னிஸ் கிளாஸ் ஆன்லைன் கிளாஸ் செல்ல
தாமாதமாகும் நேரத்தில் சம்பந்த பட்டவர்களுக்கு
முன்னதாக தெரிவிக்கும் ‘டிசிப்ளினை’ எனது மகள் கற்றாள்.
உங்களது பதிவு எங்களுக்குள்
பொதுஅறிவு, சமூக சிந்தைனைகளை மட்டும் வளர்க்க வில்லை
தன்னைத்தானே செதுக்கும் உளியாக இருந்தது.
உங்களது பதிவிற்கு பின்னூட்டம் இடும்போது ‘ஜஸ்ட் லைக் தட்’
என கடந்துவிடமல் ஆழ்ந்து யோசிக்கும் திறனை வளர்த்தது.
தமக்காக கூட யோசிக்க தயங்கும் காலத்தில்
இந்த சமூகமிதற்காக யோசித்து,
ஆண்டு முழுவதும் அமுத சுரபியாய் உங்கள் பதிவு!
தினமும் காலை எழும்போது
நல்ல முகத்தில் விழிக்க வேண்டும் என்பர்
உங்களது பதிவே நன்முகமாய்!
ஆண்டு முழுவதும் ‘காம்கேர் மேம்’
(எழுத்துக்களுடன்) பயணிப்பதில் மகிழ்கிறோம்.
பெருமிதம் கொள்கிறோம் தொடருட்டும் சீறிய பணி.
அன்புடன்
உதயபாபு
டிசம்பர் 31, 2020
23 ஆண்டுகளாக பத்திரிகைப் பணியிலும்
10 ஆண்டுகளாக மகள்களுக்காக விளையாட்டுத்துறையிலும்!
கடுமையான உழைப்பாளி!
தன் மகள்களின் டென்னிஸ் மற்றும் பாக்ஸிங் ஸ்போர்ட்ஸ்
கனவுகளுக்காக தன்னையும் ஸ்போர்ட்ஸில் ஈடுபடுத்திக்கொண்டவர்!
மகளுக்காக தானும் டென்னிஸ் கற்று
பயிற்சியாளராக இருந்து டென்னிஸ் ‘கோச்’ ஆனவர்!
மகள்களை தங்கள் கனவில் ஜெயிக்க வைக்க
தன் கனவின் எல்லைகளை சுருக்கிக்கொண்டவர்!
இவருடன் இணைந்து இவர் மனைவியும்
இவரின் முயற்சிகளுக்கு
பக்கபலமாக இருப்பது இவர் பெற்ற வரம்!
என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும்போது
‘மேம்’ என்கின்ற மரியாதை
அடைமொழி இல்லாமல் எழுதியதே இல்லை.
Hats off you Sir!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software