தினம் ஒரு புத்தக வெளியீடு[3]: கொண்டாட்ட நாள்-3

தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி –  கொண்டாட்டம் –  நாள் 3!

நாள்: மார்ச் 1,  2021

இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.

சிறப்பு விருந்தினர்: உயர்திரு. கே.எஸ்.சுரேஷ் குமார்

சிறப்பு விருந்தினர் குறித்து!

இவர்  கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இன்ஜினியர். போடிநாயகனூரில் சொந்தமாக கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கேபிள் டிவி செயல்பாட்டாராகவும் இயங்கி வருகிறார். வாசிப்பதில் அலாதி பிரியம் உள்ளவர். ஃபேஸ்புக்கில் இவரது பதிவுகள் மூலம் இவரது  இலக்கிய ஆர்வமும்  சமூக கண்ணோட்டமும் என்னை வியக்க வைக்கிறது. சமூக வலைதளங்கள் பலரது  திறமைகளை வெளி உலகுக்குக் காட்டுவது தொழில்நுட்பத்தின் சாகசங்களுள் ஒன்று. ஆரவாரமின்றி பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். இனி வரும் காலங்களில் இவர் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இனி இவரின் உரை இவரது வார்த்தைகளில்…

//தினம் ஒரு புத்தக வெளியீடு’ – Virtual Event.

மேடை நிகழ்ச்சிகள் சாத்தியமாகாத ஊரடங்கு நேரங்களில் கிளவுட் மீட்டிங் எனும் ஜூம், கூகிள் போன்ற இணைய நேரலைகள் மூலம் இலக்கிய சந்திப்புகள் நிகழ்ந்தன.. இப்போது அடுத்தகட்டமாக  ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’என்று விர்ச்சுவல் ஈவெண்ட் என்று சொல்லக்கூடிய மெய்நிகர் நிகழ்வு மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார் காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்கள்.

கே.புவனேஸ்வரி மேடம் பற்றி பெரிதும் அறிமுகம் ஏதும் தேவையில்லை. தொலைக்காட்சி ஊடகம் வாயிலாகவும், கணினி சம்மந்தமான புத்தகங்கள் வாயிலாகவும் பரவலாக அறியப்படுபவர். கம்ப்யூட்டர் என்ற ‘சொல்’ நம் மக்களிடம் பரிச்சயம் ஆவதற்கு முன்னரே சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி, தமிழகத்தில் முதன் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய பெண்மணி என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.  அந்த வகையில் இவர் மென்பொருளுக்கு ஒரு பயனியர். இவர் மூலம் கணினி வழி பயனடைந்தோர் பலர். கணினியின் முதல் சில்லு 8088, அது 286,386,486 என்று வளந்து இன்றைக்கு நவீன சில்லுங்கள் பத்தாவது ஜெனெரேசன் என எங்கேயோ வளர்ந்து நிற்கிறது. இந்த அசுர வளர்ச்சியில் இன்றைக்கும் அதே துறையில் தாக்குப்பிடித்து நிற்பது சாதாரணம் அல்ல என்பது இந்த துறையில் உள்ளவர்களுக்குத் தெரியும்.

2000 வருடம் சென்னையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் சில்வருடங்கள் இருந்தேன்.  இவரது நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்வதற்காகச் செல்லும்போது அறிமுகம். சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் சிடிக்கள் தயாரித்தல் என அப்போதே பரபரப்பாக இருக்கும் இவரது நிர்வாகம். நான் அறிந்த வகையில் இவர் ஏதேனும் ஒரு புதிய முயற்சியை செய்துகொண்டே இருப்பார். அதனால்தான் நிறுவனம் தொடங்கி 28 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் இன்றுவரை அதே உற்சாகத்துடன் செயல்பட முடிகிறது என நினைக்கிறேன். கன்ஸிஸ்டன்ஸி எனும் தொடர்ந்து இயங்குதல் பலருக்கு பல துறைகளில் சாத்தியமாவதில்லை. சிலர் சில பல வருடங்களில் வேறு ரூட் மாறுவதும் உண்டு. அந்தவகையில் இவரது கன்ஸிஸ்டன்ஸி நமக்கு முன்மாதிரி.

இதோ இப்போது இவர் எடுத்திருக்கும் ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ என்ற திட்டமும் முற்றிலும் வித்தியாசமான முயற்சி மட்டுமில்லாமல், டிஜிட்டல் உலகில் புத்தம் புதிய புதுமையான முயற்சி. ஆன்லைனில் இவரது சமூகவலைதளப் பக்கங்களையும், காம்கேர் டிவி யு-டியூப் சேனலையும் மேடையாக்கியுள்ளார்.

இந்த தினம் ஒரு புத்தக வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடும் புதிய முயற்சியை காம்கேர் கே. புவனேஸ்வரி அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதன்படி புத்தகக் காட்சி நடக்கும் 14 நாட்களும் தினம் ஒரு நூலாக 14 புத்தகங்களை வெளியிட திட்டமிட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள புத்தகக் காட்சியில் இதுவரை வாழ்க்கையின் அப்பிடைசர், வாழ்க்கையின் OTP, வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்!, குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்,எந்தப் பாதையில் உங்கள் பயணம்? என 5 இ-புத்தகங்களை அமேசானில் வெளியிட்டுள்ளார்.

இதுபோல 14 நாட்களுக்கும் 14 புத்தகங்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம். இ-புத்தகம்.

எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் இவர் வெளியிடும் வாழ்வியல் நெறிகளையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த நூல்களை வாங்கி படித்து உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கும் கை மாற்றி விடுங்கள். நிச்சயம் அவர்களுக்கு இது  பொக்கிஷம்.

கிண்டிலில் கிடைக்கிறது. கிண்டிலில் அனுகூலங்கள் என்னவென்றால், அதில் ஒருமுறை ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டால் ஆயுசுக்கும் இருக்கும். முக்கியமாக இரவல் கொடுத்து திரும்ப வரவில்லையே என்கிற கவலை இல்லை  பக்கம் கிழிந்து போனது என்ற கவலையோ ரீடிங் க்ளாஸ் அனிந்தால்தான் வாசிக்க முடியும் என்று கட்டாயமில்லை. பார்வைத்திறனுக்கு ஏற்ப ஜூம் செய்து வாசிக்கலாம். தடித்தடி புத்தகத்தை சுமக்கவேண்டியிருக்காது. எந்த புத்தகம் என்றாலும் அது கிண்டிலின் எடைதான். அல்லது உங்கள் மொபைலின் எடைதான்.

இவரது ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ என்ற முயற்சியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.

கே.எஸ்.சுரேஷ் குமார்
மார்ச் 1, 2021 //

காம்கேர் டிவியில் இவரது உரை: கே.எஸ்.சுரேஷ் குமார் உரை

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon