தினம் ஒரு புத்தக வெளியீடு[4]: கொண்டாட்ட நாள்-4

தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி –  கொண்டாட்டம் –  நாள் 4!

நாள்: மார்ச் 5,  2021

இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.

சிறப்பு விருந்தினர்: உயர்திரு. சரோஜா ரகுநாதன்

சிறப்பு விருந்தினர் குறித்து! 

இவர் அமேசான் ஆப், அமேசான் டெஸ்க்டாப் வெர்ஷன், கிண்டில் ஆப் என அத்தனையையும் கையாள்கிறார். அச்சுப் புத்தகங்கள் வாசிக்கும் அதே ஈடுபாட்டுடன் இ-புத்தகங்களையும் வாசிக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் என வியக்க வேண்டாம். இவர் வயது 65. எட்டாம் வகுப்பே படித்துள்ளார். இவருடைய பிள்ளைகள் இவருக்கு தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்ததால் யாருடைய உதவியும் இன்றி இவரே தனித்துவமாக எல்லாவற்றையும் கையாள்கிறார்.

என்னுடைய விடியற்காலை பதிவின் தீவிர வாசகி இவர். உற்சாகத்துடன் Sooooooper Madam என இரண்டு வார்த்தைகளில் பின்னூட்டமிடுவதில் இவரது உற்சாகம் கொப்பளிக்கும். அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ளும்.

இதோ இப்போது ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ திட்டம் குறித்து வாசகர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சொன்னதும் வாயால் பேசி ரெகார்ட் செய்து அனுப்பி உள்ளார். மேலும் நான் அமேசானில் புத்தகம் வெளியிட்டு ஃபேஸ்புக்கில் தகவல் கொடுத்த அரை மணிக்குள் புத்தகம் வாங்கியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி தகவல் கொடுத்துவிடுவார்.

தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்துகொண்ட இவரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. அன்பு நன்றிகள் மேடம்.

இனி இவரின் உரை இவரது வார்த்தைகளில்:

// எனக்கு காம்கேர் புவனேஸ்வரி மேடத்தை கொஞ்ச காலமாகத்தான் தெரியும். முதல் முறை அவருடைய கட்டுரையைப் படித்தபோது எனக்கு எப்படி இருந்தது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. அனுபவித்தால்தான் தெரியும். இவரது அனுபவங்கள் வியக்க வைக்கிறது. தினம் ஒரு புத்தக வெளியீடு மிகவும் அருமை. அந்த திட்டத்தின் கீழ் வெளியிடும் கருத்துக்கள் அப்பப்பா சான்சே இல்லை. மனதை ஊடுருவிச் செல்கிறது. மொத்தத்தில் இவருடைய சொல் செயல் சிந்தனை எல்லாம் நல்லதையே நினைப்பதால் என்னைப் பொருத்தவரை நல்ல வைப்ரேஷன் கிடைக்கிறது. அவருடைய எழுத்தின் கோணத்தில் புதுமையாக சிந்திக்க வைக்கிறது. நான் உங்கள் வாசகியாக இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி மேடம்!

சரோஜா ரகுநாதன்
மார்ச் 5, 2021//

இவருடைய குரலிலேயே இவரது உரை: சரோஜா ரகுநாதன் உரை

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO

Compcare Software
மார்ச் 5, 2021

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon